1897
1897 (MDCCCXCVII) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1897 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1897 MDCCCXCVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1928 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2650 |
அர்மீனிய நாட்காட்டி | 1346 ԹՎ ՌՅԽԶ |
சீன நாட்காட்டி | 4593-4594 |
எபிரேய நாட்காட்டி | 5656-5657 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1952-1953 1819-1820 4998-4999 |
இரானிய நாட்காட்டி | 1275-1276 |
இசுலாமிய நாட்காட்டி | 1314 – 1315 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 30 (明治30年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2147 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4230 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 4 - பெனினில் பிரித்தானியப் படை ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. இது பின்னர் பெனினின் மீது பிரித்தானியரின் தாக்குதலுக்கு வழிகோலியது.
- ஜனவரி 24 - சுவாமி விவேகானந்தர் சிக்காகோவிலிருந்து நாடு திரும்பும் வழியில் யாழ்ப்பாணம் வருகை தந்தார். யாழ் இந்துக் கல்லூரியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பெப்ரவரி 2 - பென்சில்வேனியாவின் தலைநகர் ஹரிஸ்பேர்க் தீயினால் அழிந்தது.
- பெப்ரவரி 9 - பெனினின் மீது பிரித்தானியர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
- பெப்ரவரி 10 - மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.
- மார்ச் 11 - எரிவெள்ளி ஒன்று அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவில் வீழ்ந்து வெடித்ததில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- மே 18 - அயர்லாந்து எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிறாக்குலா புதினம் வெளியிடப்பட்டது.
- மே 19 - அயர்லாந்து எழுத்தாளர் ஒஸ்கார் வைல்ட் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.
- ஆகஸ்ட் 30 - மடகஸ்காரில் அம்பிக்கி நகரை பிரான்ஸ் கைப்பற்றியது.
- செப்டம்பர் 1 - வட அமெரிக்காவின் முதலாவது சுரங்கத் தொடருந்துப் பாதை பொஸ்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 11 - எதியோப்பியாவின் மன்னர் இரண்டாம் மெனெலிக்கின் தளபதிகள் பல மாதத் தேடுதலின் பின்னர் காஃபா பேரரசின் கடைசி மன்னன் காக்கி செரோச்சோவைப் பிடித்தனர். காஃபா பேரரசு முடிவுக்கு வந்தது.
- செப்டம்பர் 20 - கிரேக்கமும் துருக்கியும் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
தேதி அறியப்படாதவை
தொகு- computer கணினி என்ற சொல் முதற் தடவையாக பயன்பாட்டுக்கு வந்தது.
- இலத்திரன் ஜெ. ஜெ. தாம்சன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- வைத்திய விசாரணி என்ற மாத இதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை என்பவாரால் வெளியிடப்பட்டது.
- சென்னையில் முதல் நகரும் படக்காட்சி திரையிடப்பட்டது.
- கோணேஸ்வரா இந்துக்கல்லூரி திருகோணமலையில் ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புகள்
தொகு- ஜனவரி 23 - சுபாஷ் சந்திர போஸ், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் (இ. 1945)
- பெப்ரவரி 8 - ஜாகீர் உசேன், இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
- மே 11 - சுத்தானந்த பாரதியார், கவியோகி (இ. 1990)
- மே 11 - ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (இ. 1985)
- ஆகஸ்ட் 11 - எனிட் பிளைட்டன், எழுத்தாளர் (இ. 1968)
- செப்டம்பர் 17 - வில்லியம் கொபல்லாவ, இலங்கையின் ஆளுநர், முதலாவது ஜனாதிபதி (இ. 1981)
- அக்டோபர் 9 - எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)
- அக்டோபர் 15 - முடிகொண்டான் வெங்கடராம ஐயர், கருநாடக இசைக் கலைஞர் (இ. செப்டம்பர் 13 1975)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 26 - பெ. சுந்தரம் பிள்ளை, எழுத்தாளர் (பி. 1855)
- மார்ச் 15 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (பி. 1814)