வில்லியம் கோப்பல்லாவ

(வில்லியம் கொபல்லாவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வில்லியம் கோபல்லாவ (William Gopallawa, சிங்களம்: විලියම් ගොපල්ලව, செப்டம்பர் 17, 1897 - சனவரி 30, 1981) இலங்கையின் முதலாவது சனாதிபதியாவார். இவர் 1958–1961 காலப்பகுதியில் சீனாவுக்கான இலங்கைத் தூதுவராகவும், 1961–1962 காலப்பகுதியில் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கான தூதுவராகவும் செயலாற்றினார். 1962–1972 வரையில் இலங்கையின் மகாதேசாதிபதியாகப் பதவி வகித்தார். 1972 இல் இலங்கை குடியரசான போது, இவர் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1978 ஆம் ஆண்டில் இலங்கையின் யாப்பு மாற்றப்பட்டு சனாதிபதி நேரடி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படும் பதவியாக மாற்றப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதியான போது இவர் ஓய்வுபெற்றார்.

வில்லியம் கோப்பல்லாவ
இலங்கையின் 1வது சனாதிபதி
பதவியில்
22 மே 1972 – 4 பிப்ரவரி 1978
பின்னவர்ஜே. ஆர். ஜயவர்தனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1897-09-17)17 செப்டம்பர் 1897
மாத்தளை, இலங்கை
இறப்புசனவரி 30, 1981(1981-01-30) (அகவை 83)
துணைவர்சீலாவதி (ரம்புக்வெல்ல) கோப்பலாவ

இவரது மகன், மொண்டி கோப்பல்லாவவும் இலங்கை அரசியலில் ஈடுப்பட்டவராவார்.

அரசு பதவிகள்
முன்னர்
இலங்கை சனாதிபதி
1972–1978
பின்னர்
முன்னர்
ஒலிவர் குணதிலக்க
மகாதேசாதிபதி
1962–1972
பின்னர்
ஒழிக்கப்பட்டது
அரசியல் பதவிகள்
முன்னர்
Houari Boumédienne
அணிசேரா நாடுகள் அமைப்பின் தலைமைச் செயாலாளர்
1976–1978
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_கோப்பல்லாவ&oldid=3787926" இலிருந்து மீள்விக்கப்பட்டது