கண்டி ஒப்பந்தம்

கண்டி ஒப்பந்தம் (Kandyan Convention) என்பது மார்ச் 2 1815ம் ஆண்டு இலங்கை கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமானதும் கண்டி மன்னன் சார்பில் பிரதானிகளும், பிரித்தானியர் சார்பில் தளபதி பிரவுண்றிக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இது வரலாற்றில் முக்கியம் இடம் பெறுகின்றது.

கண்டி ஒப்பந்தம்
Kandyan Convention
Kandyan Convention.jpg
கண்டி ஒப்பந்தத்தின் மூலப் பிரதி
உருவாக்கம் 1815
கையெழுத்திட்டது 2–18 மார்ச் 1815
இடம் தலதா மாளிகை, கண்டி, கண்டி இராச்சியம்
நிலை கண்டி அரசன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் பதவி நீக்கம்
கையெழுத்திட்டோர் 12
தரப்புகள் 2
மொழிகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம்

முக்கிய அம்சங்கள்தொகு

 
கண்டி ஒப்பந்ததில் கையெழுத்திட்டோர்

1815 கண்டி ஒப்பந்தத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான அம்சங்களாவன

  • கண்டியரசன் தன்னுரிமையை இழந்துவிட்டான். கண்டி இராச்சியம் பிரித்தானியர் வசமாயிற்று. இதுவரை கண்டியில் காணப்பட்ட பிரதானிகளின் அதிகாரங்களும் உரிமைகளும் தொடர்ந்தும் பேணப்படும்
  • கண்டி இராச்சியத்தின் வெளிநாட்டு வர்த்தகம் பிரித்தானிய தேசாதிபதியின் கீழ் நேரடியாக நிர்வகிக்கப்படும்.
  • இறைவரி, ஏனையவரிகளைப் பேணும் உரிமை பிரித்தானியருக்கே உண்டு
  • கண்டி மக்கள் பின்பற்றிய பௌத்த மதமும், அதன் சட்டங்களும் வழிபாட்டு இடங்களும் தொடர்ந்தும் பாதுகாக்கப்படும். இதன் மூலம் கண்டி தலதா மாளிகையின் தனித்துவம் பேணப்பட்டதுடன் பௌத்த மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டன.

உசாத்துணைதொகு

  • மெண்டிஸ், ஜீ. சி. (1969). "நம்முன்னோரளித்த அருஞ்செல்வம், 3ம் பாகம்". கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பனி. 25 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
  • புன்னியாமீன் பீ. எம்., - வரலாறு ஆண்டு 11 கண்டி சிந்தனை வட்டம், 1998

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டி_ஒப்பந்தம்&oldid=3365461" இருந்து மீள்விக்கப்பட்டது