தலதா மாளிகை

தலதா மாளிகை என்பது இலங்கையின் கண்டி நகரில் உள்ள புகழ் பெற்ற பௌத்த ஆலயம் ஆகும். பௌத்த சமயத்தவர்களால் உயர்வாக மதிக்கப்படுகின்ற புத்தரின் புனிதப் பல் இங்கே வைக்கப்பட்டிருப்பதன் காரணமாக இது புனித தந்த தாது ஆலயம் எனவும் அழைக்கப்படுகின்றது. 1592 தொடக்கம் 1815 வரை இருந்த கண்டி இராச்சியத்தின் தலைநகரமாகக் கண்டி நகரம் விளங்கியது. அதனை ஆண்டு வந்த அரசர்களின் அரண்மனை வளாகத்தின் உள்ளேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது.[1]

தலதா மாளிகை
Zahntempel Kandy.jpg
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்7°17′38″N 80°38′19″E / 7.29389°N 80.63861°E / 7.29389; 80.63861ஆள்கூறுகள்: 7°17′38″N 80°38′19″E / 7.29389°N 80.63861°E / 7.29389; 80.63861
சமயம்பௌத்தம்
இணையத்
தளம்
http://www.sridaladamaligawa.lk
கட்டிடக்கலை தகவல்கள்
நிருவனர்முதலாம் விமலதர்மசூரியன்
நிறைவுற்ற ஆண்டு1595
அளவுகள்
தலதா மாளிகை - கண்டி, இலங்கை

இலங்கையிலுள்ள முக்கியமான பௌத்த பீடங்களான மல்வத்தை பீடம், அஸ்கிரிய பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த பீடாதிபதிகள் ஆண்டுக்கு ஒருவராகச் சுழற்சி முறையில் இதன் உள் மண்டபத்தில் நாளாந்த கிரியைகளை நடத்தி வருகிறார்கள். காலை, மதியம், மாலை என நாளொன்றுக்கு மூன்று தடவைகள் கிரியைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமையும் புனிதப்பல் "நனுமுரா மாங்கல்யா" என்றழைக்கப்படும் நறுமணப்பூக்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்ட நீரால் நீராட்டப்படுகிறது. குணமாக்கும் திறன் கொண்டதாகக் கருதப்படும் இந்தப் புனிதநீர் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. SRI DALADA MALIGAWA Temple

வெளியிணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri Dalada Maligawa
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலதா_மாளிகை&oldid=2973204" இருந்து மீள்விக்கப்பட்டது