சூலை 3
நாள்
(ஜூலை 3 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 3 (July 3) கிரிகோரியன் ஆண்டின் 184 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 185 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 181 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் லிசீனியசை வென்றார். லிசீனியசு பைசாந்தியத்துக்குத் தப்பி ஓடினார்.
- 987 – இயூ காப்பெட் பிரான்சின் மன்னராக முடிசூடினார். இவரது வம்சத்தினர் 1792 இல் பிரெஞ்சுப் புரட்சி இடம்பெறும் வரை பிரான்சை ஆண்டனர்.
- 1035 – முதலாம் வில்லியம் நோர்மண்டியின் கோமகனாக முடிசூடினார்.
- 1594 – அயூத்தியா-கம்போடியப் போர் (1591-1594) முடிவுக்கு வந்தது.
- 1608 – கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது.
- 1754 – ஏழாண்டுப் போர்: சியார்ச் வாசிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- 1767 – பிட்கன் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: சியார்ச் வாசிங்டன் மசாசுசெட்சில் அமெரிக்க விடுதலைப் படைக்குத் தலைமை தாங்கினார்.
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொன்றனர்.
- 1778 – புருசியா ஆஸ்திரியாவின் மீது படையெடுத்தது.
- 1844 – ஐசுலாந்தில் கடைசிச் சோடி பெரிய ஆக்கு பறவைகள் கொல்லப்பட்டன.
- 1848 – அமெரிக்கக் கன்னித் தீவுகளில் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
- 1849 – பிரான்சு உரோமைக் குடியரசு மீது படையெடுத்து திருத்தந்தை நாடுகளை மீள்வித்தது.
- 1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கெட்டிசுபெர்க்கு சண்டையின் கடைசி நாள்.
- 1866 – புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய-புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
- 1867 – தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- 1872 – 1823 இல் ஆரம்பிக்கப்பட்ட பட்டிக்கோட்டா குருமடம் யாழ்ப்பாணக் கல்லூரி என்ற பெயரில் வட்டுக்கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
- 1890 – ஐடஹோ ஐக்கிய அமெரிக்காவின் 43வது மாநிலமாக இணைந்தது.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் பிடியில் பிரெஞ்சுப் போர்க்கப்பல்கள் சிக்குவதைத் தடுக்க ஜிப்ரால்ட்டரில் இருந்து புறப்பட்ட பிரித்தானியப் போர்க் கப்பல்களால் தாக்கப்பட்டதில் பிரான்சின் மூன்று கப்பல்கள் 1200 கடற்படையினருடன் மூழ்கின.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: பெலருசின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் செஞ்சேனைப் படையினரால் நாட்சி செருமனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
- 1952 – புவேர்ட்டோ ரிக்கோவின் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது.
- 1969 – விண்வெளிப் போட்டி: சோவியத் ஒன்றியத்தின் என்1 என்ற ஏவூர்தி ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
- 1970 – வட அயர்லாந்து, பெல்பாஸ்ட் நகரில் போல்சு என்ற இடத்தில் ஐரிசு தேசியவாதிகளைத் தேடும் பணிக்காக 3 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. நூற்றுக்கணக்கானோர் பிரித்தானியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
- 1970 – பிரித்தானிய விமானம் எசுப்பானியாவில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.
- 1988 – அமெரிக்கப் போர்க் கப்பல் வின்செனசு பாரசிக வளைகுடா மீது பறந்த ஈரானிய பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதில் அதில் பயணம் செய்த அனைத்து 290 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2006 – பூமியில் இருந்து 432,308 கிமீ தூரத்தில் 2004 எக்சு.பி14 என்ற சிறுகோள் பறந்தது அவதானிக்கப்பட்டது.
- 2013 – எகிப்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது முர்சி இராணுவத்தினரால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
பிறப்புகள்
- 1782 – பியெரி பெர்தியர், பிரெஞ்சு புவியியலாளர் (இ. 1861)
- 1883 – பிரான்ஸ் காஃப்கா, செக்-ஆத்திரிய எழுத்தாளர் (இ. 1924)
- 1918 – எஸ். வி. ரங்கராவ், தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1974)
- 1920 – நா. சண்முகதாசன், ஈழத்தமிழ்த் தொழிற்சங்கவாதி, இடதுசாரி மாவோயிச அரசியல்வாதி (இ. 1993)
- 1923 – டி. ஆர். பாப்பா, தமிழக திரைப்பட இசையமைப்பாளர், வயலின் இசைக் கலைஞர் (இ. 2004)
- 1924 – செல்லப்பன் ராமநாதன், சிங்கப்பூரின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 2016)
- 1928 – எம். எல். வசந்தகுமாரி, கருநாடக இசைப் பாடகர் (இ. 1990)
- 1942 – அடூர் கோபாலகிருஷ்ணன், கேரளத் திரைப்பட இயக்குநர்
- 1948 – கோ. இளவழகன், தனித்தமிழ் இயக்கச் செயற்பாட்டாளர்
- 1949 – நெ. அப்துல் அஜீஸ், இந்திய அரசியல்வாதி
- 1952 – வசீம் ராஜா, பாக்கித்தானியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2006)
- 1962 – டாம் குரூஸ், அமெரிக்க நடிகர்
- 1971 – ஜூலியன் அசாஞ்சு, விக்கிலீக்ஸ் நிறுவனர்
- 1980 – அர்பஜன் சிங், இந்தியத் துடுப்பாளர்
- 1982 – கனிகா இந்திய நடிகை, பாடகி
- 1986 – கிரத்திக்கா தீர், இந்தியத் தொலைக்காட்சி நடிகை
- 1987 – செபாஸ்டியன் வெட்டல், செருமானிய மோட்டார் பந்தய வீரர்
இறப்புகள்
- 1904 – தியோடோர் எர்ட்செல், ஆசுத்திரிய ஊடகவியலாளர், நாடகாசிரியர் (பி. 1860)
- 1954 – எஸ். வி. சுப்பையா பாகவதர், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர், பாடகர்
- 1971 – ஜிம் மோரிசன், அமெரிக்கப் பாடகர் (பி. 1943)
- 1996 – ராஜ்குமார், இந்தித் திரைப்பட நடிகர் (பி. 1926)
சிறப்பு நாள்
மேற்கோள்கள்
- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 35