சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார். சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சபை அமைப்பின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூர் பிரதமர் ஆவார். “குடியரசுத் தலைவர்” என்ற அலுவலகப் பட்டம் பெரும்பாலும் ஒரு சடங்கு பட்டமாகவே கருதப்படுகிறது. 1993 ஆம் ஆண்டின் முன்பு, சிங்கப்பூர் ஜனாதிபதி பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார். 1991 இல் ஏற்பட்ட அரசியல் சாசன திருத்தங்களுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாயினார். சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் டெங் சியோங். 1991 ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்கு சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா ஆகும்.[1]

குடியரசுத் தலைவர்  சிங்கப்பூர் குடியரசு
Flag of the President of Singapore.svg
ஜனாதிபதியின் கொடி
தற்போது
ஹலிமா பின்தி யாகொப்

14 செப்டெம்பர் 2017 முதல்
வாழுமிடம்இஸ்தானா
பதவிக் காலம்ஆரு வருடங்கள்
முதல் குடியரசுத் தலைவர்யூசஃப் பின் ஈஷாக்
உருவாக்கப்பட்ட ஆண்டு9 ஆகஸ்து 1965
இணைய தளம்http://www.istana.gov.sg `

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு