யூசுப் இசாக்
யூசுப் இசாக் (ஆங்கிலம்: Yusof bin Ishak; மலாய்: Yusof bin Ishak Al-Haj; ஜாவி: يوسف بن عشاء; சீனம்: 尤索夫·宾·伊萨克); என்பவர் சிங்கப்பூரின் முதலாவது அதிபர். 1965-ஆம் ஆண்டில் இருந்து 1970-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூரின் அதிபராகப் பதவி வகித்தவர். அந்த நாட்டின் வரலாற்றில் முதல் அதிபர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.[1]
மேதகு யூசுப் இசாக் Yusof Ishak DUT SK DUBC PJG | |
---|---|
சிங்கப்பூரின் 1-ஆவது அதிபர் | |
பதவியில் 9 ஆகஸ்டு 1965 – 23 நவம்பர் 1970 | |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | பெஞ்சமின் சியர்ஸ் |
1-ஆவது யாங் டி பெர்துவா சிங்கப்பூரா | |
பதவியில் 16 செப்டம்பர் 1963 – 9 ஆகஸ்டு 1965 | |
ஆட்சியாளர் | பெர்லிஸ் புத்ரா |
பிரதமர் | துங்கு அப்துல் ரகுமான் |
முன்னையவர் | யாங் டி பெர்துவா சிங்கப்பூரா |
பின்னவர் | இப்போது இல்லை |
2-ஆவது யாங் டி பெர்துவா சிங்கப்பூரா | |
பதவியில் 3 டிசம்பர் 1959 – 16 செப்டம்பர் 1963 | |
ஆட்சியாளர்கள் | இரண்டாம் எலிசபெத் மலேசியாவின் முதல் அகோங் சுல்தான் இசாமுடின் ஆலாம் ஷா |
பிரதமர் | லீ குவான் யூ |
முன்னையவர் | சர் வில்லியம் கூட் |
பின்னவர் | இப்போது இல்லை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | யூசுப் பின் இசாக் அல்-ஹாஜ் 12 ஆகத்து 1910 பாடாங் காஜா, தெரோங், தைப்பிங், பேராக், மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு |
இறப்பு | 23 நவம்பர் 1970 சிங்கப்பூர் | (அகவை 60)
காரணம் of death | இதய செயலிழப்பு |
இளைப்பாறுமிடம் | கிராஞ்சி அரசக் கல்லறை |
தேசியம் | சிங்கப்பூரியர் |
துணைவர் | நூர் ஆயிஷா முகமது சலீம் (தி. 1949–1970) (பிற்ப்பு: 1933) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | விக்டோரியா பள்ளி இராபிள்ஸ் கல்லூரி |
வேலை |
|
இணையத்தளம் | http://www.istana.gov.sg/ |
அவர் பதவி ஏற்ற காலத்தில் அந்தப் பதவி யாங் டி பெர்துவா சிங்கப்பூரா என்று அழைக்கப் பட்டது. அதிபராவதற்கு முன்னர் இவர் சிங்கப்பூரில், நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளர். உத்துசான் மெலாயு (Utusan Melayu) எனும் மலாய் நாளிதழை உருவாகியவர்களில் ஒருவராகும். இந்த நாளிதழ் 2019 அக்டோபர் 9-ஆம் தேதி வரையில் புழக்கத்தில் இருந்தது.
1929-ஆம் ஆண்டில் இராபிள்ஸ் கல்லூரியில் (Raffles Institution) பட்டம் பெற்றார். 1932-ஆம் ஆண்டில், அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வார்த்தா மலாயா (Warta Malaya) எனும் பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டில் அந்தப் பத்திரிகையில் இருந்து வெளியேறி, உத்துசான் மெலாயு மலாய் நாளிதழைத் தோற்றுவித்தார்.[2]
பொது
தொகுயூசுப் இசாக் அவர்கள், சிங்கப்பூர் அரசாங்கத்தில் பல பொறுப்புகளை வகித்துள்ளார். 1948 முதல் 1950 வரை திரைப்பட மேல்முறையீட்டுக் குழுவில் (Film Appeal Committee) பணியாற்றினார்.
மேலும் இயற்கை இருப்புக் குழுவிலும் (Nature Reserves Committee); மற்றும் மலேசிய மயமாக்கல் ஆணையக் குழுவிலும் (Malayanisation Commission); உறுப்பினராகவும் இருந்துள்ளார். ஜூலை 1959-இல், அவர் சிங்கப்பூர் பொது சேவை ஆணையத்தின் (Public Service Commission) தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[3]
யாங் டி பெர்துவா சிங்கப்பூரா
தொகுசிங்கப்பூரில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது. பிறகு, அவர் 3 டிசம்பர் 1959-இல் சிங்கப்பூரின் யாங் டி பெர்துவா சிங்கப்பூரா எனும் அப்போதைய அதிபர் பதவியை ஏற்றார்.[4]
1965-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த பிறகு, யூசுப் இசாக், சிங்கப்பூரின் முதல் அதிபரானார். யூசப் இசாக், 23 நவம்பர் 1970-இல் இதய செயலிழப்பால் இறக்கும் முன்னர், மூன்று முறை அதிபர் பதவியில் இருந்தார்.
1999-இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கப்பூர் நாணயத் தாள்களில் (Singapore Portrait Series Currency Notes) அவரின் உருவப்படம் பதிக்கப்பட்டு உள்ளது.
வாழ்க்கை வரலாறு
தொகுயூசுப் இசாக் 1910-ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ஆம் தேதி கம்போங் பாடாங் காஜா (Padang Gajah), தெரோங், தைப்பிங், பேராக், மலேசியாவில் பிறந்தவர். அப்போது மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பு (Federated Malay States) (இன்றைய மலேசியா) என்று அழைக்கப்பட்டது.
ஒன்பது பேர் கொண்ட குடும்பத்தில் யூசுப் இசாக் மூத்த மகன். அவரின் தந்தையார் மினாங்கபாவ் வம்சாவழியைச் சேர்ந்தவர். தாயார் இந்தோனேசியா லங்காட் பகுதியைச் சேர்ந்தவர்.
அவரின் தந்தை, இசாக் பின் அகமது, ஓர் அரசு ஊழியர். மலாய் மாநிலங்களின் கூட்டமைப்பில் மீன்வளத் துறையின் செயல் இயக்குநராகப் பதவி வகித்தார்.
இங்கிலாந்து மகாராணியார் கல்வி உதவிநிதி
தொகுபேராக், கோலா குராவில் உள்ள மலாய்ப் பள்ளியில் தன் ஆரம்பக் கல்வியைப் பெற்றார். 1921-இல் தைப்பிங் கிங் எட்வர்ட் VII பள்ளியில் (Taiping King Edward VII School) தன் ஆங்கிலப் படிப்பைத் தொடர்ந்தார்.
பின்னர் அவரின் தந்தை சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டார். அதனால் அவர் 1923-இல் சிங்கப்பூர் விக்டோரியா பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1924-இல், அவர் தன் இடைநிலைக் கல்விக்காக ராபிள்ஸ் கல்வி நிலையத்தில் (Raffles Institution) சேர்ந்தார்.
யூசுப் இசாக் தன் கேம்பிரிட்ஜ் பள்ளிச் சான்றிதழை (Cambridge School Certificate) 1927-இல் சிறப்புத் தகுதிகளுடன் பெற்றார். மேலும் அவர் இங்கிலாந்து மகாராணியார் கல்வி உதவிநிதியையும் (Queen's Scholarship) பெற்றார். அதன் பின்னர் ராபிள்ஸ் கல்வி நிலையத்தில் 1929 வரை அவரின் படிப்பு நீடித்தது.[2]
பத்திரிகையாளர்
தொகு1929-இல் ராபிள்ஸ் கல்வி நிலையத்தில் பட்டம் பெற்ற பிறகு, யூசுப் இசாக் ஒரு பத்திரிகையாளராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். 1932-ஆம் ஆண்டில், அந்தக் காலத்தில் மிகவும் புகழ்பெற்ற வார்த்தா மலாயா (Warta Malaya) எனும் பத்திரிகையில் செய்தியாளராகச் சேர்ந்தார்.[6]
இருப்பினும் கருத்து வேறுபாடுகளினால் அங்கு இருந்து விலகினார். 1939-இல் தன் நண்பர்களுடன் இணைந்து உத்துசான் மெலாயு (Utusan Melayu) நாளிதழைத் வெளியிட்டார்.[7]
சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு
தொகுசிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation of Singapore), ஜப்பானிய நாளிதழான பெரித்தா மலாய் (Berita Malai) வெளியிட வேண்டி இருந்ததால், உத்துசான் மெலாயு நாளிதழை அச்சிடப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை ஜப்பானியர்கள் கைப்பற்றிக் கொண்டனர். அதனால் உத்துசான் மெலாயு நாளிதழை நிறுத்த வேண்டி வந்தது.
யூசுப் இசாக் பின்னர் தைப்பிங்கிற்குத் திரும்பிச் சென்றார். தன்னிடம் இருந்த மீதிப் பணத்தில், ஓர் உணவுக் கடையைத் திறந்தார். 1945-இல் போர் முடிவடைந்து மீண்டும் உத்துசான் மெலாயு நாளிதழைத் தொடங்கும் வரை தைப்பிங் பகுதியிலேயே வாழ்ந்தார்.
ஐக்கிய மலாய் தேசியவாத அமைப்பு
தொகு1957-இல், யூசுப் இசாக் கோலாலம்பூருக்கு குடிபெயர்ந்தார். பிப்ரவரி 1958-இல், உத்துசான் மெலாயுவின் தலைமையகமும் கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது. போருக்குப் பிந்தைய காலத்தில், மலாய்க்காரர்கள் பலர் பிரித்தானியரிடம் இருந்து மலாயாவிற்குச் சுதந்திரம் பெற விரும்பினார்கள்.
யூசுப் இசாக் அவர்களும், தன் வெளியீடுகளின் மூலம் மலாயாவிற்குச் சுதந்திரம் கிடைப்பது பற்றிய தன் ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார். இதற்கு இடையில் 1946-இல் ஐக்கிய மலாய் தேசியவாத அமைப்பு (UMNO) உருவானது.
கொள்கை வேறுபாடுகள்
தொகுஇருப்பினும், யூசுப் இசாக்கின் மக்களாட்சிக் கொள்கைகள் வேறுபட்டவை. மலாயாவில் முடியாட்சியை மீண்டும் நிலைநாட்டுவது அம்னோவின் நிலைப்பாடாக இருந்தது. அதன் விளைவாக உத்துசான் மெலாயு நிறுவனத்திற்குள் பதட்டங்கள் அதிகரித்தன. அதனால் 1959-இல், உத்துசான் மெலாயு நிறுவனத்தில் யூசுப் இசாக் வைத்திருந்த பங்குகளை விற்றுவிட்டு பத்திரிகைத் தொழிலையும் ராஜினாமா செய்தார்.[7]
1959-ஆம் ஆண்டு சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி பெரும்பான்மையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, யூசுப் இசாக், சிங்கப்பூரின் யாங் டி பெர்துவான் நெகாராவாக நியமிக்கப்பட்டு, 1959 டிசம்பர் 3-ஆம் தேதி பதவியேற்றார். அவர் யாங் டி பெர்துவான் நெகாராவாக பொறுப்பேற்ற காலத்தில், சிங்கப்பூர் இன மோதல்களால் பிளவுபட்டு இருந்தது.[8]
நல்லிணக்கப் பிரசாரங்கள்
தொகுஅதனால் பன்முகக் கலாசாரத்தைத் தீவிரமாக ஊக்குவித்தார். மக்களின் நம்பிக்கையை மீட்டு எடுக்க அனைத்து இன மக்களையும் அணுகினார். நல்லிணக்கப் பிரசாரங்களைச் செய்தார். நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்.[9]
1965-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அது ஒரு சுதந்திர நாடாக மாறியது. யாங் டி பெர்துவான் நெகாரா (Yang di-Pertuan Negara) எனும் பதவி நீக்கப்பட்டு அதிபர் (President of Singapore) எனும் புதிய பதவி உருவாக்கப்பட்டது. யூசுப் இசாக், சிங்கப்பூரின் முதல் அதிபரானார்.[10]
யூசுப் இசாக் மூன்று முறை அதிபர் பதவியில் இருந்தார். நவம்பர் 23, 1970 இல் அவருக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டு, தன்னுடைய 60-ஆவது வயதில் காலமானார்.[11][12]
குடும்பம்
தொகுயூசுப் இசாக் அவர்களின் மனைவியின் பெயர் புவான் நூர் ஆயிஷா (Puan Noor Aishah). 1933-ஆம் ஆண்டில் பிறந்தவர். இப்போது வயது 89. புவான் நூர் ஆயிஷா தன் கணவரின் பொதுச் சேவைகளை இன்றும் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்.
மூன்று பிள்ளைகள்:
- ஆர்கிட் கமாரியா பிந்தி யூசுப் (Orkid Kamariah) (மகள்);
- பாபா இம்ரான் பின் யூசுப் (Baba Imran bin Yusof) (மகன்);
- சூரியானா பிந்தி யூசுப் (Zuriana binti Yusof) (மகள்).
விருதுகள்
தொகுசிங்கப்பூர் விருதுகள்
தொகு- துமாசிக் விருது (Order of Temasek), 1st Class[13]
- மகிமை விருது (Sijil Kemuliaan), 1st Class
- சிறந்த பக்தி விருது (Darjah Utama Bakti Cemerlang), 1st Class
- சிறப்புமிக்க சேவைப் பதக்கம் (Pingat Jasa Gemilang), 1st Class
அனைத்துலக விருதுகள்
தொகு- ஸ்ரீ மகாராஜா மாங்கு நெகாரா (Seri Maharaja Mangku Negara) (மலேசியா)[14][15]
- மன்னர் மகுடப் பதக்கம் 1961 (Pingat Kemahkotaan) (சிலாங்கூர்)
- புரூணை அரசப் பதக்கம் (Darjah Kerabat Laila Utama) (புரூணை), 1st Class[14]
- செயிண்ட் ஜான் விருது (Knight of the Order of St John) (ஐக்கிய இராச்சியம்)[16]
நினைவிடங்கள்
தொகு- யூசுப் இசாக் மேல்நிலைப் பள்ளி - Yusof Ishak Secondary School – சிங்கப்பூரில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு அவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது. 1966 ஜூலை 29-இல் அப்போதைய பிரதமர் லீ குவான் யூவால் திறந்து வைக்கப்பட்டது
- யூசுப் இசாக் பள்ளிவாசல் - Masjid Yusof Ishak – சிங்கப்பூர், ஊட்லண்ட்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலுக்கு அவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
- தென்கிழக்கு ஆசிய ஆய்வுகள் நிறுவனம் - (ISEAS) அதிகாரப் பூர்வமாக ஆகஸ்டு 2015-இல் ISEAS-Yusof Ishak நிறுவனம் என மறுபெயரிடப்பட்டது.
- சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் யூசப் இசாக் இல்லம் - Yusof Ishak House in National University of Singapore
மேற்கோள்கள்
தொகு- ↑ "Yusof bin Ishak (born: 12 August 1910, Padang Gajah, Trong, Perak – died: 23 November 1970, Singapore), commonly referred to as Yusof Ishak, became Singapore's first president on 9 August 1965 when gained independence as a sovereign state". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
- ↑ 2.0 2.1 "Encik Yusof Ishak". Istana Singapore. Archived from the original on 11 April 2016. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ "Yusof Head of State. The Straits Times, p. 1. Retrieved from NewspaperSG". 2 December 1959. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
- ↑ Seet, K. K. (2000). The Istana (pp.88–89). Singapore: Times Editions. Call no.: RART 725.17095957 IST; Singapore rejoices. (4 December 1959). The Straits Times, p. 1
- ↑ "The Singaporean Yusof Bin Ishak". The Singaporean. Archived from the original on 17 April 2016. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ "First issue of Warta Malaya (1930–1942) is published – Singapore History". History SG. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ 7.0 7.1 Kuntom., Ainon (1973). Malay newspapers, 1876–1973: A historical survey of the literature (pp. 27–32). Archived from the original on 19 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
{{cite book}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Yusof Ishak: The man and his passions". AsiaOne. 25 August 2014. Archived from the original on 25 April 2016. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ State of Singapore. Government Gazette. Extraordinary. (G.N. 62, p.1055). Singapore. 3 December 1959. Archived from the original on 19 September 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ "Straits Times: Iseas to be named after Yusof Ishak on Aug 12". Ministry of Foreign Affairs Singapore. Archived from the original on 15 April 2016. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ "Cabinet pays last respects". The Straits Times, (Retrieved from NewspaperSG). 24 November 1970. Archived from the original on 20 April 2016. பார்க்கப்பட்ட நாள் 6 April 2016.
- ↑ "Yusof Ishak". www.roots.sg (in ஆங்கிலம்). National Heritage Board (Singapore). பார்க்கப்பட்ட நாள் 8 November 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Orders and Medals of Yusof Ishak". 31 July 1965. Archived from the original on 14 February 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2018.
- ↑ 14.0 14.1 Omar, Marsita (2016). "Yusof bin Ishak". eresources.nlb.gov.sg. Infopedia / National Library Board, Singapore. Archived from the original on 6 May 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
- ↑ "Senarai Penuh Penerima Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan Tahun 1963" (PDF). Archived (PDF) from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 August 2018.
- ↑ "Yusof made Knight of St. John". Archived from the original on 10 February 2018. பார்க்கப்பட்ட நாள் 23 April 2018.
மேலும் காண்க
தொகு- "Yusof Ishak". ISTANA Singapore : Office of the President of the Republic of Singapore, Government of Singapore. 28 April 2006. Archived from the original on 2 June 2011. பார்க்கப்பட்ட நாள் 20 September 2007.