குருதித்தேக்க இதயத் திறனிழப்பு

இதயத் திறனிழப்பு (Heart failure, HF), அல்லது குருதித்தேக்க இதயத் திறனிழப்பு (congestive heart failure, CHF) அல்லது இதயத்தசை திறனிழப்பு (congestive cardiac failure, CCF), என்பது உடலின் குருதியோட்டத்திற்கு உதவுகின்ற எக்கியாக இதயம் செயற்படத் தவறுதலால் ஏற்படும் நோயறிகுறிகளின் தொகுப்பாகும்; தனது கட்டமைப்பு அல்லது செயற்பாட்டு குறைபாட்டால் இதயம் தன் ஒவ்வொரு இதயத் துடிப்பின் போதும் குருதியால் நிரப்பாமலும் அல்லது வெளியேற்றாமலும் இருப்பதால் இந்த அறிகுறிகளும் உணர்குறிகளும் ஏற்படுகின்றன.[12][13][14] மூச்சுத் திணறல், சோர்வாக உணர்தல், கால் வீக்கம் பொதுவான அறிகுறிகளாக உள்ளன.[4] உடற்பயிற்சியின்போது மூச்சுத் திணறல் கடுமையாக இருக்கும்; படுத்திருக்கும்போதும் மூச்சுத் திணறல் அதிகமாகி இரவில் விழிப்பேற்படுத்தக் கூடும்.[4] உடற்பயிற்சி செய்யும் திறன் குறைவதும் பொதுவான இயல்பாகும்.[15] மார்பு நெரிப்பு உள்ளிட்ட நெஞ்சு வலி பொதுவாக இதயத் திறனிழப்பால் ஏற்படுவதில்லை.[16]

இதயத் திறனிழப்பு
ஒத்தசொற்கள்குருதித்தேக்க இதயத் திறனிழப்பு (CHF), குருதித்தேக்க இதயத்தசை திறனிழப்பு (CCF)[1][2]
குருதித்தேக்க இதயத் திறனிழப்புள்ள நோயாளியின் கழுத்துப் பெருஞ்சிரை வெளியேற்றம். வெளிப்புர கழுத்துப் பெருஞ்சிரை அம்புக்குறியிடப்பட்டுள்ளது.
சிறப்புஇதயவியல்
அறிகுறிகள்மூச்சுத் திணறல், சோர்வாக உணர்தல், காலில் நீர் கோர்ப்பு[3][4]
கால அளவுவழமையாக வாழ்நாள் முழுமையும்
காரணங்கள்மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், சீரற்ற இதயத் துடிப்பு, கூடிய மதுப் பயன்பாடு, நோய்த்தொற்று, இதயச் சேதம்[4][5]
சூழிடர் காரணிகள்புகை பிடித்தல், உடலசைவற்ற வாழ்க்கைமுறை, பிறர் புகை அணுக்கம்[6]
நோயறிதல்மீயொலி இதயவரைவு[7]
ஒத்த நிலைமைகள்சிறுநீரக செயலிழப்பு, தைராய்டு நோய், கல்லீரல் நோய், இரத்தசோகை, உடற்பருமன்[8]
மருந்துசிறுநீரிறக்கிகள், இதயநோய் மருந்துகள்[7][9]
நிகழும் வீதம்40 மில்லியன் (2015),[10] வளர்ந்த நாடுகளில் வயது வந்தோரில் 1–2% [5][11]
இறப்புகள்முதலாமாண்டில் இறப்பிற்கான வாய்ப்பு 35% [4]

காரணங்கள்

தொகு

இதயத் திறனிழப்பிற்கான பொதுவான காரணங்களாக குருதி ஊட்டக்குறை இதய நோய், முந்தைய மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம், ஏட்ரியக் குறு நடுக்கம், இதய அடைப்பிதழ் நோய், கூடிய மதுப் பயன்பாடு, நோய்த்தொற்று, மற்றும் காரணமறியா இதயத் தசைநோய் ஆகியன உள்ளன.[4][5] இவை இதயத்தின் அமைப்பில் அல்லது செயற்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத் திறனிழப்பிற்கு வித்திடுகின்றன.[4] இடது இதயக் கீழறை திறனிழப்புகள் இருவகையாக வகைபடுத்தப்பட்டுள்ளன – குறைந்த பகுதி வெளியேற்றம் (HFrEF), கேடுறா பகுதி வெளியேற்றம் (HFpEF) – இவை இடது இதயக் கீழறையின் சுருங்குதன்மை, இளப்பாற்றுகை எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கொண்டு அமையும்.[4] இதயத் திறனிழப்பின் தீவிரம் எந்தளவில் பயிற்சி செய்யவியலும் என்பதைக் கொண்டு கணிக்கப்படுகின்றது.[8]

இதயத் திறனிழப்பும் மாரடைப்பும் இதய நிறுத்தமும் வெவ்வேறானவை. மாரடைப்பு இதயத்திற்கு குருதி வழங்கும் தமனியில் ஏற்படும் உறைகட்டிகளால் ஓட்டம் தடைபட்டு இதயத்தசையின் சில பகுதிகள் இறப்பதால் ஏற்படுவதாகும். இதய நிறுத்தத்தில் இதயம் முழுமையாக செயலிழந்து இரத்தவோட்டம் நிற்பதாகும்.[17][18] இதயத் திறனிழப்பின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகள் கொண்ட பிற நோய்கள் உடற் பருமன், சிறுநீரகச் செயலிழப்பு, கல்லீரல் நோய்கள், குருதிச்சோகை, தைராய்டு நோய்கள் ஆகியன.[8] எனவே நோயறிகுறிகள், உடற் பரிசோதனை, மீயொலி இதயவரைவு ஆகியன கொண்டு அறுதியீடு செய்யப்படுகின்றது.[7] குருதிப் பரிசோதனைகள், இதய துடிப்பலைஅளவி, மற்றும் நெஞ்சக கதிர்வீச்சு ஒளிப்படம் ஆகியன அடிப்படைக் காரணத்தை தீர்மானிக்கப் பயன்படும்.[7]

சிகிச்சைகள்

தொகு

இதற்கான சிகிச்சை நோயின் தீவிரத்தையும் அடிப்படைக் காரணத்தையும் சார்ந்துள்ளது.[7] நெடுநாள் நிலைத்த மிதமான இதயத் திறனிழப்பு நோயாளிகளுக்கு வாழ்க்கைமுறை மாற்றங்கள், (புகைநிறுத்தம், உடற் பயிற்சி, உணவுப் பழக்க மாற்றங்கள்) மருந்துகள் தரப்படுகின்றன.[9][19] இடது இதயக் கீழறை குறைபாடுள்ளோருக்கு ஏசிஈ தடுப்பான்பான்கள், ஆஞ்சியோட்டன்சின் ஏற்பி அடைப்பான்கள், வால்சர்டன்கள்,பீட்டா அடைப்பான்கள் போன்ற மருந்துகள் தரப்படுகின்றன.[7][20] தீவிரநிலை நோயாளிகளுக்கு அட்ரீனல் சுரப்பு இயக்குநீர் எதிர்மருந்துகள், நைட்ரேட் உடன் ஐட்ராலசைன் ஆகியன பயன்படுத்தலாம்.[7] சிறுநீரிறக்கிகள் நீர்ச் சேமிப்பை தடுத்து மூச்சிறைச்சலை கட்டுப்படுத்தப் பயனாகின்றன.[9] சில நேரங்களில், காரணத்தை முன்னிட்டு, செயற்கை இதயமுடுக்கி அல்லது பதிக்கக்கூடிய இதய துடிப்படக்கி பரிந்துரைக்கப்படலாம்.[7] மேலும் சிலருக்கு இதய மீயொத்தியைவு சிகிச்சை (CRT) தரப்படலாம்.[21] சிலருக்கு இதய சுருங்குதிறன் பண்பேற்றம் பயனாகலாம்.[22] இந்த சிகிச்சைகளுக்குப் பிறகும் குணமடையாதவர்களுக்கு கீழறை உதவி கருவியோ (இடது, வலது, அல்லது இரண்டு கீழறைகளுக்கும்), அல்லது அரிதாக இதய மாற்றோ பரிந்துரைக்கப்படலாம்.[9]

நோய்ப் பரவல்

தொகு

இதயத் திறனிழப்பு மிகவும் பரவலான, விலையுயர்ந்த, இறப்புக்கு வாய்ப்புள்ள நோய்.[23] மூத்த குடிமக்களில் மருத்துவமனையில் சேர்க்கப்படும், மீளவும் அனுமதிக்கப்படும் நோய்களில் முதன்மையான காரணமாக இந்நோய் விளங்குகின்றது.[24][25] 2015இல் உலகளவில் இது ஏறத்தாழ 40 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.[10] ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 2% மூத்தோர் இதயத் திறனிழப்பால் அவதியுறுகின்றனர்.[23] இவர்களில் 65 அகவைக்கு மேலானவர்களில் இது 6–10% ஆக உயர்ந்து உள்ளது.[5][26] இந்த வீதங்கள் கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[23] அறுதியாக நோயறிந்த முதலாமாண்டில் இறப்பு வீதம் ஏறத்தாழ 35% ஆகவும் இரண்டாமாண்டில் எஞ்சியிருப்போரில் 10%க்கு குறைவாகவும் உள்ளது.[4] இந்த அளவிலான இறப்பு வாய்ப்பு சில புற்றுநோய்களை ஒத்துள்ளது.[4] ஐக்கிய இராச்சியத்தில், அவசரநிலை மருத்துவமனை சேர்க்கைகளில் 5% இந்நோயாக உள்ளது.[4] இதயத் திறனிழப்பு பண்டைக்காலங்களிலேயே அறியப்பட்டிருந்தது. கி.மு 1550 ஆண்டிலேயே எபர்சு பாபிரசு இதனைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்..[15]

மேற்கோள்கள்

தொகு
  1. Harrison RN, Daly L (2011). A Nurse's Survival Guide to Acute Medical Emergencies (in ஆங்கிலம்). Elsevier Health Sciences. p. 26. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7020-4900-2.
  2. "Congestive heart failure (CHF)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 November 2018.
  3. "Living Well With Chronic Heart Failure" (PDF). Heart Foundation. p. 18. Archived from the original (PDF) on 22 திசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 மே 2014.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 National Clinical Guideline Centre (UK) (August 2010). Chronic heart failure: National clinical guideline for diagnosis and management in primary and secondary care: Partial update. National Clinical Guideline Centre. pp. 19–24. PMID 22741186.
  5. 5.0 5.1 5.2 5.3 "Heart failure". Lancet 365 (9474): 1877–89. 2005. doi:10.1016/S0140-6736(05)66621-4. பப்மெட்:15924986. 
  6. "Secondhand Smoke Exposure is Associated with Prevalent Heart Failure: Longitudinal Examination of the National Health and Nutrition Examination Survey". Nicotine & Tobacco Research (ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் on behalf of the Society for Research on Nicotine and Tobacco) 23 (9): 1512–1517. July 2021. doi:10.1093/ntr/ntab047. பப்மெட்:34213549. 
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 7.6 7.7 Chronic Heart Failure: National Clinical Guideline for Diagnosis and Management in Primary and Secondary Care: Partial Update. National Clinical Guideline Centre. Aug 2010. pp. 34–47. PMID 22741186.
  8. 8.0 8.1 8.2 Chronic Heart Failure: National Clinical Guideline for Diagnosis and Management in Primary and Secondary Care: Partial Update. National Clinical Guideline Centre. Aug 2010. pp. 38–70. PMID 22741186.
  9. 9.0 9.1 9.2 9.3 Chronic Heart Failure: National Clinical Guideline for Diagnosis and Management in Primary and Secondary Care: Partial Update. National Clinical Guideline Centre. Aug 2010. pp. 71–153. PMID 22741186.
  10. 10.0 10.1 GBD 2015 Disease and Injury Incidence and Prevalence Collaborators (October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282. 
  11. "2016 ESC Guidelines for the diagnosis and treatment of acute and chronic heart failure: The Task Force for the diagnosis and treatment of acute and chronic heart failure of the European Society of Cardiology (ESC). Developed with the special contribution of the Heart Failure Association (HFA) of the ESC". European Journal of Heart Failure 18 (8): 891–975. August 2016. doi:10.1002/ejhf.592. பப்மெட்:27207191. https://orbi.uliege.be/bitstream/2268/205777/1/2016%20ESC%20Guidelines%20for%20the%20diagnosis%20and%20treatment%20of%20acute%20and%20chronic%20heart%20failure.pdf. 
  12. "2016 ESC Guidelines for the diagnosis and treatment of acute and chronic heart failure: The Task Force for the diagnosis and treatment of acute and chronic heart failure of the European Society of Cardiology (ESC)Developed with the special contribution of the Heart Failure Association (HFA) of the ESC.". Eur Heart J 37 (27): 2129–2200. 2016. doi:10.1093/eurheartj/ehw128. பப்மெட்:27206819. https://www.ncbi.nlm.nih.gov/entrez/eutils/elink.fcgi?dbfrom=pubmed&tool=sumsearch.org/cite&retmode=ref&cmd=prlinks&id=27206819. 
  13. National Guideline Centre (UK) (2018). "Chronic Heart Failure in Adults: Diagnosis and Management". National Institute for Health and Care Excellence: Clinical Guidelines. பப்மெட்:30645061. 
  14. "2013 ACCF/AHA guideline for the management of heart failure: a report of the American College of Cardiology Foundation/American Heart Association Task Force on practice guidelines.". Circulation 128 (16): e240-327. 2013. doi:10.1161/CIR.0b013e31829e8776. பப்மெட்:23741058. 
  15. 15.0 15.1 McDonagh TA (2011). Oxford textbook of heart failure. Oxford: Oxford University Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-957772-9.
  16. O'Connor CM (2005). Managing Acute Decompensated Heart Failure a Clinician's Guide to Diagnosis and Treatment. London: Informa Healthcare. p. 572. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-203-42134-5.
  17. Willard & Spackman's occupational therapy. Philadelphia: Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins. 2014. p. 1124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4511-1080-7.
  18. The Cardiac Care Unit Survival Guide. Lippincott Williams & Wilkins. 2012. p. 98. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4511-7746-6.
  19. "Exercise-based cardiac rehabilitation for adults with heart failure". The Cochrane Database of Systematic Reviews 1: CD003331. January 2019. doi:10.1002/14651858.CD003331.pub5. பப்மெட்:30695817. 
  20. "2016 ACC/AHA/HFSA Focused Update on New Pharmacological Therapy for Heart Failure: An Update of the 2013 ACCF/AHA Guideline for the Management of Heart Failure: A Report of the American College of Cardiology/American Heart Association Task Force on Clinical Practice Guidelines and the Heart Failure Society of America". Circulation 134 (13): e282–93. September 2016. doi:10.1161/CIR.0000000000000435. பப்மெட்:27208050. 
  21. "2012 ACCF/AHA/HRS focused update of the 2008 guidelines for device-based therapy of cardiac rhythm abnormalities: a report of the American College of Cardiology Foundation/American Heart Association Task Force on Practice Guidelines and the Heart Rhythm Society. [corrected]". Circulation 126 (14): 1784–800. October 2012. doi:10.1161/CIR.0b013e3182618569. பப்மெட்:22965336. 
  22. "New devices in heart failure: an European Heart Rhythm Association report: developed by the European Heart Rhythm Association; endorsed by the Heart Failure Association". Europace 16 (1): 109–28. January 2014. doi:10.1093/europace/eut311. பப்மெட்:24265466. 
  23. 23.0 23.1 23.2 "Heart failure". Lancet 390 (10106): 1981–1995. October 2017. doi:10.1016/S0140-6736(17)31071-1. பப்மெட்:28460827. 
  24. Retrum J.H., Boggs J., Hersh A., et al Patient-identified factors related to heart failure readmissions. Circ. Cardiovasc. Qual. Outcomes. 2013;6(2):171-177. எஆசு:10.1161/CIRCOUTCOMES.112.967356
  25. Roger VL, Go AS, Lloyd-Jones DM, Benjamin EJ, Berry JD, Borden WB, Bravata DM, Dai S, Ford ES, Fox CS, Fullerton HJ, Gillespie C, Hailpern SM, Heit JA, Howard VJ, Kissela BM, Kittner SJ, Lackland DT, Lichtman JH, Lisabeth LD, Makuc DM, Marcus GM, Marelli A, Matchar DB, Moy CS, Mozaffarian D, Mussolino ME, Nichol G, Paynter NP, Soliman EZ, Sorlie PD, Sotoodehnia N, Turan TN, Virani SS, Wong ND, Woo D, Turner MB; American Heart Association Statistics Committee and Stroke Statis-tics Subcommittee. Heart disease and stroke statistics–2012 update: a re-port from the American Heart Association. Circulation. 2012;125:e2–e220
  26. "ESC Guidelines for the diagnosis and treatment of acute and chronic heart failure 2008: the Task Force for the Diagnosis and Treatment of Acute and Chronic Heart Failure 2008 of the European Society of Cardiology. Developed in collaboration with the Heart Failure Association of the ESC (HFA) and endorsed by the European Society of Intensive Care Medicine (ESICM)". European Heart Journal 29 (19): 2388–442. October 2008. doi:10.1093/eurheartj/ehn309. பப்மெட்:18799522.  Also at எஆசு:10.1016/j.ejheart.2008.08.005

வெளி இணைப்புகள்

தொகு
வகைப்பாடு
வெளி இணைப்புகள்