துமாசிக் விருது

சிங்கப்பூரின் இரண்டாவது மதிப்புமிக்க தேசிய விருது

துமாசிக் விருது (ஆங்கிலம்: Order of Temasek; மலாய்: Darjah Utama Temasek); என்பது சிங்கப்பூரின் இரண்டாவது மதிப்புமிக்க தேசிய விருது ஆகும். 1962-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

துமாசிக் விருது
Order of Temasek
துமாசிக் விருது
விருது வழங்குவதற்கான காரணம்சிறந்த சேவை
நாடு சிங்கப்பூர்
வழங்குபவர்சிங்கப்பூர் அரசு
வெகுமதி(கள்)இரண்டாவது உயர்ந்த தேசிய விருது
வெகுமதி தொகை
80,000
சிங்கப்பூர் டாலர்
முதலில் வழங்கப்பட்டது1962
இணையதளம்சிங்கப்பூர் துமாசிக் விருது

சிங்கப்பூர் குடிமக்களுக்கு மட்டும் சிங்கப்பூர் அதிபரால் வழங்கப்படும் மிகவும் உயரிய விருது. சில சிறப்புச் சூழ்நிலைகளில், குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் இந்த விருது வழங்கப்படலாம்.[1]

பொது தொகு

2019 ஜூலை 29-ஆம் தேதி நிலவரப்படி, துமாசிக் விருது மூன்று வெவ்வேறு தரங்களைக் கொண்டுள்ளது:[2]

  • துமாசிக் விருது (உயர் சிறப்பு) - Order of Temasek (High Distinction)
  • துமாசிக் விருது (சிறப்பு) - Order of Temasek (Distinction)
  • துமாசிக் விருது

வரலாறு தொகு

எந்த ஒரு நேரத்திலும் 12 பேருக்கு மேல், உயர் சிறப்பு துமாசிக் விருது பெறுவது அனுமதிக்கப் படக்கூடாது என்று விருது விதிகள் கூறுகின்றன. ஆனால் சில சிறப்புச் சூழ்நிலைகளில், குடிமக்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் உயர் சிறப்பு துமாசிக் விருதுகளுக்கு வரையறை இல்லை.

2020-ஆம் ஆண்டு ஆகஸ்டு நிலவரப்படி, உயர் சிறப்பு துமாசிக் விருது (Order of Temasek (With High Distinction) பெற்றவர்கள் 8 பேர் உள்ளனர். மற்ற துமாசிக் சிறப்பு விருது; துமாசிக் விருது; ஆகிய இரண்டு விருதுகள் பெற்றவர்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை.[1][3]

இந்த விருது, முதன்முதலில் 1962-இல் தோற்றுவிக்கப்பட்டது. இது மிக முக்கியமான ஒரு தேசியக் கௌரவமாகும். விருது பெற்றவர்களின் பட்டியலில் பன்னிரண்டு உறுப்பினர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

பிந்தாங் துமாசிக் தொகு

சிங்கப்பூர் பிரதமரின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூர் யாங் டி பெர்துவான் நெகாரா எனும் சிங்கப்பூர் அதிபர் இந்த விருதை வழங்குகிறார்.[4]

பிந்தாங் துமாசிக் (துமாசிக்கின் நட்சத்திரம்) எனும் விருது, (ஆங்கிலம்: Star of Temasek; மலாய்: Bintang Temasek) 1970-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் மற்ற அனைத்து விருதுகள்; பதக்கங்களின் தரவரிசையில், துமாசிக் விருது இரண்டாவது மிக முக்கியமான தேசிய விருதாக மாறியது.[5]

விருது பெற்றவர்கள் தொகு

ஆண்டு தகுதி பெறுநர் குறிப்பு வேறு
1962 லிம் கிம் சான் சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர்; வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் [3]
1963 அகமத் பென் பெல்லா அல்ஜீரியாவின் பிரதமர் [6]
1967 இசாகு சாத்தோ ஜப்பானியப் பிரதமர்
1972 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) இரண்டாம் எலிசபெத் ஐக்கிய இராச்சியத்தின் மகாராணியார் [3]
1972 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) இளவரசர் பிலிப்பு ஐக்கிய இராச்சியத்தின் இளவரசர் [7][8]
1974 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சு அதிபர் [9]
1985 (உயர் சிறப்பு) கோ கெங் சுவீ முன்னாள் சிங்கப்பூர் துணைப் பிரதமர் [3][10]
1990 (உயர் சிறப்பு) சி. இராசரத்தினம் முன்னாள் சிங்கப்பூர் துணைப் பிரதமர் [3]
(உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) அசனல் போல்கியா புரூணை சுல்தான்
1993 (உயர் சிறப்பு) வீ கிம் வீ முன்னாள் சிங்கப்பூர் அதிபர் [11]
1999 (உயர் சிறப்பு) யோங் புங் அவ் முன்னாள் சிங்கப்பூர் தலைமை நீதிபதி
2005 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) துவாங்கு சையது சிராஜுடின் யாங் டி பெர்துவான் அகோங் மலேசியா
2007 (சிறப்பு) தனபாலன் சுப்பையா முன்னாள் துமாசிக் ஹோடிங்ஸ் தலைவர்
2008 (சிறப்பு) சான் செக் கியோங் முன்னாள் சிங்கப்பூர் தலைமை நீதிபதி [12]
2009 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) கபுஸ் சாயித் அல் சாயித் ஓமான் சுல்தான்
2013 (உயர் சிறப்பு) செல்லப்பன் ராமநாதன் முன்னாள் சிங்கப்பூர் அதிபர் [13]
2014 (உயர் சிறப்பு) (கௌரவத் தகுதி) சுசீலோ பாம்பாங் இந்தோனேசியாவின் முன்னாள் அதிபர் [14]
2015 (உயர் சிறப்பு) தனபாலன் சுப்பையா முன்னாள் துமாசிக் ஹோடிங்ஸ் தலைவர்; அதிபர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் [15]
2018 (உயர் சிறப்பு) டோனி டான் முன்னாள் சிங்கப்பூர் அதிபர் [16]
2019 (சிறப்பு) ஜெ. ஒய். பிள்ளை அதிபர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் தலைவர் [17]
2020 (உயர் சிறப்பு) சண்முகம் ஜெயக்குமார் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் [18][19]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "Darjah Utama Temasek (The Order of Temasek) Rules 1996 - Singapore Statutes Online". sso.agc.gov.sg (in ஆங்கிலம்). Archived from the original on 22 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  2. "Darjah Utama Temasek (The Order of Temasek) (Amendment) Rules 2019 - Singapore Statutes Online". sso.agc.gov.sg (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Chern, Alphonsus (2015-08-13). "Singapore badges of honour". The Straits Times (in ஆங்கிலம்). Archived from the original on 14 August 2015. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
  4. "S'pore creates six awards". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  5. "Star of Temasek is new top national award". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  6. "Report From London: Review Of Events Leading To The Signing …". www.nas.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2021-12-22.
  7. "Prince Philip: Land Rover hearse and other personal touches at duke's funeral". BBC News. 2021-04-17. பார்க்கப்பட்ட நாள் 2021-04-17.
  8. "SUPER CLUB". New Nation (in ஆங்கிலம்). 4 August 1975. Archived from the original on 18 April 2021. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18 – via NewspaperSG. To date only the Queen of England and the Duke of Edinburgh have been conferred the Order of Temasek in 1972 - prior to the establishment of the Order of Nila Utama. This leaves only 10 'vacancies' in the 'super club' of the Order of Temasek, which is limited to only 12 persons.
  9. "Prime Minister (PM) Lee Kuan Yew and Mrs Lee posing for photograph with President Ferdinand Marcos of the Philippines and Mrs Imelda Marcos at state dinner at Malacanang Palace". National Archives of Singapore. Archived from the original on August 3, 2020. பார்க்கப்பட்ட நாள் August 3, 2020. .. the President conferring on PM Lee the Ancient Order of Sikatuna, rank of Rajah, and PM Lee giving him the Order of Temasek
  10. Jenny Tien Mui Mun (8 October 2002), Dr Goh Keng Swee, Singapore Infopedia, National Library, Singapore, archived from the original on 23 June 2008, பார்க்கப்பட்ட நாள் 15 May 2010.
  11. "FORMER PRESIDENT WEE KIM WEE RECEIVES THE ORDER OF TEMASEK (FIRST CLASS) FROM PRESIDENT ONG TENG CHEONG AT ISTANA STATE ROOM". National Archives of Singapore. 1993-11-03. பார்க்கப்பட்ட நாள் 2021-04-03.
  12. 2008 National Day Awards to recognise special contributions for Pedra Branca case 2008
  13. "S'pore former president S R Nathan conferred Order of Temasek, First Class". Channel NewsAsia. Archived from the original on 12 August 2013. பார்க்கப்பட்ட நாள் 11 August 2013.
  14. "Indonesia's President Yudhoyono awarded Order of Temasek by Singapore". The Straits Times. 3 September 2014. https://www.straitstimes.com/asia/se-asia/indonesias-president-yudhoyono-awarded-order-of-temasek-by-singapore. 
  15. Singapore, Prime Minister's Office (17 November 2018). "PMO - Recipients". Prime Minister's Office Singapore. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  16. "Former President Tony Tan tops list of National Day Awards recipients". Cheryl Lin. Singapore: Channel News Asia.
  17. hermes (2019-08-09). "Top honours for J.Y. Pillay who built up SIA, led GIC, MAS". The Straits Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  18. "Former DPM S Jayakumar heads list of National Day Award recipients". CNA (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
  19. Yuen-C, Tham (2020-08-09). "Nation's top civilian honour for Jayakumar". The Straits Times (in ஆங்கிலம்). Archived from the original on 9 August 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துமாசிக்_விருது&oldid=3695082" இலிருந்து மீள்விக்கப்பட்டது