ஜெ. ஒய். பிள்ளை

ஜோசப் யுபராஜ் மானுவல் பிள்ளை (Joseph Yubaraj Manuel Pillay), (பிறப்பு: 30 மார்ச்சு 1934), மலேசியாவின் கிலாங் நகரத்தில் பிறந்த இந்திய வம்சாவழித் தமிழர் ஆவார். இவர் இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் படித்தவர். 1972 முதல் 1976 வரை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் ஜெ. ஒய். பிள்ளை என்றும் அறியப்படுகிறார்.

ஜோசப் யுபராஜ் மானுவல் பிள்ளை
DUNU (First Class)
பிறப்புமார்ச்சு 30, 1934 (1934-03-30) (அகவை 90)
கிலாங் நகரம், பிரித்தானிய மலேசியா
படித்த கல்வி நிறுவனங்கள்லண்டன் இம்பீரியல் கல்லூரி
பணிசிங்கப்பூர் அதிபரின் ஆலோசகர்கள் குழுவின் தலைவர்

2001ஆம் ஆண்டு முதல் 2004 வரை சிங்கப்பூர் அதிபருக்கு ஆலோசனைகளை வழங்கும் குழுவின் உறுப்பினராக பணியாற்றியவர். 2005ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இக்குழுவின் தலைமை ஆலோசகராக பணியாற்றிவருகிறார்.[1]

சிங்கப்பூர் நாட்டின் சட்டங்களின்படி, அதிபர் நாட்டில் இல்லாதபோது அவரது அலுவலகப் பணிகளை அதிபரின் தலைமை ஆலோசகர்தான் கவனிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

மேற்கோள்கள் தொகு

  1. http://eresources.nlb.gov.sg/infopedia/articles/SIP_659_2005-01-06.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._ஒய்._பிள்ளை&oldid=1834365" இலிருந்து மீள்விக்கப்பட்டது