சுசீலோ பாம்பாங் யுதயோனோ
சுசீலோ பாம்பாங் யுதயோனோ (Susilo Bambang Yudhoyono, பிறப்பு: செப்டம்பர் 9, 1949), இந்தோனேசியாவின் இளைப்பாறிய இராணுவ அதிகாரியும் ஆறாவது தற்போதைய சனாதிபதியும் ஆவார். 2004 ஆண்டு நாட்டுத் தலைவர் தேர்தலில் இவர் அப்போது சனாதிபதியாக இருந்த மேகாவதி சுகர்ணபுத்திரியைத் தோற்கடித்து தேர்தலில் வென்றார். அக்டோபர் 20, 2004 இல் நாட்டின் தலவராகப் பதவியேற்றார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் நாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].
ஹாஜி சுசீலோ பாம்பாங் யுதயோனோ Susilo Bambang Yudhoyono | |
---|---|
இந்தோனேசியாவின் சனாதிபதி | |
பதவியில் 20 அக்டோபடர் 2004 – 20 அக்டோபடர் 2014 | |
துணை அதிபர் | யூசுப் காலா |
முன்னையவர் | மேகாவதி சுகர்ணபுத்திரி |
பின்னவர் | ஜோகோ விடோடோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 9 செப்டம்பர் 1949 திரெமாசு, பசிட்டான், இந்தோனேசியா |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | கிறிஸ்தியானி ஹேராவதி |
பிள்ளைகள் | ஆகுஸ் ஹரிமூர்த்தி எடி பாஸ்கோரோ |
வாழிடம் | மேர்டெக்கா அரண்மனை |
வேலை | இராணுவம் (இளைப்பாறியவர்) |
இணையத்தளம் | www.presidensby.info |
Military service | |
பற்றிணைப்பு | இந்தோனேசிய இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1973 – 2000 |
தரம் | ஜெனரல் |