தர்மன் சண்முகரத்தினம்

தர்மன் சண்முகரத்தினம் (Tharman Shanmugaratnam, பிறப்பு: 1957)) சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார்[1]. 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இவர் நாட்டின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சு பொறுப்புடன் கூடுதலாக மனிதவள அமைச்சராகவும் உள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் இவர் கல்வி அமைச்சராகவும் இருந்தார்[2].

தர்மன் சண்முகரத்தினம்
Tharman Shanmugaratnam at the official opening of Yuan Ching Secondary School's new building, Singapore - 20100716 (cropped).jpg
தொகுதி ஜுரொங் குழுத்தொகுதி (தமான் ஜுரொங்கு)
சிங்கப்பூரின் பிரதி தலைமை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
18 மே 2011
முன்னவர் வொங் கான் செங்
நிதி அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 திசம்பர் 2007
முன்னவர் லீ சியன் லூங்
கல்வி அமைச்சர்
பதவியில்
1 ஆகத்து 2003 – 1 ஏப்பிரல் 2008
முன்னவர் தொயோ சீ ஹீன்
பின்வந்தவர் ங்கு எங்கு ஹென்
நிதிக்கான இரண்டாவது அமைச்சர்
பதவியில்
2005 – திசம்பர் 2007
தனிநபர் தகவல்
பிறப்பு சிங்கப்பூர்
அரசியல் கட்சி மக்கள் செயல் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஜேன் யுமிக்கொ இட்டோகி
சமயம் இந்து

வாழ்க்கைச் சுருக்கம்தொகு

1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார்.

தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார்[3]. இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

அரசியலில்தொகு

தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் [4].

டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார்[1]. 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செய்ற்குழு உறுப்பினராகத் தெரிவானார்.

தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 Asha Popatlal (29 நவம்பர் 2007). "PM Lee to relinquish Finance Minister post, Tharman takes over". Channel News Asia (Singapore). Archived from the original on 30 நவம்பர் 2007. https://web.archive.org/web/20071130041800/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/314525/1/.html. 
  2. May Wong (29 March 2008). "PM Lee unveils cabinet changes". Channel News Asia (Singapore). Archived from the original on 31 மார்ச் 2008. https://web.archive.org/web/20080331133643/http://www.channelnewsasia.com/stories/singaporelocalnews/view/338040/1/.html. 
  3. "Try discipline with love - Acting Education Minister Tharman: My kids, their Mandarin and their future in China". The New Paper (Singapore). 9 June 2004. Archived from the original on 22 ஜனவரி 2008. https://www.webcitation.org/query?url=http://newpaper.asia1.com.sg/printfriendly/0,4139,64319,00.html&date=2008-01-22. "(The canes) are for his three sons, aged 10, 12 and 13 and an 8-year-old daughter; His lawyer-wife, Madam Jane Yumiko Ittogi, is of Japanese-Chinese parentage and can speak Teochew; Mr Tharman revealed that the Chinese translation of his name, Shang Da Man, was given by a language specialist in 1995." 
  4. The Government of Singapore (21 June 2006). "The Cabinet - Mr Tharman Shanmugaratnam".

வெளி இனைப்புகள்தொகு