தியோடோர் எர்ட்செல்

தியோடோர் எர்ட்செல் (Theodor Herzl, /ˈhɜːrtsəl, ˈhɛərtsəl/;[1] இடாய்ச்சு: [ˈhɛɐtsl̩]; எபிரேயம்: תאודור הֶרְצֵל Te'odor Hertsel; அங்கேரியம்: Herzl Tivadar; எபிரேயம்: בִּנְיָמִין זְאֵב),[2]; 2 மே 1860 – 3 சூலை 1904) என்பவர் ஆத்திரிய-அங்கேரிய ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். இவர் நவீன சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எர்ட்செல் உலக சியோனிச அமைப்பை உருவாக்கி பாலத்தீனத்தில் யூதர்களுக்கான நாடு ஒன்றை அமைக்கும் நோக்கோடு யூதர்களை பாலத்தீனத்தில் குடியேற்றப் பாடுபட்டார். யூத நாட்டை உருவாக்கும் முன்னர் இவர் இறந்து விட்டாலும், இன்றைய இசுரேலின் தந்தை என இவர் போற்றப்படுகிறார்.

தியோடோர் எர்ட்செல்
Theodor Herzl
Theodor Herzl.jpg
1897 இல் எர்ட்செல்
பிறப்புமே 2, 1860(1860-05-02)
பெசுட், அங்கேரி இராச்சியம், ஆத்திரியப் பேரரசு
இறப்பு3 சூலை 1904(1904-07-03) (அகவை 44)
ஆத்திரியா-அங்கேரி
கல்லறை1904–1949: வியன்னா
1949–இன்று: எர்சில் மலை, எருசலேம்
31°46′26″N 35°10′50″E / 31.77389°N 35.18056°E / 31.77389; 35.18056
இருப்பிடம்வியன்னா
குடியுரிமைஆத்திரியா-அங்கேரி
கல்விசட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர், நாடகாசிரியர், எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுபுதிய அரசியல் சியோனிசத்தின் தந்தை
வாழ்க்கைத்
துணை
யூலி நாசாவர் (1889-1904)
கையொப்பம்

இசுரேலிய விடுதலைச் சாற்றுரையில் எர்ட்செல் "யூத அரசின் ஆன்மிகத் தந்தை" எனவும்,[3] அரசியல் சியோனிசத்திற்கு ஒரு உறுதியான, நடைமுறைப்படுத்தும் தளம் மற்றும் கட்டமைப்பைக் கொடுத்த தீர்க்கதரிசி எனவும் குறிப்பிட்டுக் கூறப்படுகிறார்.[4][5]

மேற்கோள்கள்தொகு

  1. "Herzl". Dictionary.com Unabridged. Random House. 17-10-2018 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |access-date= (உதவி)
  2. Esor Ben-Sorek (18-10-2015). "The Tragic Herzl Family History". Times of Israel. At his brit mila he was given the Hebrew name Binyamin Zeev Check date values in: |date= (உதவி)
  3. Israel Ministry of Foreign Affairs, Declaration of Establishment of State of Israel [1]
  4. Lehman-Wilzig, Sam N. "Proto-Zionism and its Proto-Herzl: The Philosophy and Efforts of Rabbi Zvi Hirsch Kalischer." Tradition: A Journal of Orthodox Jewish Thought 16.1 (1976): 56-76.
  5. Penkower, Monty N. "Religious Forerunners of Zionism." Judaism 33.3 (1984): 289.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோடோர்_எர்ட்செல்&oldid=3539387" இருந்து மீள்விக்கப்பட்டது