அடூர் கோபாலகிருஷ்ணன்
திரைப்பட இயக்குநர்
அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan, பிறப்பு: 1942 ஆம் ஆண்டு சூலை மாதம் 3ம் தேதி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார்.[1] இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
அடூர் கோபாலகிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 3 சூலை 1941 (அகவை 83) |
பணி | இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர் |
பாணி | Parallel Cinema |
விருதுகள் | Knight of the Legion of Honour, Commandeur des Arts et des Lettres |
இணையம் | http://www.adoorgopalakrishnan.com/profile.htm |
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.
படைப்புகள்
தொகுதிரைப்படங்கள்
தொகு- நிழல்குத்து (2002)
- கதாபுருஷன் (1996)
- விதேயன் (1994)
- மதிலுகள் (1990)
- அனந்தரம் (1987)
- முகாமுகம் (1984)
- எலிப்பத்தாயம் (1981)
- கொடியெட்டம் (1977)
- சுயம்வரம் (1972)
ஆவணப் படங்கள் / குறும்படங்கள்
தொகு- கலாமண்டலம் ராமன்குட்டி நாயர் (2005)
- கலாமண்டலம் கோபி (1999)
- சோழப் பாரம்பரியம் (1980)
- யக்ஷகானம் (1979)
- Past in Perspective (1975)
- குரு செங்கனூர் (1974)
- Towards National STD (1969)
- And Man Created (1968)
- Danger at Your Doorstep (1968)
- The Myth (1967)
- A Great Day (1965)
புத்தகங்கள்
தொகு- சினிமாவின் உலகம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன். மலையாளத்தில், சினிமாயுடே லோகம் என்று வெளிவந்து 1983ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற புத்தகம்)
- நிர்மால்யம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : மீரா கதிரவன்)
- எலிபத்தாயம் (தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர் : சுந்தர ராமசாமி)
மேற்கோள்கள்
தொகு- ↑ "அடூர் கோபாலகிருஷ்ணன் 80-வது பிறந்த நாள்: ஒரு படைப்பாளியின் மறுபக்கம்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-07.
வெளி இணைப்புகள்
தொகு- அடூரின் நிழல்குத்து திரைப்படம் பற்றி காலச்சுவடு இதழில் தியோடர் பாஸ்கரன் எழுதிய கட்டுரை பரணிடப்பட்டது 2007-08-22 at the வந்தவழி இயந்திரம்
- கெயாஸ்மேக் பரணிடப்பட்டது 2005-09-01 at the வந்தவழி இயந்திரம் என்ற திரைப்பட இதழில் அடூர் பற்றிய குறிப்பு பரணிடப்பட்டது 2005-09-08 at the வந்தவழி இயந்திரம்
- ஐஎம்டிபி தளத்தின் அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய செய்திகள்
- அடூர் கோபாலகிருஷ்ணன் தாதா சாகேப் பால்கே விருது பெற்றது குறித்த பி.பி.சி. தமிழ் வானொலிக் குறிப்பு
- கீற்று இதழில் சிகரங்களைத் தொட்ட அடூர் கோபாலகிருஷ்ணன் - கட்டுரை பரணிடப்பட்டது 2012-01-19 at the வந்தவழி இயந்திரம்