சுந்தர ராமசாமி
சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர்.[1] நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.
சுந்தர ராமசாமி (1931-2005) | |
---|---|
பிறப்பு | 1931 மே 30 நாகர்கோவில், தமிழ்நாடு |
இறப்பு | 2005 அக் 14 (வயது 74) கலிபோர்னியா அமெரிக்கா |
மற்ற பெயர்கள் | பசுவய்யா |
வாழ்க்கைத் துணை | கமலா |
பிள்ளைகள் | செளந்தரா,தைலா, கண்ணன் சுந்தரம், தங்கு |
வலைத்தளம் | |
https://sundararamaswamy.in |
இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.[2] தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த சாந்தி என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது.
இலக்கியச் செல்வாக்குகள்
தொகுஇவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் தாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட சாந்தி இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் சரஸ்வதி இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது.[3]
படைப்புகள்
தொகுநாவல்
தொகு- ஒரு புளியமரத்தின் கதை (1966)
- ஜே.ஜே. சில குறிப்புகள் (1981)
- குழந்தைகள் பெண்கள் ஆண்கள் (1998)
சிறுகதைகள்
தொகு- சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழு தொகுப்பு (2006)
விமர்சனம்/கட்டுரைகள்/மற்றவை
தொகு- ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும் (1991)
- ஆளுமைகள் மதிப்பீடுகள் (2004)
- காற்றில் கரைந்த பேரோசை
- விரிவும் ஆழமும் தேடி
- தமிழகத்தில் கல்வி: வே.வசந்தி தேவியுடன் ஒர் உரையாடல் (2000)
- இறந்த காலம் பெற்ற உயிர்
- இதம் தந்த வரிகள் (2002)
- இவை என் உரைகள் (2003)
- வானகமே இளவெயிலே மரச்செறிவே (2004)
- வாழ்க சந்தேகங்கள் (2004)
- புதுமைப்பித்தன்: மரபை மீறும் ஆவேசம்(2006)
- புதுமைப்பித்தன் கதைகள் சுரா குறிப்பேடு (2005)
- மூன்று நாடகங்கள் (2006)
- வாழும் கணங்கள் (2005)
கவிதை
தொகு- சுந்தர ராமசாமி கவிதைகள் முழு தொகுப்பு (2005)
மொழிபெயர்ப்பு
தொகு- செம்மீன் - தகழி சங்கரப்பிள்ளை(1962)
- தோட்டியின் மகன்(புதினம்) - தகழி சங்கரப்பிள்ளை(2000)
- தொலைவிலிருக்கும் கவிதைகள்(2004)
நினைவோடைகள்
தொகு- க.நா.சுப்ரமண்யம் (2003)
- சி.சு. செல்லப்பா (2003)
- கிருஷ்ணன் நம்பி (2003)
- ஜீவா (2003)
- பிரமிள் (2005)
- ஜி.நாகராஜன் (2006)
- தி.ஜானகிராமன் (2006)
- கு.அழகிரிசாமி.
சிறுகதைகள் பட்டியல்
தொகுசிறுகதைகள் | இதழ் | வருடம் |
---|---|---|
1.முதலும் முடிவும் | புதுமைப்பித்தன் மலர் | 1951 |
2.தண்ணீர் | சாந்தி | 1953 |
3.அக்கரை சீமையில் | சாந்தி | 1953 |
4.பொறுக்கி வர்க்கம் | சாந்தி | 1953 |
5.உணவும் உணர்வும் | 1955 | |
6.கோவில் காளையும் உழவு மாடும் | சாந்தி | 1955 |
7.கைக்குழந்தை | சரஸ்வதி | 1957 |
8.அகம் | சரஸ்வதி | 1957 |
9.அடைக்கலம் | சரஸ்வதி | 1958 |
10.செங்கமலமும் ஒரு சோப்பும் | சரஸ்வதி | 1958 |
11.பிரசாதம் | சரஸ்வதி | 1958 |
12.சன்னல் | சரஸ்வதி | 1958 |
13.லவ்வு | சரஸ்வதி | 1958 |
14.ஸ்டாம்பு ஆல்பம் | சரஸ்வதி | 1958 |
15.கிடாரி | சரஸ்வதி ஆண்டு மலர் | 1959 |
16.சீதைமார்க் சீயக்காய்த்தூள் | தாமரை பொங்கல் மலர் | 1959 |
17.ஒன்றும் புரியவில்லை | கல்கி தீபாவளி மலர் | 1960 |
18.வாழ்வும் வசந்தமும் | நவசக்தி வார இதழ் | 1960 |
19.ரயில் தண்டவாளத்தில் ஓடும் | கல்கி தீபாவளி மலர் | 1961 |
20.மெய்க்காதல் | கல்கி | 1961 |
21.மெய்+பொய்=மெய் | எழுத்து | 1962 |
22.எங்கள் டீச்சர் | கல்கி தீபாவளி மலர் | 1962 |
23.பக்த துளசி | இலக்கிய வட்டம் | 1964 |
24.ஒரு நாய், ஒரு சிறுவன், ஒரு பாம்பு | இலக்கிய வட்டம் | 1964 |
25.தயக்கம் | சுதேசமித்திரன் தீபாவளி மலர் | 1964 |
26.லீலை | கல்கி | 1964 |
27.தற்கொலை | கதிர் | 1965 |
28.முட்டைக்காரி | தீபம் | 1965 |
29.திரைகள் ஆயிரம் | தீபம் ஆண்டுமலர் | 1966 |
30.இல்லாத ஒன்று | கல்கி வெள்ளிவிழா ஆண்டுமலர் | 1966 |
31.காலிப்பெட்டி | உமா | |
32.அழைப்பு | ஞானரதம் | 1973 |
33.போதை | சதங்கை | 1973 |
34.பல்லக்குத் தூக்கிகள் | ஞானரதம் | 1973 |
35.வாசனை | ஞானரதம் | 1973 |
36.அலைகள் | கொல்லிப்பாவை | 1976 |
37.ரத்னாபாயின் ஆங்கிலம் | அக் | 1976 |
38.குரங்குகள் | யாத்ரா | 1978 |
39.ஓவியம் | யாத்ரா | 1979 |
40.பள்ளம் | சுவடு | 1979 |
41.கொந்தளிப்பு | மீட்சி | 1985 |
42.ஆத்மாராம் சோயித்ராம் | 1985 | |
43.மீறல் | இனி | 1986 |
44.இரண்டு முகங்கள் | வீடு | 1986 |
45.வழி | கொல்லிப்பாவை | 1986 |
46.கோலம் | கொல்லிப்பாவை | 1987 |
47.பக்கத்தில் வந்த அப்பா | புதுயுகம் | 1987 |
48.எதிர்கொள்ளல் | காலச்சுவடு | 1988 |
49.காணாமல் போனது | காலச்சுவடு | 1989 |
50.விகாசம் | இந்தியா டுடே | 1990 |
51.காகங்கள் | காலச்சுவடு ஆண்டுமலர் | 1991 |
52.மேல்பார்வை | இந்திய டுடே இலக்கிய ஆண்டுமலர் | 1994-1995 |
53.பட்டுவாடா | காலச்சுவடு | 1995 |
54.நாடார் சார் | தினமணி பொங்கல் மலர் | 1996 |
55.நெருக்கடி | சதங்கை | 1996 |
56.இருக்கைகள் | காலச்சுவடு | 1997 |
57.டால்ஸ்டாய் தாத்தாவின் கதை | தினமணி தீபாவளி மலர் | 1999 |
58.மயில் | ஆனந்த விகடன் பவழவிழா மலர் | 2002 |
59.பையை வைத்துவிட்டு போன மாமி | 2003 | |
60.தனுவும் நிஷாவும் | காலம் | 2004 |
61.களிப்பு | 2004 | |
62.நண்பர் ஜி.எம் | காலச்சுவடு | 2004 |
63.ஒரு ஸ்டோரியின் கதை | காலச்சுவடு | 2004 |
64.கூடி வந்த கணங்கள் | 2004 | |
65.கதவுகளும் ஜன்னல்களும் | புதியபார்வை | 2004 |
66.மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் | 2004 | |
67.அந்த ஐந்து நிமிடங்கள் | 2004 | |
68.ஈசல்கள் | 2004 | |
69.கிட்னி | 2004 | |
70.பிள்ளை கெடுத்தாள் விளை | காலச்சுவடு | 2005 |
71.கொசு, மூட்டை, பேன் | புதியபார்வை | 2005 |
72.ஜகதி | காலம் | 2005 |
சுந்தர ராமசாமி பெற்ற விருதுகள்
தொகுஇவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார்.[4]
- குமரன் ஆசான் நினைவு விருது
- இயல்விருது தமிழ் இலக்கியத் தோட்டம் 2001இல் வாழ்நாள் சாதனைக்காகப் பெற்றார்.[5]
- கதா சூடாமணி விருது (2004)[3]
சுந்தர ராமசாமி பெயரிலான விருதுகள்
தொகுதமிழ்க் கணிமைக்கான விருது
தொகுதமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார்.
இளம் படைப்பாளர் விருது
தொகுசுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும்.
மேற்கோள்
தொகு- ↑ "என் பார்வையில் சுந்தர ராமசாமியின் வாழ்க்கையும் இலக்கியமும்". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2020/feb/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3353311.html. பார்த்த நாள்: 21 May 2021.
- ↑ "சுந்தர ராமசாமி 10". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-05-21.
- ↑ 3.0 3.1 "உய்யநிலை நோக்கலாக புதினம்". The Hindu (India). 4 January 2004 இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050131225002/http://www.hindu.com/lr/2004/01/04/stories/2004010400220300.htm.
- ↑ "Sundara Ramaswamy dead". The Hindu (Chennai, India). 16 October 2005 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20051224004744/http://www.hindu.com/2005/10/16/stories/2005101604190400.htm.
- ↑ "2001 Iyal Award". Tamil Literary garden. பார்க்கப்பட்ட நாள் 26 July 2013.
வெளி இணைப்புகள்
தொகு- போதை ஏற்றாத கதை
- சு.ரா. இணையதளம்
- பசுவய்யாவின் சில கவிதைகள்
- Tamilnation.org - சுந்தர ராமசாமி:வாழ்க்கையும் படைப்புகளும்
- சுந்தர ராமசாமியைப் பற்றி கௌரி ராம்நாராயண் எழுதிய கட்டுரை பரணிடப்பட்டது 2006-01-12 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ் சி·பி இணையத்தளத்தில் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள்
- சு.ரா பற்றிய எதிர்ப்பு நோக்கு
- சுந்தர ராமசாமி படைப்புகள் சில - அழியாச்சுடர்களில்