கண்ணன் சுந்தரம்

காலச்சுவடு கண்ணன் என்ற கண்ணன் சுந்தரம் என்பவர் காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநரும் வெளியீட்டாளரும் ஆவார்.

கண்ணன் சுந்தரம்
தாய்மொழியில் பெயர்சு. ரா. சுந்தரம்
தேசியம்இந்தியர்
பணிதமிழ்ப் பதிப்பாளர்
பெற்றோர்சுந்தர ராமசாமி
விருதுகள்செவாலியே விருது

பதிப்புத் துறை

தொகு

கண்ணன் சுந்தரத்தின் தந்தை சுந்தர ராமசாமி சமூக இலக்கிய காலாண்டிதழான காலச்சுவட்டினை 1987ஆம் ஆண்டு நிறுவினார். சில ஆண்டுகளில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது. இதனை 1994-இல் இவர் மீண்டும் காலாண்டு இதழாக வெளியிடத் தொடங்கி, 2000ஆவது ஆண்டு காலச்சுவடு இதழிலிருந்து மாதமிருமுறை இதழாக மாற்றினார். தந்தையின் மறைவிற்குப் பிறகு 2010ஆம் ஆண்டு இதனை தனியார் நிறுவனமாகப் பதிப்பகத்தை மாற்றி அதன் நிருவாக இயக்குநரானார். இந்தப் பதிப்பகத்தின் மூலம் 142 மொழிபெயர்ப்பு நூல்களை தமிழிலிருந்தும் தமிழுக்கும் வெளியிட்டுள்ளார்.[1]

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி மாநாடாக தமிழ் இனி 2000 என்ற மாநாட்டினை மற்றவர்களுடன் இணைந்து நடத்தினார்.[2] பிராங்க்பர்ட் புத்தகத் திருவிழா(2007) உள்ளிட்ட பல்வேறு சர்வதேச இலக்கிய விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கெடுத்துள்ளார்.

குறிப்பிடத்தக்க விருதுகள்

தொகு

பதிப்புத் துறையில் இந்தியா - பிரான்ஸ் இருநாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்தப் பங்காற்றியதற்காக, பிரான்ஸ் நாட்டின் 2022 ஆம் ஆண்டிற்கான செவாலியே விருது பெறத் தேர்வாகியுள்ளார்.[3] பப்ளிஷிங் நெக்ஸ்ட் என்ற அமைப்பின் மூலம் சிறந்த பதிப்பாளர் விருதையும் பெற்றுள்ளார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "காலச்சுவடு வெளியீடுகள் பற்றி". காலச்சுவடு. பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
  2. "கண்ணன் சுந்தரம்". பப்ளிஷ்ங் நெக்ஸ்ட். பார்க்கப்பட்ட நாள் 29 May 2024.
  3. "‘செவாலியே விருது’க்கு தேர்வான ‘காலச்சுவடு’ கண்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/tamilnadu/833145-chief-minister-mkstalin-congratulates-kalachuvadu-kannan-for-french-award.html. பார்த்த நாள்: 29 May 2024. 
  4. "Chevalier award for Kalachuvadu Kannan". தி இந்து. https://www.thehindu.com/news/national/tamil-nadu/chevalier-award-for-kalachuvadu-kannan/article65695633.ece. பார்த்த நாள்: 29 May 2024. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_சுந்தரம்&oldid=3979049" இலிருந்து மீள்விக்கப்பட்டது