கிருஷ்ணன் நம்பி

தமிழ் எழுத்தாளர்

கிருஷ்ணன் நம்பி (அழகிய நம்பி, 1932- 1976) ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் குமரி மாவட்டத்தில் அழகியபாண்டிபுரத்தில் பிறந்து பூதப்பாண்டி என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரும் சுந்தர ராமசாமியும் இலக்கிய இரட்டையர் என்று அறியப்பட்டார்கள்.

வாழ்க்கை

தொகு

அழகியபாண்டியபுரத்தில் விவசாயம் செய்துவந்த கிருஷ்ணன் நம்பியின் தந்தை 1939இன் பிற்பகுதியில் நாகர்கோவிலில் உர வியாபாரத்தை ஆரம்பித்தார். 1940 ஆம் ஆண்டு நம்பியின் தந்தை குடியிருப்பை அழகிய பாண்டியபுரத்திலிருந்து நாகர்கோவிலில் கிருஷ்ணன் கோவிலுக்கு மாற்றிக் கொண்டார். 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி கிருஷ்ணன் நம்பிக்கு திருமணம் ஆயிற்று. மனைவி பெயர் ஜெயலட்சுமி. `நவசக்தி’யில் ஃபுருஃப் ரீடர் வேலை பார்த்தார். அப்போது ப. ஜீவானந்தம் அவர்களின் தொடர்பு கிடைத்தது . கிருஷ்ணன் நம்பிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்.[1]

இலக்கிய வாழ்க்கை

தொகு

கிருஷ்ணன் நம்பி வை. கோவிந்தனின் சக்தியில் `நாட்டுப்பாடல்கள்’ பற்றிய அவரது முதல் கட்டுரையை எழுதினார். 1950 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சிறுவர் பத்திரிகையான கண்ணனில் தொடர்ந்து `சசிதேவன்’ என்கிற பெயரில் குழந்தைப் பாடல்கள் எழுதினார். கிட்டத்தட்ட சுமார் 35 பாடல்கள் கண்ணனில் வெளிவந்தன. அச்சில் வெளிவந்த நம்பியின் முதல் சிறுகதை `சுதந்திர தினம்’ (1951).[1]

1950 இல் கிருஷ்ணன் நம்பிக்கும் சுந்தர ராமசாமிக்கும், ராமசாமி கொண்டுவந்த `புதுமைப்பித்தன் நினைவு மலரை’ ஒட்டி நட்பு ஏற்பட்டது. கிட்டதட்ட 25 வருடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்த நட்பு இது.[1]

விஜயபாஸ்கரன் `சரஸ்வதி’யை தொடங்கியபோது அதில் நம்பி சுமார் 11 குழந்தைக் கவிதைகள் எழுதினார். தொடர்ந்து சிறுகதைகளும் எழுத ஆரம்பித்தார்.[1]

படைப்புகள்

தொகு
  • `யானை என்ன யானை?’ குழந்தைப்பாடல்கள் 1965
  • காலைமுதல் சிறுகதைகள்
  • நீலக்கடல் சிறுகதைகள்

இறப்பு

தொகு

1974 இல் புற்றுநோய் காரணமாக கிருஷ்ணன் நம்பியின் இடது கால் அகற்றப்பட்டது. 1976 சூன் 16 அன்று இறந்தார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "கிருஷ்ணன் நம்பி". அழியாச் சுடர்கள். பார்க்கப்பட்ட நாள் 24 ஏப்பிரல் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருஷ்ணன்_நம்பி&oldid=4128016" இலிருந்து மீள்விக்கப்பட்டது