1814
1814 (MDCCCXIV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1814 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1814 MDCCCXIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1845 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2567 |
அர்மீனிய நாட்காட்டி | 1263 ԹՎ ՌՄԿԳ |
சீன நாட்காட்டி | 4510-4511 |
எபிரேய நாட்காட்டி | 5573-5574 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1869-1870 1736-1737 4915-4916 |
இரானிய நாட்காட்டி | 1192-1193 |
இசுலாமிய நாட்காட்டி | 1229 – 1230 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 11 (文化11年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2064 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4147 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 14 - நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு அளித்தது.
- ஜனவரி 29 - நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் வெற்றி பெற்றது.
- பெப்ரவரி 1 - பிலிப்பீன்சில் மயோன் எரிமலை வெடித்ததில் 1,200 பேர் கொல்லப்பட்டனர்.
- பெப்ரவரி 11 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 12 - லன்ண்டனில் சுங்கத் திணக்களக் கட்டிடம் தீயில் எரிந்து அழிந்தது.
- மார்ச் 10 - நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் லாவோன் நகரில் இடம்பெற்ற சமரில் தோல்வியடைந்தான்.
- மார்ச் 30 - ஆறாவது கூட்டுப் படைகள் பாரிஸ் நகரினுள் நுழைந்தன.
- மார்ச் 31 - நெப்போலியன் பொனபார்ட்டுக்கு எதிரானவர்கள் பாரிஸ் நகரைக் கைப்பற்றினர்.
- ஏப்ரல் 6 - நெப்போலியன் பொனபார்ட் பிரான்ஸ் நாட்டின் மன்னர் பதவியில் இருந்து விலகினான். பதின்மூன்றாம் லூயி புதிய மன்னனாக அறிவிக்கப்பட்டான்.
- மே 2 - முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமஸ் கோக் தமது மதத்தைப் பரப்புதற்காக இங்கிலாந்தில் இருந்து கப்பலில் இலங்கை வரும் வழியில் காலமானார்.
- மே 30 - நெப்போலியன் பொனபார்ட் எல்பாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
- சூன் 29 - மெதடிஸ்த திருச்சபையைச் சேர்ந்த ஆறு மதப்பரப்புனர்கள் இலங்கையின் காலி நகரை வந்தடைந்தனர்.
- ஆகத்து 13 - ஆங்கில-டச்சு ஒப்பந்தம் கைச்சாத்தாகியது.
- ஆகத்து 24 - பிரித்தானியப் படையினர் வாஷிங்டன், டி. சி நகரில் புகுந்து வெள்ளை மாளிகை மற்றும் பல கட்டடங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.
- நவம்பர் 5 - இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- கயானா நெதர்லாந்திடம் இருந்து பிரித்தானியரிடம் கை மாறியது. இது பின்னர் பிரித்தானிய கயானா என அழைக்கப்பட்டது.
- செயிண்ட் லூசியா தீவை ஐக்கிய இராச்சியம் முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது.
பிறப்புக்கள்
தொகு- மே - ராபர்ட் கால்டுவெல், திராவிட மொழி நூலின் தந்தை (இ. 1891)
- செப்டம்பர் 3 - ஜேம்ஸ் சில்வெஸ்டர், கணிதவியலர் (இ. 1897)
இறப்புக்கள்
தொகு- ஜனவரி 27 - யோஃகான் ஃவிக்டெ, ஜெர்மனிய மெய்யியல் அறிஞர் (பி. 1762
- ஆகத்து 31 - ஆர்தர் பிலிப், பிரித்தானிய கடற்படை அட்மிரல், காலனித்துவ நிர்வாகி (பி. 1738)
- மே 2 - தோமஸ் கோக், முதலாவது மெதடிஸ்த ஆயர் (பி. 1747)