1790கள்
பத்தாண்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
1790கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1790ஆம் ஆண்டு துவங்கி 1799-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 2 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்.
- பெப்ரவரி 4 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசியலமைப்பைத் தான் பேணுவதாக தேசிய சபையில் வாக்குறுதி அளித்தான்.
- மார்ச் 4 - பிரான்ஸ் 83 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- ஏப்ரல் 10 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
- மே 13 - சுவீடனின் மூன்றாம் குஸ்டாவ் எஸ்தோனியாவில் தரித்திருந்த ரஷ்யப் படைகளை அழிக்க தனது கடற்படைகளை ஏவினான். அவனது படையினரில் 51 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கைப்பற்றப்பட்டனர். 2 கப்பல்கள் மூழ்கின.
- மே 29 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜூலை 9 - ரஷ்ய-சுவீடன் போர்: பால்ட்டிக் கடலில் 300 கப்பல்கள் பங்குபற்றிய பெரும் மோதலில் சுவீடன் படைகள் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யக் கப்பல்களைக் கைப்பற்றினர். 304 சுவீடியரும், 3500 ரஷ்யர்களும் கொல்லப்பட்டனர். 51 ரஷ்யக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.
- ஆகஸ்ட் 2 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- டிசம்பர் 11 - ரஷ்ய-துருக்கியப் போர், 1787-1792: 26,000 துருக்கியப் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நாள் அறியப்படாதவை
தொகு- வெள்ளி மாளிகை அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.
- வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டது.
- பிலிப்பு தெ மெல்லோ டோரா என்ற யூதர்களின் புனித நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.
- மண்டையோடு பஞ்சம் (Doji bara famine / Skull famine) 1791-92 இல் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாக்கிய ஒரு பெரும் பஞ்சம்.
- மார்ச் 16 - சுவீடன் மன்னர் மூன்றாம் குஸ்டாவ் ஸ்டொக்ஹோல்ம் நகரில் சுடப்பட்டார். மார்ச் 29 இவர் இறந்தார்.
- ஏப்ரல் 20 - பிரான்ஸ், ஆஸ்திரியாவுடன் போரை ஆரம்பித்தது.
- மே 21 - ஜப்பானில் ஊன்சென் எரிமலை (Mount Unzen) வெடித்ததில் இடம்பெற்ற சூறாவளி மற்றும் சுனாமியினால் 14,300 பேர் கொல்லப்பட்டனர்.
- ஆகஸ்ட் 10 - பிரெஞ்சுப் புரட்சி: பதினாறாம் லூயி மன்னன் சிறைப்பிடிக்கப்பட்டான்.
- செப்டம்பர் 2 - பிரெஞ்சுப் புரட்சி: மூன்று ரோமன் கத்தோலிக்க ஆயர்கள் உட்பட இருநூற்றிற்கும் அதிகமான குருமார்களும் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 21 - பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு ஆகியது.
நாள் அறியப்படாதவை
தொகு- திப்பு சுல்தான் இந்தியாவின் கேரளாவை முற்றுகையிட்டான். இம்முற்றுகை முறியடிக்கப்பட்டது.
- ஜனவரி 2 - ரஷ்யாவும் புருசியாவும் போலந்தைப் பங்கிட்டன.
- ஜனவரி 21 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கழுத்து வெட்டப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
- பெப்ரவரி 1 - பிரித்தானியா, மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- பெப்ரவரி 25 - ஜோர்ஜ் வாஷிங்டன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
- மார்ச் 5 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- மார்ச் 7 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- ஏப்ரல் 1 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 16 - பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மறீ அண்டனெட் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டாள்.
- நவம்பர் 9 - மிஷனறி வில்லியம் கேரி குடும்பத்துடன் கல்கத்தா வந்து சேர்ந்தார்.
- டிசம்பர் 9 - நியூயோர்க் நகரின் முதலாவது தினசரிப் பத்திரிகை "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 26 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களைத் தோற்கடித்தனர்.
நாள் அறியப்படாதவை
தொகு- ரோமன் கத்தோலிக்கம் பிரான்சில் தடை செய்யப்பட்டது.
- புனித ரோம் பேரரசு பிரான்சின் மீது போரை அறிவித்தது.
- யாழ்ப்பாணத்தில் பருத்தி முதற்தடவையாக விளைவிக்கப்பட்டது.
- பெப்ரவரி 4 - பிரெஞ்சுக் குடியரசு அடிமை முறையை இல்லாதொழித்தது.
- பெப்ரவரி 26 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
- மார்ச் 14 - பஞ்சு கடையியந்திரத்துக்கான (பஞ்சுமணை) முதலாவது காப்புரிமத்தை அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலி விட்னி பெற்றார்.
- சூன் 4 – பிரித்தானியப் படைகள் எயிட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- சூன் 23 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தார்.
- சூலை 28 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
தொகு- சுவீடனில் காப்பி தடை செய்யப்பட்டது.
- யாழ்ப்பாணத் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. கோவாவைச் சேர்ந்த வண. லியோனார்டு ரொபெய்ரோ இதன் முதல் குருவானவராக நியமிக்கப்பட்டார்.
- இரண்டாம் ரோகில்லாப் போர்
- இலங்கையின் கடைசி ஒல்லாந்து ஆளுனராக ஜே. ஜி. வான் ஆங்கெல்பீக் (1794-1796) என்பவர் பதவியேற்றார்.
- ஜனவரி 20 - பிரெஞ்சுப் படைகள் ஆம்ஸ்டர்டாமைக் கைப்பற்றின.
- ஏப்ரல் 7 - பிரான்ஸ் மீட்டர் அளவைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
- செப்டம்பர் - கப்டன் ஸ்டுவேர்ட் தலைமையில் பிரித்தானியர் பருத்தித்துறையை அடைந்து யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர்.
- செப்டம்பர் 28 - யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- டிசம்பர் 3 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக (Collector) நியமிக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
தொகு- குரோவ் நகரம் ஆஸ்திரியாவுடன் இணைக்கப்பட்டது.
- பெப்ரவரி 16 - கொழும்பை டச்சுக்களிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர். இலங்கையை மதராசில் இருந்து ஆட்சி புரியத் தொடங்கினர்.
- மே 10 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
- மே 14 - எட்வேர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்தினார்.
- மே 15 - நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலான் நகரைக் கைப்பற்றினர்.
- ஜூலை 10 - ஒவ்வொரு நேர் முழு எண்ணும் அதிகபட்சம் மூன்று முக்கோண எண்களின் கூட்டுத்தொகையாகக் கொடுக்கலாம் என்பதை கார்ல் ஃப்ரெடெரிக் காஸ் கண்டுபிடித்தார்.
- செப்டம்பர் 8 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியப் படைகளை பசானோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
- டிசம்பர் 25 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் இறப்பு.
நாள் அறியப்படாதவை
தொகு- பிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மார்ச்சு 4 - ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்க குடியரசு தலைவர் பதவி காலம் முடிந்தது.
- மார்ச்சு 4 - ஜான் ஆடம்ஸ் அடுத்த அமெரிக்க குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.
- முதன் முதலாக ஆங்கிலேய ஆலன் துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார்.
- ஜனவரி 22 - நெதர்லாந்தில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
- ஏப்ரல் 26 - பிரெஞ்சுப் படைகள் ஜெனீவாவைப் பிடித்தன.
- ஜூன் 12 - பிரான்ஸ் மோல்டாவைத் தன்னுடன் இணைத்தது.
- ஜூலை 1 - நெப்போலியனின் படைகள் எகிப்தை அடைந்தன.
- ஜூலை 24 - நெப்போலியன் பொனபார்ட் கெய்ரோவைப் பிடித்தான்.
- அக்டோபர் 12 - இலங்கை பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடாக (King's Colony) அறிவிக்கப்பட்டது. பிரெடெரிக் நோர்த் ஆளுநராக ஆக்கப்பட்டார்.
நாள் அறியப்படாதவை
தொகு- மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது.
- பஞ்சாபின் லாகூர் நகரை ஆப்கானிஸ்தான் பிடித்தது.
- ஜனவரி 15 - இலங்கைக்கு கூலிகளைக் கொண்டுவருவது தடை செய்யப்பட்டது.
- மார்ச் 7 - நெப்போலியன் பாலஸ்தீனத்தின் ஜாஃபா பகுதியைக் கைப்பற்றினான்.
- ஜூலை 7 - ரஞ்சித் சிங்கின் படைகள் லாகூரிற்கு வெளியே உள்ள பகுதிகளைப் பிடித்தனர்.
- ஜூலை 12 - ரஞ்சித் சிங் லாகூரைப் பிடித்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.
- ஜூலை 25 - எகிப்தின் அபூக்கீர் நகரில் நெப்போலியன் 10,000 ஆட்டோமன் படைகளைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 23 - இலங்கையில் அரசனின் ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் தருவது நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அமுலுக்கு வந்தது.
- செப்டம்பர் 24 - கட்டபொம்மனும் இன்னும் 6 பேரும் புதுக்கோட்டை அரசன் விஜயரகுநாத தொண்டைமானால் கைது செய்யப்பட்டுப் பின்னர் செப் 29இல் ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
- அக்டோபர் 16 - கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
தொகு- டச்சு கிழக்கிந்தியக் கம்பனி மூடப்பட்டது.
தொடர் நிகழ்வுகள்
தொகு- பிரெஞ்சுப் புரட்சி (1789 - 1799): இது நவம்பர் 9, 1799 இல் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. நெப்போலியன் பொனபார்ட் பிரான்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.