1790
ஆண்டு 1790 (MDCCXC) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1790 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1790 MDCCXC |
திருவள்ளுவர் ஆண்டு | 1821 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2543 |
அர்மீனிய நாட்காட்டி | 1239 ԹՎ ՌՄԼԹ |
சீன நாட்காட்டி | 4486-4487 |
எபிரேய நாட்காட்டி | 5549-5550 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1845-1846 1712-1713 4891-4892 |
இரானிய நாட்காட்டி | 1168-1169 |
இசுலாமிய நாட்காட்டி | 1204 – 1205 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 2 (寛政2年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2040 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4123 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 2 - வீரபாண்டிய கட்டபொம்மன் 47 வது பாளையக்காரராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டான்.
- பெப்ரவரி 4 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசியலமைப்பைத் தான் பேணுவதாக தேசிய சபையில் வாக்குறுதி அளித்தான்.
- மார்ச் 4 - பிரான்ஸ் 83 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
- ஏப்ரல் 10 - ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.
- மே 13 - சுவீடனின் மூன்றாம் குஸ்டாவ் எஸ்தோனியாவில் தரித்திருந்த ரஷ்யப் படைகளை அழிக்க தனது கடற்படைகளை ஏவினான். அவனது படையினரில் 51 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கைப்பற்றப்பட்டனர். 2 கப்பல்கள் மூழ்கின.
- மே 29 - ரோட் தீவு ஐக்கிய அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- ஜூலை 9 - உருசிய-சுவீடன் போர்: பால்ட்டிக் கடலில் 300 கப்பல்கள் பங்குபற்றிய பெரும் மோதலில் சுவீடன் படைகள் ரஷ்யாவின் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யக் கப்பல்களைக் கைப்பற்றினர். 304 சுவீடியரும், 3500 ரஷ்யர்களும் கொல்லப்பட்டனர். 51 ரஷ்யக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டன.
- ஆகஸ்ட் 2 - ஐக்கிய அமெரிக்காவில் முதற் தடவையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
- டிசம்பர் 7-12 - கோழிக்கோடு சண்டை: பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் மைசூர் படைகளைத் தோற்கடித்து மலபார் முழுவதையும் கைப்பற்றினர்.
- டிசம்பர் 11 - உருசிய-துருக்கியப் போர்: 26,000 துருக்கியப் போர்வீரர்கள் கொல்லப்பட்டனர்.
நாள் அறியப்படாதவை
தொகு- வெள்ளை மாளிகை கட்டடப் பணிகள் ஆரம்பமாயின.
- வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் அமைக்கப்பட்டது.
- பிலிப்பு தெ மெல்லோ டோரா என்ற யூதர்களின் புனித நூலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
தொடரும் நிகழ்வுகள்
தொகுபிறப்புகள்
தொகு- மார்ச் 3 - ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுனர் (இ. 1859)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 17 - பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்க அறிவியலாளர் (பி. 1706)
- சூலை 17 - ஆடம் சிமித், இசுக்கொட்டிய பொருளியலாளர் (பி. 1723)
- ஆகத்து 10 - பிலிப்பு தெ மெல்லோ, ஈழத்துத் தமிழறிஞர் (பி. 1723)