மைசூர் அரசு
மைசூர் அரசு (Kingdom of Mysore), கன்னடம்: ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ ) (1399–1947) தென்னிந்தியாவில் 1399 இல் மைசூர் பகுதியில் உடையார் அரச குலத்தின் மன்னர் யதுராய உடையார் என்பவரால் அமைக்கப்பட்ட அரசாகும்.[1][2][3][4] மைசூர் அரசு, விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரை, விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராச உடையார் மற்றும் சிக்க தேவராச உடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான தன்னாட்சி அரசு 1761 வரை ஆண்டது.
Kingdom of Mysore மைசூர் அரசு ಮೈಸೂರು ಸಾಮ್ರಾಜ್ಯ | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1399–1950 | |||||||||||
நாட்டுப்பண்: Kayou Sri Gowri | |||||||||||
நிலை | பேரரசு (1565 வரை விஜயநகரப் பேரரசுடன் இணைந்திருந்தது) | ||||||||||
தலைநகரம் | மைசூர், ஸ்ரீரங்கப்பட்டணம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | கன்னடம், ஆங்கிலம் | ||||||||||
சமயம் | இந்து | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி | ||||||||||
மன்னர் | |||||||||||
• 1399–1423 (முதல்) | யதுராய உடையார் | ||||||||||
• 1940–1950 (முதல்) | ஜெயச்சாமராஜா உடையார் | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1399 | ||||||||||
• ஆரம்பத் தரவுகள் | 1551 | ||||||||||
• முடிவு | 1950 | ||||||||||
|
மைசூர் அரசைக் கைப்பற்றிய ஐதர் அலியும், அவரது மகன் திப்பு சுல்தானும் மைசூர் அரசை 1761 முதல் 1799 முடிய ஆண்டனர். ஆங்கிலேயர்களின் உதவியுடன் மீண்டும் உடையார் வம்சத்தினர் மைசூர் அரசை 1799 முதல் 1881 முடிய தன்னாட்சியுடன் ஆண்டனர். 1881ஆம் ஆண்டு முதல் மைசூர் அரசு பிரித்தானிய இந்தியாவிற்கு கப்பம் கட்டும் சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாக விளங்கியது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் அரசு அரசியல் ஒருங்கிணைப்புத் திட்டப்படி, 1950ஆம் ஆண்டில் இந்திய அரசில் இணைக்கப்பட்டது.