முதலாம் இராச உடையார்
முதலாம் இராச உடையார் (2 சூன் 1552 - 20 சூன் 1617) என்பவர் மைசூரின் மன்னராக 1578 முதல் 1617 வரை இருந்தவர்.[1] இவர் மைசூர் மன்னர் நான்காம் சாமராச உடையாரின் மூத்த மகனாவார்.
ஆட்சி விரிவாக்கம் தொகு
இராச உடையார் துவக்கத்தில் 33 சிற்றூர்களுக்கும் 300 வீரர்களுக்கும் தலைவனாக இருந்தார். விசயநகர குறுநில மன்னரான இவர், பேரரசின் வலிவு குன்றியதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, படிப்படியாக புதிய பகுதிகளை வென்று தன் அரசை விரிவுபடுத்தினார். 1612 இல் மண்டலத் தலைநகரான சீரங்கப்பட்டணத்தை கைப்பற்றினார். இவ்வெற்றியினால் மைசூர் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கியது. சீரங்கப்பட்டணம் உடையார்களின் அரசியல் மையமானது. சீரங்கப்பட்டண வெற்றியைத் தொடர்ந்து, இராச உடையார் தன் நாட்டின் வட பகுதியில் இருந்த செகதேவிராயர்களின் ஆட்சிப் பகுதிகளையும், தென்பகுதியிலிருந்த பாளையக்களையகாரர்களின் தெற்கு, கிழக்கு பகுதிகளையும் வென்று தன் அரசோடு இணைத்துக்கொண்டான்.[2]
குறிப்புகள் தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm.
- ↑ F.J.Richards, District Gazetteers, salem,Vol 1,1918,p.68