முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர்
முதலாம் தொட்ட கிருட்டிணராச உடையார் (18 மார்ச் 1702 - 5 மார்ச் 1732) என்பவர் மைசூரின் மன்னராக 1714 முதல் 1732 வரை இருந்தவர்.[2]
தொட்ட கிருட்டிணராச உடையார் | |
---|---|
மைசூர் உடையார்கள் | |
![]() தொட்ட கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் | |
ஆட்சி | 1714 - 1732 |
முடிசூட்டு விழா | 3 March 1714[1] |
முன்னிருந்தவர் | இரண்டாம் நரசராச உடையார் |
பின்வந்தவர் | ஏழாம் சாமராச உடையார் |
துணைவர் | தேவஜா அம்மணி (Devajamma) செல்வஜா அம்மணி கண்லே அம்மணி (9 மனைவிகள்) |
வாரிசு(கள்) | ஒரு மகன் (6 மாதங்களில் இறப்பு) |
மரபு | உடையார் |
தந்தை | இரண்டாம் நரசராச உடையார் |
தாய் | செல்வஜா அம்மணி அவரு |
பிறப்பு | 18 மார்ச் 1702 |
இறப்பு | 5 மார்ச் 1732 |
வாழ்க்கைதொகு
தொட்ட கிருட்டிணராச உடையார் 18 மார்ச் 1702இல் பிறந்தார். இரண்டாம் கண்டீரவ நரசராச உடையாரின் இரண்டாம் மணைவியாகிய செல்வஜா அம்மணி அவருவின் முதல் ஆண்பிளைளையாவார். கண்டீரவ நரசராச உடையார் இறந்ததால் இவரின் பத்தாவது வயதில் பெயருக்கு அரியணை ஏற்றிவிட்டு, அமைச்சர்களே ஆட்சி செலுத்தினர். தொட்ட கிருட்டிண ராச உடையார் ஒன்பது பேரை மணந்தார். இவரது முதல் மனைவிக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. ஆனால், ஆறுமாதங்களிலேயே அக்குழந்தை இறந்தது. நேரடி உடையார் மரபு இவருடன் முடிந்தது. இவர் 5 மார்ச் 1732இல் தன் 29ஆம் வயதில் இறந்தார்.