ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார்
இந்தியத் துடுப்பாட்டக்காரர்
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (Srikantadatta Narasimharaja Wadiyar) (பெப்ரவரி 20 1953 – டிசம்பர் 10 2013) இவர் மைசூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவை உறுப்பினராக நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தெடுக்கப்பட்டார்.[1][2]
ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் | |
---|---|
முன்னையவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
பின்னையவர் | காந்தராஜ அரஸ் |
பிறப்பு | மைசூர், இந்தியா | 20 பெப்ரவரி 1953
இறப்பு | 10 திசம்பர் 2013 பெங்களூரு, கர்நாடகம், இந்தியா | (அகவை 60)
துணைவர் | பிரமோத தேவி |
மரபு | உடையார் |
தந்தை | ஜெயச்சாமராஜா உடையார் |
தாய் | திரிபுர சுந்தரி அம்மணி |
மதம் | இந்து சமயம் |
கையொப்பம் |
அரசர் பரம்பரை
தொகுஇவர் மைசூர் சமஸ்தானத்தின் 26 வது மற்றும் கடைசி அரசரான ஜெயச்சாமராஜா உடையாரின் மகன் ஆவார்.[3][4][5] இவரது தந்தையை அடுத்து 1974 ஆம் ஆண்டு இவர் மைசூர் மன்னராக பொறுப்பேற்றார். எனினும் அந்தப் பதவி சம்பிரதாய பூர்வமானதாகவே இருந்தது. நவராத்திரி விழாவில் இவரது பங்கு முன்னிலைப் படுத்தப்பட்டது
இறப்பு
தொகுடிசம்பர் 10 2013 அன்று பெங்களூரு அரண்மனையில் மாரடைப்பால் காலமானார். டிசம்பர் 11 2013 அன்று அவரது உடல் தங்க அம்பாரியில் நஞ்சன்கூடு கொண்டு செல்லப்பட்டு மனுவனத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "மைசூர் 'மகாராஜா' காலமானார்". பி பி சி. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ "மைசூர் அரச குடும்பத்தின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் மாரடைப்பால் மரணம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ "தொடங்கியது மைசூர் தசரா விழா". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ "மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ "Scion of Mysore royal family passes away". Business Line. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.
- ↑ "ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2013.