இரண்டாம் கிருட்டிணராச உடையார்
மகாராசா சிறீ இம்மிடி சிக்க கிருட்டிணராச உடையார் (கன்னடம்: ಇಮ್ಮಡಿ ಕೃಷ್ಣರಾಜ ಒಡೆಯರ್, - 25 ஏப்ரல் 1766) அல்லது இரண்டாம் இம்மடி கிருட்டிணராச உடையார்என்பவர் மைசூரின் மன்னராக 1734 முதல் 1766 வரை இருந்தவர்.[2] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
இரண்டாம் இருட்டிணராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராசன் | |
ஆட்சி | 1734 - 1766 |
முடிசூட்டு விழா | 15 சூன் 1735[1] |
முன்னிருந்தவர் | ஏழாம் சாமராச உடையார் |
பின்வந்தவர் | சஞ்சராச உடையார் |
துணைவர் | தேவராச அம்மணி அவரு புட்டஜா அம்மணி அவரு லெட்சுமி அம்மணி தேவி அவரு |
வாரிசு(கள்) | நஞ்சராச உடையார் ஏழாம் சாமராச உடையார் |
மரபு | உடையார் |
தந்தை | சாம் அர்ஸ் முதலாம் கிருட்டிணராச உடையார் (வளர்ப்புத் தந்தை) |
தாய் | தேவஜம்மணி (வளர்ப்புத் தாய்) |
பிறப்பு | 1728 |
இறப்பு | 25th ஏப்ரல் 1766 சிறீரங்கப்பட்டணம் |
சமயம் | இந்து |
வாழ்க்கை
தொகுஇவர் 8.அக்டோபர் 1731 இல் சௌபாக்கியவதி மகாராணி சிறீ தேவசம்மா என்னும் தேவராச அம்மணி அவரு (முதலாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) அவர்களால் தத்து எடுக்கப்பட்டு, சிக்க கிருட்டிண தேவராச உடையார் என்ற பெயருடன் தளவாயால் பட்டம் சூட்டப்பட்டார். மன்னர் தளவாயின் கட்டுப்பாட்டிலும், ஐதர் அலியின் கட்டுப்பாட்டிலும் இருந்தார். தன் அதிகாரத்தை பெருக்கிக்கொள்ள முதலமைச்சர் நஞ்சராசன் தன்மகளை மன்னருக்கு திருமணம் செய்துவித்தார்.[3]
ஐதர் அலியின் வளர்ச்சி
தொகுஇம்மன்னர் காலத்தில் முதலமைச்சரான நஞ்சராசன் 1749ஆம் ஆண்டு தேவனிள்ளியை முற்றுகையிட்டான். அம்முற்றுகை ஒனபது மாதகாலம் நடைபெற்றது. அம்முற்றுகையின்போது ஐதர் அலி என்ற இளைஞன் வெகு சாமார்த்தியமாகப் போர்புரிந்தான். அதைக்கண்ட நஞ்சராசன் அந்த இளைஞனுக்கு ஒரு பதவி கொடுத்து 200 காவலாட்களுக்கும், 50 குதிரைகளுக்கும் தலைவனாக்கினான். இவனே பிற்காலத்தில் படிப்படியாக உயர்ந்து மைசூர் இராஜ்ஜியத்துக்கே தலைமைவகிக்கும் நிலையை அடைந்தான். மன்னரையும் தன்கட்டுப்பாட்டில் கொண்டுவந்தான். [4]
குறிப்புகள்
தொகு- ↑ MYSORE The Wodeyar Dynasty GENEALOGY
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 320
- ↑ ம.இராமச்சந்திரன் செட்டியார், கொங்கு நாட்டு வரலாறு,பக்கம். 372-374