ஒன்பதாம் சாமராச உடையார்
சிறீமத் ராசாதிராச ராச பரமிசிவர ராச மார்த்தாண்ட பரவ்த பிரதாபபட்டிமவிரா நரப்பட்டி மகிசுர சிம்மமானருடரகிருவா மகாராச சிறீ காச சாமராச உடையார் (28 பெப்ரவரி 1774 – 17 ஏப்ரல் 1796) என்பவர் மைசூரின் மன்னராக 1776 முதல் 1796வரை இருந்தவர்.[1] இவர் மூன்றாம் கிருட்டிணராச உடையாரின் தந்தையாவார். இவர் ஒன்பதாம் சாமராச உடையார் என்று அழைக்கப்படுகிறார்.
ஒன்பதாம் சாமராச உடையார் | |
---|---|
மைசூர் மன்னர் | |
ஆட்சி | 1776 – 1796 |
முடிசூட்டு விழா | 27 செப்டம்பர் 1776, சிறீரங்கப்பட்டணம் |
வாரிசு(கள்) | மூன்றாம் கிருட்டிணராச உடையார் |
அரச குலம் | உடையார் மரபு |
தந்தை | சிக்க தேவராச அர்ஸ் |
தாய் | ஹொன்னஜம்மா |
பிறப்பு | 28 பெப்ரவரி 1774 சாம்ராஜ்நகர் |
இறப்பு | 17 ஏப்ரல் 1796 சிறீரங்கப்பட்டண அரண்மனை |
சமயம் | இந்து |
வாழ்க்கை தொகு
இவர் கருகியள்ளி குடும்பத்தைச் சேர்ந்த, சிக்க தேவராச அர்ஸ் என்பவரின் மகனாவார். எட்டாம் சாமராச உடையாரின் மறைவுக்குப் பிறகு, மகாராணிலெட்சுமி அம்மணி தேவியால் (மறைந்த மன்னர் இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மனைவி) தத்து எடுக்கப்பட்டார்.
இவரும் சுயேச்சையாக செயல்பட முடியாதவராக இவருக்கு முன்னாள் இருந்த மன்னர்களான இரண்டாம் கிருட்டிணராச உடையார், நஞ்சராச உடையார், எட்டாம் சாமராச உடையார் ஆகியோர் போன்று ஐதர் அலி, அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோருக்கு அடங்கியவராக இருந்தார்.
சனவரி 1786க்கு பிறகு, பெயருக்கு மன்னர் என்ற நிலையும் இல்லாமல் மன்னரின் அனைத்து உரிமைகளும் திப்பு சுல்தானால் பறிக்கப்பட்டு, தன்னையே பாதூசா என்று அறிவித்துக்கொண்டு திப்பு சுல்தான் மன்னனானார்.
மன்னர் உரிமைகளை திப்பு சுல்தான் பறித்த பிறகு, இவர் சிறீரங்கப்பட்டிண அரண்மனையில் 17 ஏப்ரல் 1798இல் பெரியம்மை நோயாலோ திப்புவால் கொல்லப்பட்டோ இறந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
உடையார் மரபினர் பதவியில் இருந்து இறக்கப்பட்ட பின் திப்பு சுல்தான் மைசூர் சுல்தானகத்தின் ஒரே மன்னராக போரில் கொல்லப்பட்ட 1799ஆம் ஆண்டு வரை இருந்தார்.