நான்காம் கிருட்டிணராச உடையார்
மைசூர் மன்னர்
நான்காம் கிருட்டிணராச உடையார் (4 சூன் 1884 – 3 ஆகத்து 1940, பெங்களூர் அரண்மனை) மைசூரின் மன்னராக 1894 ஆம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறினார். தான் இறக்கும் வரை (அதாவது 1940 ஆம் ஆண்டு வரை) இவர் ஆட்சியில் இருந்தார். இவர் ஒரு மெய்யியலாளர் ஆவார். இவர் இறக்கும் போது உலகப் பணக்கார நபர்களுள் ஒருவராக திகழ்ந்தார். அப்போது இவருடைய சொத்து 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டில் இதன் மதிப்பு 50 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.[1] இவர் மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் இருபத்து நான்காம் மன்னர் ஆவார். இவர் பிரித்தானியரின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
நான்காம் கிருட்டிணராச உடையார் | |
---|---|
மைசூர் மகாராஜா GCSI GBE | |
நான்காம் கிருட்டிணராச உடையார் Portrait by K. Keshavayya (1906) | |
ஆட்சி | 1894–1940 |
முடிசூட்டு விழா | 1 பெப்பிரவரி 1895, மைசூர் அரண்மனை |
முன்னிருந்தவர் | பத்தாம் சாமராச உடையார் |
பின்வந்தவர் | ஜெயச்சாமராஜா உடையார் |
துணைவர் | லக்சுமிவிலாச சனித்தானா ஸ்ரீ பிரதாப குமரி அம்மனி அவரு |
மரபு | உடையார் அரச வம்சம் |
தந்தை | பத்தாம் சமரெஜேந்திர உடையார் |
தாய் | மகாராணி வாணி விலாஸ் சனித்தான |
பிறப்பு | 4 சூன் 1884 மைசூர் அரண்மனை, மைசூர், மைசூர் அரசு |
இறப்பு | 3 ஆகஸ்ட் 1940 பெங்களூர் அரண்மனை, பெங்களூர், மைசூர் அரசு |
சமயம் | இந்து |
மேற்கோள்கள்
தொகு- ↑ Current Biography 1940, p833
வெளி இணைப்புக்கள்
தொகு- அரிதான புகைப்படங்கள் பரணிடப்பட்டது 2015-04-06 at the வந்தவழி இயந்திரம்