சிக்க தேவராச உடையார்
மைசூர் மன்னர்
சிக்க தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1673 முதல் 1704 வரை இருந்தவர்.[1][2] 1704இல் இறந்தார். சிக்க தேவராசன் சிறந்த அரசியல் மேதை. ஆட்சித்திறன் மிக்கவர். முகலாய பேரரசர் ஔரங்கசீப்புடன் நல்ல நட்புறவு ஏற்படுத்திக் கொண்டார்[3].
ஆட்சி விரிவாக்கம்
தொகுஅருகிலுள்ள மற்ற நாடுகளை வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கிக் கொண்டார். 1675-78க்கு இடையே தனது ஆட்சிப் பரப்பை பீசப்பூர் வரை நீட்டித்துக் கொண்டார். இருப்பினும் மராத்தியரின் ஆக்கிரமிப்புகளால் இவரது ஆட்சிப் பரவல் தடுக்கப்பட்டது. காசிம் கானிடம் மூன்று இலட்சம் ரூபாய் கொடுத்து பெங்களூரை வாங்கினார்.1704இல் அவர் இறப்பதற்கு முன் பழைய சேலம் மாவட்டம் முழுவதும் மைசூரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகிவிட்டன.[4]
குறிப்புகள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-24. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
- ↑ Bandyopadhyay 2004, ப. 33
- ↑ Bandyopadhyay 2004, ப. 33, Stein 1985b, ப. 400–401
- ↑ F.J.Richards, District Gazetteers, salem,Vol 1,1918,p.72
சான்றுகள்
தொகு- Bandyopadhyay, Sekhar (2004), From Plassey to Partition: A History of Modern India, New Delhi and London: Orient Longmans. Pp. xx, 548., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-2596-0
- Imperial Gazetteer of India: Provincial Series (1908), Mysore and Coorg, Calcutta: Superintendent of Government Printing. Pp. xvii, 365, 1 map.
- Nagaraj, D. R. (2003), "Critical Tensions in the History of Kannada Literary Culture", in Pollock, Sheldon (ed.), Literary Cultures in History: Reconstructions from South Asia, Berkeley and London: University of California Press. Pp. 1066, pp. 323–383
- Stein, Burton (1985b), "State Formation and Economy Reconsidered: Part One", Modern Asian Studies, 19 (3, Special Issue: Papers Presented at the Conference on Indian Economic and Social History, Cambridge University, April 1984): 387–413, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/S0026749X00007678, JSTOR 312446
- Subrahmanyam, Sanjay (1989), "Warfare and state finance in Wodeyar Mysore, 1724–25: A missionary perspective", Indian Economic Social History Review, 26 (2): 203–233, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1177/001946468902600203