1794
நாட்காட்டி ஆண்டு
1794 (MDCCXCIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1794 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1794 MDCCXCIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1825 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2547 |
அர்மீனிய நாட்காட்டி | 1243 ԹՎ ՌՄԽԳ |
சீன நாட்காட்டி | 4490-4491 |
எபிரேய நாட்காட்டி | 5553-5554 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1849-1850 1716-1717 4895-4896 |
இரானிய நாட்காட்டி | 1172-1173 |
இசுலாமிய நாட்காட்டி | 1208 – 1209 |
சப்பானிய நாட்காட்டி | Kansei 6 (寛政6年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2044 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4127 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 4 - பிரெஞ்சுக் குடியரசு அடிமை முறையை இல்லாதொழித்தது.
- பெப்ரவரி 26 - கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.
- மார்ச் 14 - பஞ்சு கடையியந்திரத்துக்கான (பஞ்சுமணை) முதலாவது காப்புரிமத்தை அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர் எலி விட்னி பெற்றார்.
- சூன் 4 – பிரித்தானியப் படைகள் எயிட்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரைக் கைப்பற்றினர்.
- சூன் 23 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தார்.
- சூலை 28 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
தொகு- சுவீடனில் காப்பி தடை செய்யப்பட்டது.
- யாழ்ப்பாணத் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் புனித மேரி தேவாலயம் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. கோவாவைச் சேர்ந்த வண. லியோனார்டு ரொபெய்ரோ இதன் முதல் குருவானவராக நியமிக்கப்பட்டார்.
- இரண்டாம் ரோகில்லாப் போர்
- இலங்கையின் கடைசி ஒல்லாந்து ஆளுனராக ஜே. ஜி. வான் ஆங்கெல்பீக் (1794-1796) என்பவர் பதவியேற்றார்.
தொடரும் நிகழ்வுகள்
தொகுபிறப்புகள்
தொகு- மே 24 - வில்லியம் ஹியூவெல் - ஆங்கிலேய அறிவியலாளர் (இ. 1866)
இறப்புகள்
தொகு- கணபதி ஐயர் - ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி (பி. 1709)