1811
1811 (MDCCCXI) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1811 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1811 MDCCCXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1842 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2564 |
அர்மீனிய நாட்காட்டி | 1260 ԹՎ ՌՄԿ |
சீன நாட்காட்டி | 4507-4508 |
எபிரேய நாட்காட்டி | 5570-5571 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1866-1867 1733-1734 4912-4913 |
இரானிய நாட்காட்டி | 1189-1190 |
இசுலாமிய நாட்காட்டி | 1225 – 1226 |
சப்பானிய நாட்காட்டி | Bunka 8 (文化8年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2061 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4144 |
நிகழ்வுகள்
தொகு- மார்ச் 1 - எகிப்திய மன்னன் முகமது அலி கடைசி மாம்லுக் தலைவர்களைக் கொன்றான்.
- மார்ச் 13 - பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா (Lissa) என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
- மார் 25 - 260 நாட்கள் தொடர்ச்சியாக வானில் தெரிந்த வால்வெள்ளி (Comet) ஒன்றை Honoré Flaugergues என்பவர் கண்டுபிடித்தார்.
- ஏப்ரல் 5 - 6 - புவனர்ஸ் அயரெசில் புரட்சிக் கலவரங்கள் இடம்பெற்றன.
- மே 14 - பரகுவே ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ஜூலை 5 - வெனிசுவேலா ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- ஜூலை 11 - இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வளிம மூலக்கூறுகள் பற்றிய தனது குறிப்புகளை வெளியிட்டார்.
- நவம்பர் 8 - இலங்கையின் இயற்றப்பட்ட புதிய நீதிமன்ற சட்டப்படி மேல் நீதிமன்றம் (Supreme Court) இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று கொழும்பில் பிரதம நீதியரசரின் நீதிமன்றமும், Puisne Justice என அழைக்கப்படும் நீதிமன்றம் யாழ்ப்பாணத்திலும் அமைக்கப்பட்டன. கிரிமினல் வழக்குகளுக்கு ஜூரி முறையும் அமுலுக்கு வந்தது.
- டிசம்பர் 16 - மிசோரியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தினால் மிசிசிப்பி ஆறு சிறிது நேரம் பின்னோக்கிப் பாய்ந்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள்
தொகு- பொலீவியா விடுடலையை அறிவித்தது.
- நெடுந்தீவின் முழு அதிகாரமும் எட்வேர்ட் நோலன் என்பவனுக்கு வழங்கப்பட்டது.
- சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்) வெளியானது.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு1811 நாற்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Fessenden, Marissa. "How a Nearly Successful Slave Revolt Was Intentionally Lost to History" (in en). Smithsonian. https://www.smithsonianmag.com/smart-news/its-anniversary-1811-louisiana-slave-revolt-180957760/.
- ↑ "'American Rising': When Slaves Attacked New Orleans" (in en). NPR.org. https://www.npr.org/2011/01/16/132839717/american-rising-when-slaves-took-on-new-orleans.
- ↑ LAURA, CALDWELL (2010-06-12). "CASAS REVOLT". tshaonline.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.