மிசிசிப்பி ஆறு

மிசிசிப்பி ஆறு வட அமெரிக்காவில் மிகப்பெரிய வடிகாலமைப்பையுடைய பிரதான ஆறாகும்.[3][4] ஐக்கிய அமெரிக்காவில் உள்ள ஆறுகளில் நீளத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய ஆறு ஆகும். மினசோட்டாவில் உள்ள இத்தாஸ்கா ஏரியில் இருந்து உற்பத்தியாகி மெக்சிக்கோ குடாவில் கலக்கும் இது 2,320 மைல்கள் (3,734 கிமீ) நீளம் கொண்டது. ஐக்கிய அமெரிக்காவிலேயே அதிக நீளம் கொண்ட மிசோரி ஆறு இதன் கிளை ஆறு ஆகும்.

மிசிசிப்பி ஆறு
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள் மினசோட்டா, விஸ்கொன்சின், அயோவா, இலினொய், மிசூரி, கென்டக்கி, தென்னசி, ஆர்கன்சா, மிசிசிப்பி, லூசியானா
முதன்மை
நகரங்கள்
மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, செயின்ட் லூயிஸ், மிசூரி, மெம்ஃபிஸ், டென்னசி, பாடன் ரூஜ், லூசியானா, நியூ ஓர்லென்ஸ், லூசியானா
நீளம் 2,320 மைல் (3,734 கிமீ)
வடிநிலம் 11,51,000 ச.மைல் (29,81,076 கிமீ²)
வெளியேற்றம் பாடன் ரூஜ், LA
 - சராசரி [1]
வெளியேறும்
பிற இடங்கள்
 - சென். லூயிஸ் [2]
மூலம் இத்தாஸ்கா ஏரி
 - அமைவிடம் இத்தாஸ்கா அரச பூங்கா, கிளியர்வாட்டர் கவுண்டி, MN
 - உயரம் 1,475 அடி (450 மீ)
கழிமுகம் மெக்சிக்கோ குடா
 - அமைவிடம் பைலட்டவுன், பிளாக்மைன்ஸ் பாரிஷ், LA
 - உயரம் அடி (0 மீ)
முதன்மைக்
கிளை ஆறுகள்
 - இடம் ஒஹைய்யோ ஆறு
 - வலம் மிசோரி ஆறு, ஆர்கன்சா ஆறு
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.
மிசிசிப்பி ஆற்றின் நிலப்படம்.

மிசிசிப்பி ஆறு, வட அமெரிக்காவின் மிகப் பெரிய ஆற்றுத் தொகுதியும், உலகின் பெரிய ஆற்றுத் தொகுதிகளுள் ஒன்றும் ஆகிய ஜெபர்சன்-மிசூரி-மிசிசிப்பி ஆற்றுத் தொகுதியின் ஒரு பகுதியாகும். நீள அடிப்படையில், 3,900 மைல்கள் (6,275 கிமீ) நீளம் கொண்ட இத்தொகுதி உலகின் நான்காவது பெரியதும், 572,000 க.அடி/செ (16,200 கமீ/செ) சராசரி நீர் வெளியேற்ற அளவுடன், உலகின் 10 ஆவது பெரிய தொகுதியாகவும் இது விளங்குகின்றது.

பூர்வீக அமெரிக்கர்கள் நீண்ட காலமாக மிசிசிப்பி மற்றும் துணை ஆற்றுப் பிரதேசங்களில் வாழ்ந்துள்ளனர்.அவர்களின் பெரும்பாலானவர்கள் வேட்டைக் குழுக்களாகவும், மந்தை மேய்ப்பாளர்களமாக காணப்பட்டனர்.எனினும் சில மலைகளில் வீடுகள் அமைக்கும் குழுவினர் போன்றவர்கள் செழிப்பான விவசாய சமூகங்களை உருவாக்கியிருக்கின்றனர்.1500இல் ஐரோப்பியர்களின் வருகையானது அப்பிரதேச மக்களின் பூர்வீக வாழ்வின் பாதையை மாற்றியது.

மிசிசிப்பி ஆற்றின் கிளை ஆறுகளுள் மிக நீளமானது மிசோரி ஆறும், அதிக கன அளவு கொண்ட கிளை ஆறு, ஒஹைய்யோ ஆறும் ஆகும்.

பெயர் வந்த காரணம்

தொகு

மெசிப்பி என்ற ஒபிஜிவே மொழியின் பிரேஞ்சு மொழிபெயர்ப்பிலிருந்தே ஆற்றின் பெயர் அதனடிப்படையிலே தோண்றியதாக கூறப்படுகின்றது.பல வளைவுகள் கொண்ட இந்த ஆற்றுக்கு மிசிசிப்பி என்ற பெயர் இந்திய வழிமுறையின் அடிப்படையில் ஏற்பட்டது.மிசிசிப்பி என்ற சொல் அல்கொன்றியன் இந்திய சொல்லாகும்.மிசி என்பது விசாலம்.சிப்பி என்பது தண்ணீர் என்றும் பொருள்படுகின்றது. மிசிசிப்பி ஒரு வசதியான ஆறாகக் கருதப்படுகின்றது.ஏனெனில்,இது ஏறத்தாழ கிழக்கு,தெற்கு,மத்திய மேற்கு அமரிக்கா மற்றும் மேற்கு அமெரிக்காவை பிரிக்கும் கோடாக காணப்படுகின்றது.

பெளதீக புவியியல்

தொகு

மிசிசிப்பி ஆற்றின் புவியியல் அமைப்பானது ஆற்றின் போக்கு, அதன் நீர்க்கொள்ளளவு, அதன் வெளியேற்றளவு, வரலாற்று ரீதியான மற்றும் வரலாற்று மாற்றங்கள் மற்றும் எதிர்கால மாற்றங்களின் சாத்தியக்கூறுகளின் சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆற்றின் ஊடாக செல்லும் புதிய மாட்ரிட் நில அதிர்வு மண்டலம் குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான பல்வேறு பல அடிப்படை புவியியல் அம்சங்கள் மனித வரலாற்றுக்கான அடிப்படையிலமைந்து அதன் நீர்வழிகள் மற்றும் அருகில் இருக்கும் நிலங்களைப் பயன்படுத்துவதற்கும் காரணமாக விளங்குகின்றன..

பிரிவுகள்

தொகு
 
மிசிசிப்பி ஆற்றின் மூன்று முக்கிய பகுதிகள்

மிசிசிப்பி நதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

  1. உயர் மிசிசிப்பி: அதன் உற்பத்தி இடத்திலிருந்து மிசோரி ஆற்றறோடு சேரும் பகுதி வரை
  2. மத்திய மிசிசிப்பி: இது மிசோரியிலிருந்து ஓஹியோ நதிக்கு நோக்கி கீழாக பாய்கிறது மற்றும்
  3. கீழ் மிசிசிப்பி: இது ஓஹியோவிலிருந்து மெக்ஸிகோ வளைகுடாவிற்கு செல்கிறது.

உயர் மிசிசிப்பி

தொகு
 
மிசிசிப்பி ஆற்றின் தொடக்கம்- இடாசுகா ஏரி
 
செயின்ட் அந்தோனி நீர்வீழ்ச்சி- மிசிசிப்பி
 
விசுக்கோசின் ஆறும் மிசிசப்பி ஆறும் சங்கம காட்சி -வயலூசிங் மாநில பூங்விகாவிலிருந்து

மேல் மிசிசிப்பி, மிசோரியில் உள்ள செயின்ட் லூயிஸில் உள்ள இடாசுகா ஏரியில் (lake Itasca) தொடங்குகிறது. மினசோட்டா, கிளியர்வாட்டர் கவுண்டியில் உள்ள இட்டாசுகா மாநிலப் பூங்காவில் கடல் மட்டத்திலிருந்து 1,475 அடி (450 மீ) அமைந்துள்ள எரியாகும்.இல்தஸ்கா எனும் சொல் ,உண்மை(veritas) என்ற இலத்தீன் சொல்லின் இறுதி நான்கு எழுத்தின் சேர்க்கையாவதுடன்,தலைக்கான(caput )இலத்தீன் சொல்லின் முதல் இரண்டு எழுத்துக்களாகும்.[5]

இது இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. பிறப்பிடம்-மின்னசோட்டாவின் மின்னியாபொலிஸின் செயிண்ட் ஆந்தோனி நீர்வீழ்ச்சியிலிருந்து 493 மைல்கள் (793 கி.மீ.) மற்றும்
  2. மனிதனால் (1,069 km). உருவாக்கப்பட்ட தொடரான ஏரிகள் போக்குவரத்து கால்வாயாக பயன்படுகின்றன.இது மின்னபொலிசுக்கும் மிசொரியின் செயின்ட் லூயிசுக்கும் இடையேயான 669 மைல்கள் (1,069 கி.மீ)

இல்தஸ்கா ஏரியில் ,இதன் ஆரம்ப உருவாக்க இடத்திலிருந்து சென்.லுயிஸ்,மிசூரி வரையான நீர்ப்பாதைகள் 43 அணைக்கட்டுகளால் மறிக்கப்பட்டுள்ளது.இவற்றில் 14அணைகள் மினியாப்பொலிஸ்ஸிற்கு மேல் முகத்துவாரப் பகுதயில் அமைந்துள்ளதுள்ளதுடன் மின்உற்பத்தி,உல்லாசப் பயணத்துறை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவை பயன்படுத்தப்படுகின்றன.எஞ்சிய 29அணைகளும் மினியாப்பொலிஸ்ஸின் நகரின் கீழ்பகுதியில் ஆரம்பிக்கின்றன.இவை அனைத்தும் பூட்டுகளைக் கொண்டுள்ளதுடன், மேல் ஆற்றின் வணிக வழிசெலுத்தலை அதிகரிப்பதற்காக கட்டப்பட்டுள்ளன.

உயர் மிசிசிப்பியானது தனிச்சிறப்பான பல இயற்கை மற்றும் செயற்கையான ஏரிகளைக் கொண்டுள்ளது.இதன் மிகப்பெரிய ஏரியாக மினசோட்டாவின்,கிராண்ட் ராபிட் நகருக்கு அருகில் அமைந்துள்ள வின்னிபிகோசிஸ் காணப்படுகின்றது.இது 7மைலுக்கும்(11கிமீ)அதிகமான நீளத்தையுடையது.ஒனலஸ்கா ஏரி(ஏழாம் இலக்க அணையால் உருவாக்கப்பட்டது) விஸ்கோன்ஸினின், லா குரேஸ்ஸே அருகில் அமைந்துள்ளதுடன், நான்கு மைலுக்கும்(3.2 கிமீ) அதிகமான அகலத்தைக் கொண்டது.அதற்கு அடுத்தபடியாக,இயற்கை ஏரியாக பேபின் ஏரி காணப்படுகின்றது.இது வின்கோன்ஸினின் சிப்பேவா ஆற்றின் கலிமுகத்தினால் ,மிசிசிப்பியின் மேல் பகுதயில் நுழையும் போது உருவாக்கப்படுகின்றது. இது இரண்டு மைலுக்கும் அதிகமான(3.2 கிமீ)அகலத்தைக் கொண்டது.[6]

மத்திய மிசிசிப்பி

தொகு

மிசோரியில் உள்ள செயின்ட் லூயிசில் மிசிசிப்பி ஆறு மிசோரி ஆற்றுடன் கலக்கும் இடம் தொடங்கி இலினாய்ஸ் மாகானம் கெய்ரோவின் ஓகியோ ஆறு வரையிலான 190 மைல்கள் (310 கிமீ) வரை பாயும் மிசிசிப்பி மத்திய மிசிசிப்பி என்றழைக்கப்படடுகிறது.[7][8]. மத்திய மிசிசிப்பி ஒப்பீட்டளவில் தடையின்றி பாய்கிறது. செயின்ட் லூயிஸில் இருந்து ஒஹாயோ ஆற்றுடன் கலக்கமிடத்தில், மத்திய மிசிசிப்பி 180 மைல் (290 கிமீ) மேல் மைல் (23 செமீ / கிமீ) சராசரியாக 1.2 அடிக்கு 220 மீட்டர் (67 மீ) விழும். ஓஹியோ ஆற்றுடன் சேருமிடத்தில், மிசிசிப்பி கடல் மட்டத்திலிருந்து 315 அடியில் (96 மீ) அமைந்துள்ளது. இல்லினாய்ஸ் மிசூரி மற்றும் மெரமேக் ஆறுகள் மற்றும் இல்லினாய்சின் கஸ்கஸ்கியா ஆறு ஆகியவற்றை தவிர, மிசிசிப்பி ஆற்றின் மத்திய பகுதியில் எந்த பெரிய கிளை நதிகளும் பாயவில்லை.

கீழ் மிசிசிப்பி

தொகு

ஓகியோ ஆற்றுடன் சங்கமிக்கும் இடத்திலிருந்து மெக்சிகோ வளைகுடாவின் முகத்துவாரம் வரையிலான மிசிசிப்பி ஆறானது மீழ் மிசிசிப்பி என்றழைக்கப்படுகிறது.இது தெற்கு நோக்கி 1000 மைல்கள் (1.600 கி.மீ) தூரத்திற்குப் பாய்ந்தோடுகிறது[9].

வடிகால் பரப்பு

தொகு
மிசிசிப்பி ஆற்றின் வடிநிலப்பகுதிகளை விளக்கும் காணொலி

மிசிசிப்பி ஆறானது உலகிலேயே நான்காவது வடிநிலப்பரப்பைக் கொண்ட ஆறாகும். இந்த வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 1,245,000 சதுர மைல்களுக்கும் (3,220,000 km2) அதிகமாகும்.இது அமெரிக்காவின் 30 மாநிலங்களையும் கனடாவின் 2 மாகானங்களையும் உள்ளடக்கிப் பரவியுள்ளது[10].இவ்வடிநில அமைப்பிலுள்ள ஆற்று நீரானது மெக்சிக்கோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கிறது.மிசிசிப்பி ஆற்றின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதியானது அமெரிக்க கண்டத்தின் 40% நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளன.நிச்பிடிப்பு பகுதியின் மிக உயரத்தில் அமைந்த புள்ளி ராக்கி மலைத்தொடரிலுள்ள மவுண்ட் எல்பெர்ட் ஆகும். அதன் உயரம் 14,440 அடி (4,400 மீ)[11].

வெளியேற்றம்

தொகு
 
மிசிசிப்பி ஆறு கடலுடன் சேரும் வானியல் காட்சித் தொடர்ப்படம். 2004 ஆம் ஆண்டு நாசா வெளியிட்டது

மிசிசிப்பி ஆறானது வருடத்திற்குச் சராசரியாக வினாடிக்கு 200 முதல் 700 ஆயிரம் கன அடி (7,000–20,000 மீ3/வி) வரை நீரை வெளியேற்றுகிறது[12].இருப்பினும் இந்த ஆறு கொள்ளளவு அடிப்படையில் உலகின் 5 ஆவது பெரிய ஆறாகவும் , அமேசானின் வெளியீட்டில் சிறு பங்கினைப் போன்றதாகவும் உள்ளது,மழை பருவ காலங்கலில் விநாடிக்கு கிட்டத்தட்ட 7 மில்லியன் கன அடி (சுமார் 200,000 மீ3 / வி) நீரை வெளியேற்றுகிறது[13]. அமேசான் ஆற்றின் ஓட்டத்தில் மிசிசிப்பி 8% அளவாக உள்ளது.

மிசிசிப்பி ஆற்றின் நன்னீரானது மெக்சிகோ வளைகுடாவில் அத்துலான்டிக் பெருங்கடலில் கலக்கும் போது உடனடியாக உப்பு நீரில் கரைந்துவிடுவதில்லை.நாசாவின் வானிலைப் புகைப்படங்களை ஆராயும் போது கடலின் நெடுந்தூரத்திற்கு கருமையான நாடா போன்று இந்த நன்னீரானது உப்பு நீருடன் கலக்காமல் செல்கிறது. கடல் நீரானது இதனைச் சூழ்ந்து வெளிர் நீல நிறத்தில் காணப்படுகிறது.இதன் மூலம் கடலில் மிசிசிப்பி ஆற்று நீரானது உடனடியாக கலக்கவில்லை என அறிய முடியும். இது மெக்சிகோ வளைகுடாவில் கலந்து புளோரிடா நீரினை வழியாகச் சென்று வளைகுடா நீரோட்டத்தில் கலக்கிறது.

கலாச்சார புவி்யியல்

தொகு

மாநில எல்லைகள்

தொகு

மிசிசிப்பி ஆறானது அமெரிக்காவின் மின்னசோட்டா முதல் லூசியானா வரை 10 மாநிலங்களின் வழியாகப் பாய்கிறது. மேலும் விசுக்கொசின், இலினாய்சு, டென்னிசி, மற்றும் மிசிசிப்பி மாநிலங்கள் இந்த ஆற்றின் கிழக்குப்பகுதியிலும் அயோவாஈ மிசோரி,மற்றும் அர்க்னசாஸ் மாநிலங்கள் மேற்குப்பகுதியிலுமாக மாநில எல்லைகளை வரையறை செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.மினசோட்டா மற்றும் லூசியானா ஆகிய இரு மாநிலப் பகுதிகள் ஆற்றின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. இந்த இரு மாநிலங்களில் எல்லைகள் மிசிசிப்பி ஆற்றினால் வரையறுக்கப்பட்டுள்ளது.

மின்னசோட்டா மற்றும் மிசிசிப்பி மாநில எல்லையான மிசிசிப்பி ஆற்றின் பிப்பின் ஏரி

ஆற்றோரம் நகரங்கள் மற்றும் வாழும் சமூகங்கள்

தொகு
பெருநகரப் பகுதி மக்கட்தொகை
மின்னபொலிஸ் செயின்ட் பவுல் Minneapolis-Saint Paul 3,615,901
பெருநகர செயின்ட் லூயிசு St. Louis 2,916,447
மெம்பிசு பெருநகர் பகுதி Memphis 1,316,100
புதிய ஓர்லீன்சு பெருநகர் பகுதி New Orleans 1,214,932
பேட்டன் ரவுஜ் பெருநகர் Baton Rouge 802,484
குவாது நகரம் Quad Cities, IA-IL 382,630
செயின்ட் கிளவுடு பெருநகர் பகுதி St. Cloud, MN 189,148
லா கிராசி பெருநகர் பகுதி La Crosse, WI 133,365
கிரார்டியூ-சாக்சன் பெருநகர் பகுதி Cape Girardeau–Jackson MO-IL 96,275
துபுக்கு கவுன்டி, ஐயோவா Dubuque, IA 93,653


மேற்கோள்கள்

தொகு
  1. Median of the 1,826 daily mean streamflows recorded by the USGS for the period 1978-1983 at Baton Rouge.
  2. Median of the 14,610 daily mean streamflows recorded by the USGS for the period 1967-2006.
  3. United States Geological Survey Hydrological Unit Code: 08-09-01-00- Lower Mississippi-New Orleans Watershed
  4. "Lengths of the major rivers". United States Geological Survey. Archived from the original on மார்ச் 5, 2009. பார்க்கப்பட்ட நாள் March 14, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Upham, Warren. "Minnesota Place Names: A Geographical Encyclopedia". Minnesota Historical Society. Archived from the original on ஜனவரி 8, 2011. பார்க்கப்பட்ட நாள் August 14, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Mississippi River Facts". Nps.gov. பார்க்கப்பட்ட நாள் November 6, 2010.
  7. Middle Mississippi River Regional Corridor: Collaborative Planning Study (July 2007 update). St. Louis, Missouri, USA: U.S. Army Corps of Engineers, St. Louis District. 2007. p. 28.
  8. "MMRP: Middle Mississippi River Partnership". Middle Mississippi River Partnership. Archived from the original on March 28, 2009. பார்க்கப்பட்ட நாள் May 25, 2011.
  9. Frits van der Leeden, Fred L. Troise, David Keith Todd: The Water Encyclopedia, 2nd edition, p. 126, Chelsea, Mich. (Lewis Publishers), 1990, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87371-120-3
  10. "Mississippi". nps.gov.
  11. "Mount Elbert, Colorado". Peakbagger. பார்க்கப்பட்ட நாள் May 21, 2014.
  12. "Americas Wetland: Resource Center". Americaswetlandresources.com. November 4, 1939. Archived from the original on மே 15, 2013. பார்க்கப்பட்ட நாள் November 6, 2010.
  13. "Hydrologie du bassin de l'Amazone" (in French) (PDF). Grands Bassins Fluviaux, Paris. November 22–24, 1993. http://horizon.documentation.ird.fr/exl-doc/pleins_textes/pleins_textes_6/colloques2/42687.pdf. பார்த்த நாள்: January 11, 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிசிசிப்பி_ஆறு&oldid=3845396" இலிருந்து மீள்விக்கப்பட்டது