1929
1929 (MCMXXIX) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1929 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1929 MCMXXIX |
திருவள்ளுவர் ஆண்டு | 1960 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2682 |
அர்மீனிய நாட்காட்டி | 1378 ԹՎ ՌՅՀԸ |
சீன நாட்காட்டி | 4625-4626 |
எபிரேய நாட்காட்டி | 5688-5689 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1984-1985 1851-1852 5030-5031 |
இரானிய நாட்காட்டி | 1307-1308 |
இசுலாமிய நாட்காட்டி | 1347 – 1348 |
சப்பானிய நாட்காட்டி | Shōwa 4 (昭和4年) |
வட கொரிய நாட்காட்டி | 18 |
ரூனிக் நாட்காட்டி | 2179 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4262 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 18 - லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவர் ஜனவரி 29 இல் துருக்கியை அடைந்தார்.
- பெப்ரவரி 14 - சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று "அல் காப்போன்" என்பவனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
- பெப்ரவரி 18 - முதலாவது அகடெமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.
- மே 15 - ஒகைய்யோவில் கிளீவ்லாந்து நகரில் மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
- ஜூன் 8 - ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ராம்சி மாக்டொனால்ட் தலைமையில் ஆட்சி அமைத்தது.
- ஜூலை 23 - இத்தாலி அரசு வெளிநாட்டுச் சொற்கள் அனைத்துக்கும் தடை விதித்தது.
- ஜூலை 27 - மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை
- செப்டம்பர் 7 - பின்லாந்தில் நீராவிப் படகு ஒன்று மூழ்கியதில் 136 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 17 - லித்துவேனியாவில் இடம்பெற்ற புராட்சி ஒன்றில் அதிபர் ஆகுஸ்டீனஸ் வொல்டெமாரெஸ் பதவியிழந்தார். அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியமைத்தார்.
- நவம்பர் 1 - முழுமையான சூரிய கிரகணம் நிகழ்ந்தது.
- நவம்பர் - விளாடிமிர் சுவோர்க்கின் வர்ணத் தொலைக்காட்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
- நவம்பர் 18 - அத்திலாந்திக் பெருன்கடலில் நியூபவுன்லாந்துக் கரையில் இடம்பெற்ற 7.2 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக பலத்த சேத எற்பட்டது. 28 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 29 - தென் முனைக்கு மேலாகப் பறந்த முதல் மனிதர் ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் என்பவர்.
- டிசம்பர் 29 - இந்திய தேசியக் காங்கிரஸ் விடுதலையை வலியுறுத்தியது.
நாள் அறியப்படாதவை
தொகு- ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர்
பிறப்புகள்
தொகு- ஜனவரி 15 - மார்டின் லூதர் கிங், அமெரிக்க கறுப்பினத் தலைவர் (இ. 1968)
- சனவரி 16 - ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (இ. 2014)
- பெப்ரவரி 28 - பிராங்க் கெரி, கட்டிடக்கலைஞர்
- ஏப்ரல் 1 - டி. கே. கோவிந்த ராவ் கருநாடக இசைக் கலைஞர் (இ. 2011)
- ஆகஸ்ட் 1 - ஹஃபிசுல்லா அமீன், ஆப்கானிஸ்தானின் அதிபர் (இ. 1979)
- ஆகஸ்ட் 19 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (இ. 2008)
- செப்டம்பர் 7 - ஹரி ஸ்ரீனிவாசன், தொழுநோய் மருத்துவர், எழுத்தாளர் (இ. 2015)
- செப்டம்பர் 28 - லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி
- டிசம்பர் 7 - ந. பாலேஸ்வரி, ஈழத்துப் புதின எழுத்தாளர் (இ. 2014)
- டிசம்பர் 31 - ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர்
- கே. டானியல், ஈழத் தமிழ் எழுத்தாளர்
- கே. எஸ். கோபாலகிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 2015)
இறப்புகள்
தொகு- ஏப்ரல் 4 - கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் ஊர்தியைக் கண்டுபிடித்த ஜெர்மனிய வாகனப்பொறியாளர், (பி. 1844)
- பாம்பன் சுவாமிகள் (பி. 1851))
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - டெ புரோலி
- வேதியியல் - ஆர்தர் ஹார்டென், Hans Karl August Simon von Euler-Chelpin
- மருத்துவம் - Christiaan Eijkman, Sir Frederick Gowland Hopkins
- இலக்கியம் - தாமசு மாண்
- அமைதி - பிராங்க் கெலாக்