ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்

ஐக்கிய அமெரிக்க நாட்டின் அரசுத் தலைவரும் நாட்டுத் தலைவரும்

ஐக்கிய அமெரிக்க நாட்டுக் குடியரசுத் தலைவர் ( President of the United States of America, POTUS)[1] என்பவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். கூட்டரசின் செயலாக்கப் பிரிவின் தலைவராக உள்ளார். ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் முதற் பெரும் படைத்தலைவராகவும் உள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாடு குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் முத்திரை
குடியரசுத் தலைவரின் கொடி
தற்போது
ஜோ பைடன்

சனவரி 20, 2021 (2021-01-20) முதல்
ஐக்கிய அமெரிக்க அரசின் செயலாக்கப் பிரிவு
குடியரசுத் தலைவரின் செயல் அலுவலகம்
உறுப்பினர்அமைச்சரவை
உள்நாட்டு கொள்கை மன்றம்
தேசிய பொருளியல் மன்றம்
தேசிய பாதுகாப்பு மன்றம்
வாழுமிடம்வெள்ளை மாளிகை
அலுவலகம்வாசிங்டன், டி. சி.
நியமிப்பவர்வாக்காளர் குழு
பதவிக் காலம்நான்கு ஆண்டுகள்
ஒருமுறை புதுப்பிக்கத்தக்கது
அரசமைப்புக் கருவிஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு
முதலாவதாக பதவியேற்றவர்சியார்ச் வாசிங்டன்
ஏப்ரல் 30, 1789
உருவாக்கம்மார்ச்சு 4, 1789
ஊதியம்ஆண்டுக்கு $400,000
இணையதளம்வெள்ளை மாளிகை

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் உலகில் மிகுந்த செல்வாக்குடைய நபராகக் கருதப்படுகின்றார்.[2][3][4][5] உலகின் மிகுந்த அணுசக்தி ஆயுதங்களைக் கொண்ட மிகுந்த செலவிடப்படும் படைத்துறையின் முதற் பெரும் தலைவராகவும் பெயரளவில் மற்றும் மெய்யான மொ.உ.உ அடிப்படையில் மிகப்பெரும் பொருளியல் நிலையைக் கொண்ட நாட்டின் அதிபராகவும் தற்காலத்தில் உலகில் உள்ள ஒரே வல்லரசின் தலைவர் என்பதாலும் இவ்வாறு கருதப்படுகின்றார். ஐக்கிய அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்கு வன்மையாகவும் மென்மையாகவும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் இரண்டாம் சட்டவிதியின்படி ஐக்கிய அமெரிக்க நாட்டின் செயலாக்க அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கூட்டரசு சட்டத்தை செயற்படுத்தவும் கூட்டரசு அதிகாரிகள், பேராளர்கள், கட்டுப்பாட்டு ஆணையங்கள் மற்றும் நீதிமன்றங்களின் அதிகாரிகள் ஆகியோரை நியமிக்கவும் மேலவையின் பரிந்துரையின்படியும் ஒப்புமையுடனும் வெளிநாடுகளுடன் இறுதி உடன்பாடுகளை மேற்கொள்ளவும் அதிகாரமுள்ளது. தவிரவும் தண்டனைகளுக்கு மன்னிப்பு வழங்கிடவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் சட்டமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும் தள்ளி வைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.[6] தமது கட்சி சார்பில் சட்டமன்ற அலுவலை முடிவு செய்யும் பொறுப்பும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளை வழிநடத்தும் பொறுப்பும் இவருக்குள்ளது.[7] ஐக்கிய அமெரிக்கா நிறுவப்பட்டதிலிருந்து குடியரசுத் தலைவரின் அதிகாரங்களும் கூட்டரசின் பங்காற்றலும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது.[8]

குடியரசுத் தலைவர் நான்காண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் வாக்காளர் குழு மூலமாக மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்; தேசிய அளவில் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இரு கூட்டரசு பதவிகளில் இதுவொன்று, மற்றது ஐக்கிய அமெரிக்காவின் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கானதாகும்.[9] 1951இல் இயற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பின் 22ஆவது சட்டத்திருத்தத்தின்படி மூன்றாம் முறை தொடர்ந்து முழுமைக்கால குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் முன்னதாக குடியரசுத் தலைவராகவோ, மற்றொருவர் பதவிக் காலத்தில் இரண்டாண்டுகளுக்கு மேலாக குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருந்தாலோ ஒருமுறைக்கு மேலாக போட்டியிடுவதை தடை செய்கின்றது. இதுவரை 58 முழு நான்காண்டுப் பதவிக் காலங்களில் 44 நபர்கள் (கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாகவின்றி இருமுறை தனித்தனியாக இருந்ததை கணக்கிலெடுத்து) 45 பதவிகளில் இருந்துள்ளனர்.[10] சனவரி 20, 2021இல் ஜோ பைடன் 46வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்;இவரே தற்போதைய குடியரசுத் தலைவராக விளங்குகின்றார்.

தகுதிகள்

தொகு

அரசியலமைப்பின் இரண்டாவது சட்டவிதியின் முதல் பிரிவு, ஐந்தாம் உட்கூறு இப்பதவிக்கானத் தகுதிகளை விவரிக்கின்றது. குடியரசுத் தலைவர்:

 • ஐக்கிய அமெரிக்காவின் இயல் குடிமகனாக இருத்தல் வேண்டும்;[note 1]
 • முப்பத்தைந்து அகவையினராக இருத்தல் வேண்டும்.42 அகவையில் தியொடோர் ரோசவெல்ட் மிகுந்த இளையவராகவும் 78 அகவையில் ஜோ பைடன் மிகுந்த வயதினராகவும் பதவி ஏற்றனர்.
 • ஐக்கிய அமெரிக்காவில் குறைந்தது பதினான்காண்டுகள் நிரந்தரமாக வசித்தவராக இருத்தல் வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்கள்

தொகு

தற்போது வாழ்ந்துவரும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்

தொகு

குறிப்புகள்

தொகு
 1. அரசியலமைப்பு ஏற்கப்பட்ட காலத்தில் அகவை மற்றும் வசிப்பிடம் குறித்த தகுதிகளை பெற்றிருந்த, வெளிநாட்டில் பிறந்த அமெரிக்கக் குடிமகன்கள் தகுதி பெற்றவராக விலக்களிக்கப்பட்டனர்; இருப்பினும் இந்த விதிவிலக்கு தற்போது வழக்கொழிந்து போனது.

மேற்சான்றுகள்

தொகு
 1. Safire, William (October 12, 1997). "On language: POTUS and FLOTUS". New York Times. New York: The New York Times Company. பார்க்கப்பட்ட நாள் May 11, 2014.
 2. "The Most Powerful Man in the World is a Black Man – The Los Angeles Sentinel". Lasentinel.net. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
 3. "Who should be the world's most powerful person?". The Guardian (London). January 3, 2008. http://www.guardian.co.uk/commentisfree/2008/jan/03/uselections2008.world. 
 4. Jon Meacham (December 20, 2008). "Meacham: The History of Power". Newsweek. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
 5. Fareed Zakaria (December 20, 2008). "The NEWSWEEK 50: Barack Obama". Newsweek. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
 6. "Transcript of the Constitution of the United States – Official". Archives.gov. பார்க்கப்பட்ட நாள் September 4, 2010.
 7. Pfiffner, J. P. (1988). "The President's Legislative Agenda". Annals of the American Academy of Political and Social Science 499: 22–35. doi:10.1177/0002716288499001002. 
 8. The Influence of State Politics in Expanding Federal Power,' Henry Jones Ford, Proceedings of the American Political Science Association, Vol. 5, Fifth Annual Meeting (1908) Retrieved March 17, 2010.
 9. Our Government • The Executive Branch பரணிடப்பட்டது 2009-01-26 at the வந்தவழி இயந்திரம், The White House.
 10. "The Executive Branch". Whitehouse.gov. Archived from the original on ஜனவரி 26, 2009. பார்க்கப்பட்ட நாள் January 20, 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help). குரோவர் கிளீவ்லாண்ட் தொடர்ச்சியாக இல்லாது இருமுறை குடியரசுத் தலைவராக இருந்துள்ளார், எனவே அவர் இருமுறை கணக்கிடப்பட்டுள்ளார்; 22வது மற்றும் 24வது குடியரசுத் தலைவராக இருந்துள்ளார்.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Presidents of the United States
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அஅலுவல்முறை
குடியரசுத் தலைவர்களின் வரலாறுகள்
பிற