இட்சாக் ரபீன்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin, எபிரேயம்: יִצְחָק רַבִּין, மார்ச் 1, 1922நவம்பர் 4, 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத் தலைவரும் ஆவார்[1]. இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும், 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1994 ஆம் ஆண்டில், சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது[2]. 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.

இட்சாக் ரபீன்
Yitzhak Rabin
இஸ்ரேலின் 5வது பிரதமர்
பதவியில்
ஜூலை 13, 1992 – நவம்பர் 4, 1995
முன்னையவர்இட்சாக் சமீர்
பின்னவர்சிமோன் பெரெஸ்
பதவியில்
ஜூன் 3, 1974 – ஏப்ரல் 22, 1977
முன்னையவர்கோல்டா மேயர்
பின்னவர்மெனாக்கெம் பெகின்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-03-01)1 மார்ச்சு 1922
ஜெருசலேம், பாலஸ்தீனம் (இப்போது இஸ்ரேல்)
இறப்புநவம்பர் 4, 1995(1995-11-04) (அகவை 73)
டெல் அவீவ், இஸ்ரேல்
அரசியல் கட்சிகூட்டமைப்பு, தொழிற் கட்சி
துணைவர்லியா ரபீன்
பிள்ளைகள்டாலியா
யுவால்
1993, செப்டம்பர் 13 இல் ஒஸ்லோ அமைதி மாநாட்டில் இட்சாக் ரபீன், பில் கிளிண்டன், யாசர் அரபாத்

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ""Yitzhak Rabin - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 18 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
  2. ""Yitzhak Rabin - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 19 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சாக்_ரபீன்&oldid=3682019" இலிருந்து மீள்விக்கப்பட்டது