ஜானகி அம்மாள்
இடவலத்து கக்காட்டு ஜானகி அம்மாள் (Janaki Ammal Edavalath Kakkat) உயிர்க்கல மரபியலிலும் தொகுதிப் புவியியலிலும் ஆராய்ச்சி நடத்திய ஓர் இந்தியத் தாவரவியல் வல்லுநர்.[1] இவரது மிகவும் குறிப்பிடத்தக்க வேலை கரும்பு மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை சார்ந்தது.[2] இவர் கேரள மழைக் காடுகளில் இருந்து தேவையான மூலிகை, பொருளாதார மதிப்புள்ள பல்வேறு தாவரங்களைத் திரட்டினார். மிக்சிகன் பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவராவார்.[3]
ஜானகி அம்மாள் | |
---|---|
பிறப்பு | 4 நவம்பர் 1897 தலச்சேரி |
இறப்பு | 7 பெப்பிரவரி 1984 (அகவை 86) சென்னை |
படித்த இடங்கள் | |
பணி | தாவரவியலாளர், உயிரியல் அறிஞர், பல்கலைக்கழகப் பேராசிரியர், cell biologist, lecturer |
வேலை வழங்குபவர் |
|
கையெழுத்து | |
இளமை வாழ்க்கை
தொகுஜானகி அம்மாள் , 1897ல் கேரளத்திலுள்ள தலைசேரியில் பிறந்தார்.[4] இவரது தந்தை, திவான் பகதூர் இடவலத்து கக்காட்டு கிருஷ்ணன் சென்னை மாகாணத்தின் துணை நடுவராகப் பணியாற்றியவர். ஜானகிக்கு ஆறு சகோதரர்களும் ஐந்து சகோதரிகளும் இருந்தனர். இவரது குடும்பத்தில், பெண்கள் அறிவுப்புலமைக் கல்வியிலும் நுண்கலைகளிலும் படிப்பைத் தொடர ஊக்கப்படுத்தப்பட்டனர். ஆனால் ஜானகி அம்மாள் தாவரவியல் படிப்பை தேர்வு செய்தார் .தலைசேரியில் பள்ளி படிப்பை முடித்த பின் , சென்னைக்கு சென்றார். அங்கு அரசி மேரி கல்லூரியில் இருந்து இளங்கலை பட்டமும் ,1921இல் சென்னை மாநிலக் கல்லூரியில் இருந்து தாவரவியலில் ஆனர்சு(கெளரவப்) பட்டமும் பெற்றார். மாநிலக் கல்லூரி ஆசிரியர்கள் தாக்கம் காரணமாக ஜானகி அம்மாள் உயிர்க்கல மரபியலில் ஆர்வம் கொண்டார்.
வாழ்க்கைப்பணி
தொகுஜானகி அம்மாள் சென்னை கிறித்தவக் கல்லூரியில் கல்வி கற்பித்தர். அதேநேரத்தி அமெரிக்க மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பார்பர் நினைவுப் புலமையாளராக இருந்தார். அங்கு இவர் 1925இல் தன் முதுவர் பட்டத்தைப் பெற்றார். பிறகு இந்தியாவுக்குத் திரும்பிவந்து மீண்டும் சென்னை கிறித்தவக் கல்லூரியில் கல்விப்பணியைத் தொடர்ந்தார். இவர் மீண்டும் பார்பர் நினைவு ஆய்வாளராக மிச்சிகன் பல்கலைக்க்ழகத்துக்குச் சென்றார் அங்கு 1931இல் முதுமுனைவர் (D.Sc.) பட்டத்தைப் பெற்றார். திரும்ப இந்தியா வந்து திருவனந்தபுரம் மகாராசா கல்லூரியில் தவரவியல் பேராசிரியராஙப் பணியேற்றார். அங்கு 1932முதல் 1934 வரை பணிபுரிந்தார். பிறகு 1934முதல்1939 வரை கோவைக் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் மரபியலாளராகப் பணிபுரிந்தார். பிறகு இலண்டன் ஜான் இன்னேசு தோட்டக்கலை நிறுவனத்தில் இணை உயிர்க்கலவியலாளராகப் பணிபுரிந்தார். பின்னர் விசுலேவில் இருந்த அரசு தோட்டக்கலைக்கழகத்தில் 1945 முதல் 1951 வரை உயிர்க்கலவியலாளராகப் பணிபுரிந்தார்.
இந்தியத் தாவரவியல் அளக்கை அமைப்பை மீள திருத்தி ஒருங்கமைக்க ஜவகர்லால் நேரு அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு 1951இல் திரும்பினார்.[5] இவர் 1952 அக்தோபர் 14இல் இந்தியத் தாவரவியல் அளக்கை அமைப்பின் சிறப்பு அலுவலராக அமர்த்தப்பட்டார்.[6] இவர் இந்தியத் தாவரவியல் அளக்கை அமைப்பின் பொது இயக்குநராகப் பணிபுரிந்தார்.[7]
இவர் அங்குப் பல கலப்பு மரபின வகைகளை உருவாக்கினார்: கரும்பு x Zea, கரும்பு x Erianthus, கரும்பு x Imperata, கரும்பு x சோளம். அந்நிறுவனத்தில் இவர் மேற்கொண்ட கரும்புசார்ந்த உயிர்க்கலவியல் ஆய்வுகள் பல சிறப்பினக் கலப்பு, மரபினக்கலப்பு வகைகளை கரும்பையும் அதைச் சார்ந்த புல்லினங்களையும் புற்பேரினங்களையும் (குறிப்பாக மூங்கிலையும்) இணைத்து உருவாக்க வழிவகுத்தது.
பிறகு இவர் பல இந்திய அரசுப் பணிகளில் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்தார். அலகாபாத் நடுவண் தாவர ஆய்வகத் தலைமையேற்றார். ஜம்மு மண்டல ஆர்ராய்ச்சி அய்வகச் சிறப்பு அலுவலராக இருந்தார். சிறிது காலம் டிராம்பே [[அணு ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்தார். இறுதியாகச் சென்னைக்குத் திரும்பிவந்து 1970 நவம்பரில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் உயராய்வு மையத்தில் தகவுறு அறிவியலாளராக அமர்ந்தார். அப்போது சென்னைக்கு அருகில் இருந்த அம்மையத்தின் மதுரவாயல் கள ஆய்வகத்தில் இறப்புவரை பணிபுரிந்தார். இவர் 1984இல் இயற்கை எய்தினார்.
ஆராய்ச்சிகள்
தொகுவிருதுகளும் தகைமைகளும்
தொகுஜானகி அம்மாள் 1935இல் இந்திய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1957இல் இந்திய தேசிய அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு 1956இல் மிச்சிகான் பல்கலைக்கழகம் தகைமை LL.D. பட்டம் வழங்கி பெருமை தந்தது. இந்திய அரசு 1977இல் இவருக்குப் பத்மசிறி பட்டம் வழங்கியது.[8] இந்திய அரசின் சுற்றுச்சூழல், கானியல் அமைச்சகம் 2000ல் இவரது பெயரால் வகைப்பாட்டியலுக்கான தேசிய விருதை நிறுவியது.
வகைப்பாட்டியலுக்கான ஜானகி அம்மாள் தேசிய விருது
தொகுஉயிரியல் வகைப்பாட்டியலில் சிறந்த பணிகளுக்கான வளர்ச்சியைத் தூண்டவும் அப்புலத்தில் இளம்மாணவரையும் அறிவாளிகளையும் ஊக்கப்படுத்தவும் 1999இல் ஜானகி அம்மாள் விருது உருவாக்கப்பட்டது. இரு விருதுகளில் ஒன்று நிலைத்திணையியல் (தாவரவியல்) துறையில் வகைப்பாட்டியலில் சிறந்த பஙளித்தவர்களுக்கும் மற்றொன்று விலங்கியல் வகைப்பட்டியல் அல்லது நுண்ணுயிரியலில் சிறந்த பங்களிப்பு நல்கியவர்களூக்கும் வழங்கப்படும். இவ்விரண்டும் முறையே ஈ. கே. ஜானகி அம்மாள் நிலைத்தினை வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் ஈ.கே. ஜானகி அம்மாள் விலங்கியல் வகைப்பாட்டியல் தேசிய விருது என்றும் வழங்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ C V Subramanian. "Edavaleth Kakkat Janaki Ammal" (PDF). Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "கரும்புக்காக கல்யாணம் கூட செய்து கொள்ளாத சாதனைப் பெண்மணி!". தினமணி. The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|work=
- ↑ "எடவலேத் கக்கட் ஜானகி அம்மா!". தினமணி. The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); External link in
(help)|work=
- ↑ Subramanian, C V. "Edavaleth Kakkat Janaki Ammal — IAS Women in Science" (PDF). Indian Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 29 ஆகஸ்ட் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Seminar to remember woman scientist". The Hindu. 27 October 2010 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101108092922/http://www.hindu.com/2010/10/27/stories/2010102758040300.htm. பார்த்த நாள்: 10 August 2013.
- ↑ "Brief History of the Botanical Survey of India". Botanical Survey of India. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 10 August 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: unfit URL (link) - ↑ "Vice-President to open Inter-University Centre for Biosciences". The Hindu. 2 July 2010. http://www.thehindu.com/news/national/kerala/article496900.ece. பார்த்த நாள்: 10 August 2013.
- ↑ "Padma Shri" (PDF). Padma Shri. 2015. Archived from the original (PDF) on நவம்பர் 15, 2014. பார்க்கப்பட்ட நாள் June 23, 2015.
பிற தகவல் வாயில்கள்
தொகு- S Kedharnath, Edavaleth Kakkat Janaki Ammal (1897–1984), Biographical Memoirs of Fellows of the Indian National Science Academy, 13, pp. 90–101, with portrait (1988).
- P Maheshwari and R N Kapil, Fifty Years of Science in India. Progress of Botany, Indian Science Congress Association, Calcutta, pp. 110, 118 (1963).
வெளி இணைப்புகள்
தொகு- http://envfor.nic.in/content/e-k-janaki-ammal-national-award-taxonomy பரணிடப்பட்டது 2015-08-14 at the வந்தவழி இயந்திரம்
- http://scroll.in/article/730186/remembering-dr-janaki-ammal-pioneering-botanist-cytogeneticist-and-passionate-gandhian
- http://www.oneindia.com/2006/10/09/janaki-ammal-award-to-osmania-and-punjabi-university-scientists-1160406282.html
- http://www.iisc.ernet.in/currsci/jan252007/260.pdf பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
- http://www.authorstream.com/Presentation/wahidulrehman-2252516-life-work-janaki-ammal-powerpoint-presentation/