ஜேக்கப் சகாயகுமார் அருணி
ஜேக்கப் என்ற 'ஜேக்கப் சகாயகுமார் அருணி[1] (சூன் 4, 1974 - நவம்பர் 4, 2012), சென்னையைச் சேர்ந்த வாலுவர் (சமையற் கலை நிபுணர்). ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்[2] உள்ளிட்ட பலருக்கும் உணவு சமைத்துக் கொடுத்துள்ளார். பல்வேறு பெரிய உணவங்களுக்கும் தலைமை வாலுவராகப் [2] பணி புரிந்துள்ள இவர், சங்கரா வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கேட்டரிங்க் துறையின் இயக்குராக இருந்தார்.[2]
ஜேக்கப் | |
---|---|
பிறப்பு | ஜேக்கப் சகாயகுமார் அருணி சூன் 4, 1974 உத்தமபாளையம், தமிழ்நாடு |
இறப்பு | நவம்பர் 4, 2012 சென்னை | (அகவை 38)
இறப்பிற்கான காரணம் | மாரடைப்பு |
தேசியம் | இந்தியர் |
அறியப்படுவது | சமையல் கலை நிபுணர் |
இளமைக் காலம்
தொகுஇவர் தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர்.[3] இவர் நான்கு வயதில்[4] தாய், மருத்துவர் விமலா அருணியிடமிருந்து[1] சமையற்கலை கற்றுக்கொண்டதாகவும், 14-வயதில்[5] இருந்து சமையற் பயிற்சி பெற்றதாகவும் பல்வேறு கருத்து நிகழ்கிறது. இவர் மதுரை, அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர்.[1][4]
கின்னஸ் விருது
தொகு2010–ம் ஆண்டு மார்ச் மாதம் 24 மணி நேரத்தில் 485 வகையான உணவுகளை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.[4][5][6][7]
நூல்கள்
தொகுநிகழ்ச்சிகள்
தொகுசன் தொலைக்காட்சியில், ஆஹா என்ன ருசி என்ற சமையல் தொடரில் தன்னுடைய சமையல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்களித்து வந்தார்.[10]
இறப்பு
தொகுமாரடைப்புக் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 05,நவம்பர்,2012 அன்று காலமானார்.[10]
குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Chef Jacob Sahaya Kumar Aruni dies of heart attack in Chennai". Archived from the original on 2013-07-10. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 2.2 "Jacob's kitchen no more". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ ""ஆஹா என்ன ருசி" புகழ் ஜேக்கப் திடீர் மரணம்!". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 4.0 4.1 4.2 "சமையல் நிபுணர் மாரடைப்பால் ஜேக்கப் மரணம்". பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 5.0 5.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "சன் டிவி சமையல் கலை நிபுணர் செஃப் ஜேக்கப் மரணம்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "'கின்னஸ்' சாதனை படைத்த சமையல் கலை நிபுணர் ஜேக்கப் மாரடைப்பால் மரணம்". பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ மணக்கும் தமிழகம் ( பகுதி 1- வெஜிடேரியன்)
- ↑ 9.0 9.1 9.2 "எழுத்தாளர் (Author) - செஃப் ஜேக்கப்() » பக்கம் - 1". பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 10.0 10.1 "சமையல் கலையில் கின்னஸ் சாதனை படைத்த செஃப் ஜேக்கப் காலமானார்". Archived from the original on 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 06 நவம்பர் 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)