1600
1600 (MDC) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். இது 2000 ஆண்டுக்கு முன்னர் வரும் கடைசி நூற்றாண்டு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1600 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1600 MDC |
திருவள்ளுவர் ஆண்டு | 1631 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2353 |
அர்மீனிய நாட்காட்டி | 1049 ԹՎ ՌԽԹ |
சீன நாட்காட்டி | 4296-4297 |
எபிரேய நாட்காட்டி | 5359-5360 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1655-1656 1522-1523 4701-4702 |
இரானிய நாட்காட்டி | 978-979 |
இசுலாமிய நாட்காட்டி | 1008 – 1009 |
சப்பானிய நாட்காட்டி | Keichō 5 (慶長5年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1850 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3933 |
நிகழ்வுகள்
தொகு- சனவரி 1 - இசுக்கொட்லாந்து இராச்சியம் இந்நாளை புத்தாண்டு நாளாக அறிவித்தது.
- சனவரி - செபால்டு டெ வீர்ட் என்பவரால் முதல் தடவையாக போக்லாந்து தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
- பெப்ரவரி 17 - மெய்யியலாளர் கியோர்டானோ புரூணோ ரோம் நகரில் சமயத்துக்கு எதிரான கருத்துகள் தெரிவித்தமைக்காக எரித்துக் கொல்லப்பட்டார்.
- பெப்ரவரி 19 - பெருவின் ஹுவாய்னப்புட்டினா எரிமலை வெடித்ததில் பெரும் அழிவு ஏற்பட்டது.
- டிசம்பர் 31 - இங்கிலாந்தில் கிழக்கிந்திய நிறுவனத்திற்கு அரசப் பட்டயம் வழங்கப்பட்டது.
- புவியின் காந்தப் புலம் பற்றிய விரிவான நூலை வில்லியம் கில்பர்ட் வெளியிட்டார்.
- சான் மரீனோவின் அரசியலமைப்பு எழுதப்பட்டது.
பிறப்புகள்
தொகு- ஜனவரி 28 - ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)
- நவம்பர் 19 - இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் (இ. 1649)
இறப்புகள்
தொகு- பெப்ரவரி 17 - கியோர்டானோ புரூணோ, இத்தாலிய மெய்யியலாளர் (பி. 1548)
- என்றீக்கே என்றீக்கசு, போர்த்துக்கீச இயேசு சபை போதகர், மதப்பரப்புனர் (பி. 1520)