கியோர்டானோ புரூணோ

இயோர்தானோ புரூணோ (Giordano Bruno; /ɔːrˈdɑːn ˈbrn/; Italian: [dʒorˈdaːno ˈbruːno]; இலத்தீன்: Iordanus Brunus Nolanus; இயற்பெயர்: பிலிப்போ புரூணோ (Filippo Bruno, சனவரி அல்லது பெப்ரவரி 1548 – 17 பெப்ரவரி 1600) என்பவர் இத்தாலிய தொமினிக்கத் துறவியும், மெய்யியலாளரும், கணிதவியலாளரும், கவிஞரும், அண்டவியலாளரும், மறைவியலாளரும் ஆவார்.[3] அவர் அண்டவியல் கோட்பாடுகளுக்கு பெயர் பெற்றவர், இது அப்போதைய புதினமான கோப்பர்னிக்கன் மாதிரியை கருத்தியல் ரீதியாக விரிவுபடுத்தியது. விண்மீன்கள் அவற்றின் சொந்தக் கோள்களால் சூழப்பட்ட தொலைதூர சூரியன்கள் என்று அவர் முன்மொழிந்தார், அத்துடன் இக்கோள்கள் சொந்தமாக உயிரினங்களை வளர்க்கும் வாய்ப்புள்ளதாகக் கூறினார். இது அண்டப் பன்மைத்துவம் எனப்படும் அண்டவியல் நிலை எனப்படுகிறது என முன்மொழிந்தார். அண்டம் எல்லையற்றது என்றும் அதற்கு "மையம்" இருக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இயோர்தானோ புரூணோ
Giordano Bruno
1578 "Livre du recteur" என்ற மரஞ்செதுக்கலில் இருந்து வரையப்பட்ட நவீனகாலஓவியம்
பிறப்புபிலிப்போ புரூணோ
சனவரி/பெப்ரவரி 1548
நோலா, நாப்பொலி இராச்சியம்
இறப்பு17 பெப்ரவரி 1600 (அகவை 51–52)
உரோமை, திருத்தந்தை நாடுகள்
இறப்பிற்கான
காரணம்
எரிக்கப்பட்டு மரணதண்டனை
காலம்மறுமலர்ச்சி (ஐரோப்பா)
பள்ளிமறுமலர்ச்சி மனிதநேயம்
நியோபைதகோரியனியம்
முக்கிய ஆர்வங்கள்
அண்டவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
அண்டப் பன்மைத்துவம்
செல்வாக்குச் செலுத்தியோர்

1593 ஆம் ஆண்டு முதலாக, நித்திய சாபம், திரித்துவம், கிறித்துவின் தெய்வீகம், மரியாளின் கன்னித்தன்மை மற்றும் உட்கருப்பொருள் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய கத்தோலிக்கக் கோட்பாடுகளை மறுத்த குற்றச்சாட்டின் பேரில் புருணோ உரோமையில் மதங்களுக்கு எதிரான குற்றச்சாட்டிற்கு உட்படுத்தப்பட்டார். புரூணோவின் அனைத்து இறைக் கொள்கையையோ, அல்லது ஆன்மாவின் மாற்றம் (மறுபிறப்பு) பற்றிய அவரது போதனையயோ தேவாலயம் இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.[4] விசாரணையின் முடிவில் அவர் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு, 1600 பெப்ரவரி 17 இல் உரோமின் காம்போ டி ஃபியோரியில் எரிக்கப்பட்டார்.

அவர் இறந்த பிறகு, அவர் கணிசமான புகழைப் பெற்றார், குறிப்பாக 19-ஆம், 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் அறிவியலுக்கான தியாகியாகக் கொண்டாடப்பட்டார். இருப்பினும் பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் அவர் மீதான விசாரணை அவரது மதவெறிக்கானதே அன்றி, அவரது அண்டவியல் பார்வைகளுக்காக அல்ல என்று ஒப்புக்கொள்கிறார்கள்.[5][6][7][8][9] இருப்பினும் சில வரலாற்றாசிரியர்கள்[10] புரூணோவின் இறப்பிற்கு முக்கிய காரணம் அவரது அண்டவியல் பார்வைகள் என்று வாதிடுகின்றனர். இவரது வரலாறு இன்னும் கட்டற்ற சிந்தனை, மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.[11][12]

அண்டவியல் தவிர, புரூணோ நினைவாற்றல் நுட்பங்கள் மற்றும் கொள்கைகளை விளக்கும் "நினைவாற்றல் கலை" பற்றி விரிவாக எழுதினார். புரூனோ இசுலாமிய சோதிடம் (குறிப்பாக அவெரோசின் மெய்யியல்),[13] நியோபிளாட்டோனிசம், மறுமலர்ச்சி எர்மெடிசிசம், எகிப்திய கடவுளான தோத்தை சுற்றியுள்ள ஆதியாகமம் போன்ற புனைவுகளால் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாற்றாசிரியர் பிரான்சிஸ் யேட்சு வாதிடுகிறார்.[14] புரூணோவின் பிற ஆய்வுகள் கணிதத்திற்கான அவரது தரமான அணுகுமுறை, மொழிக்கான வடிவவியலின் இடஞ்சார்ந்த கருத்துகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றன.[15]

மேற்கோள்கள் தொகு

  1. Leo Catana (2005). The Concept of Contraction in Giordano Bruno's Philosophy. Ashgate Pub.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0754652618. "When Bruno states in De la causa that matter provides the extension of particulars, he follows Averroes." 
  2. Bouvet, Molière; avec une notice sur le théâtre au XVIIe siècle, une biographie chronologique de Molière, une étude générale de son oeuvre, une analyse méthodique du "Malade", des notes, des questions par Alphonse (1973). Le malade imaginaire; L'amour médecin. Paris: Bordas. பக். 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-04-006776-2. 
  3. Gatti, Hilary. Giordano Bruno and Renaissance Science: Broken Lives and Organizational Power. Cornell University Press, 2002, 1, ISBN 0-801-48785-4
  4. Birx, H. James. "Giordano Bruno" பரணிடப்பட்டது 2019-05-16 at the வந்தவழி இயந்திரம் The Harbinger, Mobile, AL, 11 November 1997. "புருனோ தனது மதச்சார்பற்ற நிலைப்பாடு மற்றும் பிரபஞ்சக் கண்ணோட்டத்திற்காக எரிக்கப்பட்டார்."
  5. Frances Yates, Giordano Bruno and the Hermetic Tradition, Routledge and Kegan Paul, 1964, p. 450
  6. Michael J. Crowe, The Extraterrestrial Life Debate 1750–1900, Cambridge University Press, 1986, p. 10
  7. Adam Frank (2009). The Constant Fire: Beyond the Science vs. Religion Debate, University of California Press, p. 24.
  8. White, Michael (2002). The Pope and the Heretic: The True Story of Giordano Bruno, the Man who Dared to Defy the Roman Inquisition, p. 7. Perennial, New York.
  9. Shackelford, Joel (2009). "Myth 7 That Giordano Bruno was the first martyr of modern science". in Ronald Numbers. Galileo goes to jail and other myths about science and religion. Cambridge, MA: Harvard University Press. பக். 66. 
  10. Martínez, Alberto A. (2018). Burned Alive: Giordano Bruno, Galileo and the Inquisition. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1780238968. https://press.uchicago.edu/ucp/books/book/distributed/B/bo28433424.html. 
  11. Gatti, Hilary (2002). Giordano Bruno and Renaissance Science: Broken Lives and Organizational Power. Ithaca, NY: Cornell University Press. பக். 18–19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0801487859. https://books.google.com/books?id=9cYumhwTQP8C. பார்த்த நாள்: 21 March 2014. 
  12. Montano, Aniello (2007). Antonio Gargano. ed. Le deposizioni davanti al tribunale dell'Inquisizione. Napoli: La Città del Sole. பக். 71. 
  13. "Giordano Bruno". Encyclopædia Britannica. 
  14. The primary work on the relationship between Bruno and Hermeticism is Frances Yates, Giordano Bruno and The Hermetic Tradition, 1964; for an alternative assessment, placing more emphasis on the Kabbalah, and less on Hermeticism, see Karen Silvia De Leon-Jones, Giordano Bruno and the Kabbalah, Yale, 1997; for a return to emphasis on Bruno's role in the development of Science, and criticism of Yates' emphasis on magical and Hermetic themes, see Hillary Gatti (1999), Giordano Bruno and Renaissance Science, Cornell.
  15. Alessandro G. Farinella and Carole Preston, "Giordano Bruno: Neoplatonism and the Wheel of Memory in the 'De Umbris Idearum'", in Renaissance Quarterly, Vol. 55, No. 2, (Summer, 2002), pp. 596–624; Arielle Saiber, Giordano Bruno and the Geometry of Language, Ashgate, 2005

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
புரூணோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கியோர்டானோ_புரூணோ&oldid=3845224" இலிருந்து மீள்விக்கப்பட்டது