நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக பல சமயங்களில் நம்பப்படுகிறது.

மதங்களின் பார்வையில் தொகு

கிறித்தவம் தொகு

சில கிறித்தவர்கள் நரகம் என்பது பாவம் செய்பவர்கள் தண்டனை பெறும் துன்பமான இடமாக நம்புகின்றனர். மற்றும் சில கிறித்தவர்கள் கடவுளை காண மோட்சத்திற்கு செல்ல தனது பாவங்களை துன்பங்கள் மூலம் களையும் இடமாக நம்புகின்றனர். [1] நரகத்தை பற்றிய கோட்பாடு திருவிவிலியத்தின் புதிய ஏற்பாடு பகுதியில் விளக்கப்படுகிறது். திருவிவிலியத்தின் கடைசி புத்தகமாகிய திருவெளிப்பாடு நூலில் மறுஉலக வாழ்க்கைப் பற்றி விளக்கப்படுகிறது. அதிகாரம் 20 இறைவசனம் 10-ல் பின்பு அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள். என்றும், இறைவசனம் 15-ல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள். என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருப்பு ஏரியே நரகம். மேலும் ஆன்மா அழியாதது. தானியேல் இறைவாக்கினரின் நூல் அதிகாரம் 12 இறைவசனம் 13-ல் நீயோ தொடர்ந்து வாழ்வை முடி; நீ இறந்து அமைதி பெறுவாய்; முடிவு காலம் வந்தவுடன் உனக்குரிய பங்கைப் பெற்றுக் கொள்ள நீ எழுந்து வருவாய்" என்றார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தொகு

முடிவற்ற துன்பம் உள்ள இடமாக, தாங்கா தண்டனைகள் நிறைவேறும் இடமாக நரகம் கருதப்படுகிறது. கொதிக்கும் எண்ணெயில் போட்டு தாளிப்பது, கொடிய மிருகங்களை ஏவி விடுவது, உடல் உறுப்புகளை முண்டமாக்குவது, பசி, நோய் என எல்லா வகை துன்பங்களின் உச்ச இடமாக நரகம் கருதப்படுகிறது. இது தீய வழிகளில் சென்றவர்களுக்கு இறைவனால் வழங்கப்படும் தீர்ப்பு என்று நம்பப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரகம்&oldid=3518071" இருந்து மீள்விக்கப்பட்டது