ஜின்

தொன்மையான மாய உயிரினம்

ஜின் (Jinn, அரபு மொழி: جن‎) என்பது கண்ணுக்குத் தெரியாத மாயத்தன்மை கொண்ட உயிரினங்களாகும். இவை அரேபிய, இசுலாமிய இன மற்றும் மத வரலாற்றில் புராதன காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது என நம்பப்படுகிறது.[1]

ஜின்
ஈரானிய காவியம் ஷானமே வின் ஒளிரூட்டப்பட்ட கையெழுத்துப் பிரதி இல் காணப்படும் ஜின்களுக்கே பிரத்தியேகமாக உரிய குளம்புகளைக்கொண்டு கூட்டமாக நாயகன் Faramarzக்கு எதிராக போர் புரியும் காட்சி
குழுதொன்மையான மாய உயிரினம்

மனிதர்களைப் போலவே, ஜின்களும் அவர்களின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பானவர்களாவார்கள். அவர்கள் கடவுளின் வழிகாட்டுதலை ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைப் பொறுத்து இறை நம்பிக்கையாளர்களாகவோ (இசுலாமியர்) அல்லது இறை நம்பிக்கையற்றவர்களாகவோ (காஃபிர்) இருக்ககூடும்; ஜின்கள் பிறவியிலேயே தீயவர்களாகவோ அல்லது நல்லவர்களாகவோ இல்லை என்பதால், மற்ற (அரேபிய) மதங்களின் ஆவிகளை அங்கீகரித்து, இசுலாம் மதம் விரிவாக்கப்பட்ட போது இவைகளை ஏற்றுக்கொன்று அவற்றை இசுலாம் மதத்திற்கேற்ப மாற்றியமைக்க முடிந்தது. ஜின் ஒரு இயல்பான இசுலாமிய கருத்தோ நம்பிக்கையோ அல்ல; மாறாக அவை இசுலாத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட பேகன் மதத்தின் நம்பிக்கைகளை பிரதிநிதித்துவப்படுத்த பயன்படுகிறது.

பொதுவாக கண்ணுக்குத் தெரியாத மாய உருவம் கொண்டவை என்றாலும், ஜின்கள் மெல்லிய மற்றும் நுட்பமான உடல்களைக் கொண்டதாக இருக்கலாம் ( ad̲j̲sām ),மேலும் அவை விருப்பப்படி எந்த உருவத்திற்கும் மாறலாம். பெரும்பாலும் அவை பாம்பு வடிவத்திற்கு மாறவே விரும்புகின்றன, சமயங்களில் தேள், பல்லிகள் அல்லது மனிதர்களை போன்ற உருவத்திற்கும் மாறலாம். அது போக அவர்கள் மனிதர்களுடன் இணை சேர்ந்து சந்ததிகளை உருவாக்கலாம். மனிதர்களால் அவர்களுக்கு காயமோ, துன்பமோ ஏற்பட்டால் அதற்க்கு அவர்கள் வழக்கமாக பழிவாங்க முற்படுவார்கள் அதற்க்கு ஏதாவது மனிதர்களின் உடலில் ஆவியாக புகுந்து அந்த உடலை தன்வசப்படுத்தி வைத்து தன்னிஷ்டத்துக்கு இயக்குவார்கள். பேயோட்டுதல் மூலமாக கட்டாயப்படுத்தும் வரை அந்த உடலை விட்டு போக மறுப்பார்கள். ஆனால் ஜின்கள் பொதுவாக மனித விவகாரங்களில் தலையிடுவதில்லை, இசுலாத்திற்கு முந்தைய அரேபியாவில் வாழ்ந்த பழங்குடியினரில் ஒரு பிரிவினரான தங்கள் சொந்த வகையினருடன் வாழவே ஜின்கள் ஆசை படுவார்கள்.

தனியான ஜின்கள் மந்திரிக்கப்பட்ட கயிறுகள் அல்லது தாயத்துக்களில் காணப்படும். பாதுகாப்பு காரணங்களுக்காகவோ அல்லது மந்திர உதவி தேவைப்படும் போதோ ஒரு அரசரின் தலைமைக்கு கீழ் வேலை செய்ய அழைக்கப்படுவார்கள், மந்திரவாதிகள் மற்றும் சூனியக்காரர்களால் அனுப்பப்படும் கெட்ட ஜின்(கபிர் )களின் மந்திர தந்திர தாக்குதல்களில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள ஜின்களை நம்பும் பலர் தாயத்துக்களை அணிகின்றனர். கடவுள்(அல்லாஹ்) பெயரை தாயத்துகளில் அணிந்துகொள்பவரை ஜின்களால் புண்படுத்த முடியாது என்பது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கை. முற்காலத்தில் சில இசுலாம் அறிஞர்கள் சூனியம், மந்திரவாதம் பற்றி வெவ்வேறு விதமான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தனர், பாவம் செய்யாத ஆத்துமாக்கள் நல்ல ஜின்கள் என அறியப்படும் என ஒரு கருதுகோள் கொண்டிருந்தனர்.ஆனால் பெரும்பாலான சமகால இசுலாமிய அறிஞர்கள் ஜின்களைப் பற்றிய நம்பிக்கைகளை உருவ வழிபாட்டுடன் தொடர்புபடுத்துகிறார்கள்.

மேற்கோள்கள்

தொகு
  1. as-Samarqandi, Abu l-Lait. "Abu l-Lait as-Samarqandi's commentary on Abu Hanifa al-Fiqh al-absat: Introduction, text, and commentary". In Hans Daiber (ed.). Islamic Concept of Belief in the 4th/10th Century. p. 243. பன்னாட்டுத் தர தொடர் எண் 1340-5306. {{cite book}}: |journal= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜின்&oldid=3875490" இலிருந்து மீள்விக்கப்பட்டது