மெதடிசம் அல்லது மெதடிஸ்தம் (Methodism) என்பது கிறிஸ்தவ மதப்பிரிவான சீர்திருத்தத் திருச்சபைகளின் (protestant) ஒரு பிரிவினர் ஆவர். 18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் இம்மதப்பிரிவு தோன்றியது. முதன் முதலில் ஆங்கிலிக்கத் திருச்சபையைச் சேர்ந்த யோன் உவெசுலி என்ற மதகுருவானவர் மெதடிச மதக் கொள்கையைப் பரப்பினர். இதனால் இம்மதக் கொள்கை பொதுவாக உவெசுலிய மெதடிசம் எனவும் அழைக்கப்படுகிறது. ஜான் வெஸ்லி இம்மதத்தை ஆங்கிலிக்கத் திருச்சபையின் போட்டிக் குழுவாகவே இதனை உருவாக்கினார். மெதடிசத்தைப் பின்பற்றும் ஆங்கிலிக்கர்கள் மெதடிஸ்துகள் என அழைக்கப்படுகின்றனர்[1]. 18ம் நூற்றாண்டில் தோன்றிய மெதடிசத்தில் வேல்சிய மெதடிஸ்துகளும் உள்ளனர்[2].

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெதடிசம்&oldid=3576232" இலிருந்து மீள்விக்கப்பட்டது