தாமரை சூத்திரம்
தாமரை சூத்திரம் (Lotus Sutra) என்பது புகழ்பெற்ற ஒரு மகாயான புத்த மத சூத்திரம்.
புத்தர் தனது வாணாளின் நிறைவுக் காலத்தில் வழங்கிய இந்தச் சூத்திரம் நாகர்களால் எழுதப்பட்டுப் பாதுகாக்கப்பட்டதாக மகாயானம் நம்புகிறது. காசுமீரத்தில் நடந்த நான்காம் புத்த சமய மாநாட்டில் இம் மந்திரம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தர்மக்ஷர் (பொ.பி.286), குமாரஜீவி (பொ.பி.406), ஜனகுப்தா-தர்மகுப்தா (பொ.பி.601) ஆகியோர் தாமரை சூத்திரத்தை சமசுகிருதத்தில் இருந்து சீன மொழிக்கு மொழிபெயர்த்தனர்.