ஆங்காங்கில் பௌத்தம்

ஆங்காங்கில் வசிக்கும் மக்களிடம் பௌத்தம் ஒரு முக்கியமான மதமாகவும், அதன் பாரம்பரிய கலாச்சாரத்தில் பெரிதும் செல்வாக்கு வாய்ந்ததாகவும் உள்ளது.[1] நகரில் உள்ள  மிகவும் புகழ் வாய்ந்த பௌத்த கோயில்கள் மாணிக்க மலையில் (Diamond Hill) உள்ள சி லின் கன்னியாஸ்திரி மடம்  தாங் அரசமரபினரின் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. லாண்டாவ் தீவில் உள்ள போ லின் மடாலயம் அதன் வெளிப்புறத்தில் அமைந்துள்ள டயான் டான் புத்தர் வெண்கல சிலை அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களைக் கவர்ந்திழுப்பதாக உள்ளது. வார இறுதி விடுமுறை நாட்களில் இச்சிலையை பார்ப்பதற்காக வரும் பார்வையாளர்களின் எண்ணிக்ககை அதிகமாக உள்ளது.

முக்கிய அரங்குகள், பிக்குணிகளின் சி லின் கன்னிமடம்
பெரிய புத்தர், லாண்டாவ் தீவு.
ஆங்காங்கில் உள்ள ஒரு வச்சிரயான பௌத்தக் கோவில் உள்ள மாரிசி தெய்வ சிலை.

வரலாறு

தொகு

பௌத்த மதமானது தாங் வம்ச ஆட்சியின் காலகட்டத்தில் (619-907) புத்துயிர் பெற்றது எனலாம். இந்தக் காலகட்டத்தில் பல ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தை ஆதரித்தனர். பேரரசி உ சடியன் தன்னளவில் ஒரு ஆர்வமிக்க பௌத்தராகவே இருந்தார். ஆயினும்கூட, 842 முதல் 845 வரையான காலப்பகுதியில் சீன பௌத்தர்கள் தங்கள் முழு வரலாற்றிலும் சந்திக்காத மிகவும் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர். 40,000 கோயில்களும் மடாலயங்களும் மொத்தமாக அழிந்து போயின. தாங் அரச வம்சத்தின் பொருளாதார சரிவு மற்றும் ஒழுக்க சீர்குலைவிற்கு புத்தமதம் காரணமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டது.[2]

ஆங்காங்கில் உள்ள பெளத்த அமைப்புக்கள் மற்றும் கோயில்கள் நீண்ட காலமாக ஆங்காங்கின் சமூக நலம் மற்றும் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளது. ஆங்காங் பௌத்த சங்கமானது ஆங்காங்கில் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள், முதியோர் இல்லங்கள் அத்துடன் இளைஞர் மற்றும் குழந்தைகளுக்கான மையங்கள் ஆகியவற்றை நடத்தி வருகின்றது.[3][4]

முன்னாள் தலைமை நிர்வாகி துங் சீ ஹ்வா என்பவரின் தலைமையின் கீழான ஆங்காங் அரசு ஆங்காங்கில் இருந்த பௌத்தத்தின் செல்வாக்கை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. 1997-ஆம் ஆண்டில் புத்தரின் பிறந்த தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது. இந்த விடுமுறையின் காரணமாக இராணியின் பிறந்த தினத்திற்கான விடுமுறை இரத்து செய்யப்பட்டது. துங் தன்னளவிலும் ஒரு பௌத்தராக செயல்பட்டார். ஆங்காங் மற்றும் சீனாவில்  நடந்த பெரிய அளவிலான, பரவலாக அறியப்பட்ட புத்த நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

ஆங்காங்கில் பௌத்தம் பற்றய கல்வி ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகள் கடந்த பல பத்தாண்டுகளில்  தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. ஆங்காங் பல்கலைக்கழகமானது பௌத்தம் சார்ந்த ஆய்வுகளுக்கென ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.[5] ஆங்காங் சீன பல்கலைக்கழகமும் பௌத்தம் சார்ந்த மானிடவியலுக்கென ஒரு மையத்தைக் கொண்டுள்ளது.[6]

ஆங்காங்கில் உள்ள பௌத்த பள்ளிகள்

தொகு

ஆங்காங்கில் பெரும்பாலான பௌத்தவியல் பள்ளிகள் தேரவாத பௌத்தம், மகாயாண பௌத்தம் மற்றும் வச்சிரயான பௌத்தம் மற்றும் பல நாடுகளின் பின்னணி மற்றும் ஆதியைக் கொண்ட பௌத்த கலாச்சாரங்களுடன்  காணப்படுகின்றன.

திபெத்திய புத்த பள்ளிகள்

தொகு

ஆங்காங்கில் உள்ள பௌத்த நிறுவனங்களில்  திபெத்திய பாரம்பரியம் உள்ள வைர வழி பௌத்தமும் ஒன்றாகும். வைர வழி பௌத்தமானது, 17 ஆவது கர்மபா டிரின்லி தாயே டோர்சே என்ற ஆன்மீக குருவின் வழி வந்த லாமா ஓலே நைடால் என்பவரால் நிறுவப்பட்ட கர்ம காக்யு மரபு பௌத்த மையங்களுடன் தொடர்பைக் கொண்ட ஒன்றாகும். ஆங்காங்கில் உள்ள வைர வழி பௌத்த மையமானது புத்தரின் போதைனகள் மற்றும் தியான வழிகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வழங்கி வருகிறது.[7]

சப்பானிய பௌத்த பள்ளிகள்

தொகு

சர்வதேச சோகா காக்ககை என்ற அமைப்பானது ஆங்காங்கில் 50,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளது. ஆங்காங்கில் உள்ள உள்ளூர் சங்கமானது  சர்வதேச சோகா காக்கையின ஆங்காங் அமைப்பு (HKSGI) என அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது நிச்சிரன் பௌத்தக் கொள்கையின் அடிப்படையிலான அமைதி, கலாச்சாரம் மற்றும் கல்வியை ஊக்குவிக்கிறது.[8]

மேற்கோள்கள்

தொகு
  1. Hong Kong Government. 2010 Yearbook - Religion. Retrieved on 23-09-2012.
  2. "Buddhism - Hong Kong". marimari.com. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2017.
  3. "佛教青年協會". Bya.org.hk. பார்க்கப்பட்ட நாள் 2013-10-31.
  4. "香港佛教聯合會青少年中心". Hkbayouthcenter.org.hk. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-31.
  5. HKU.HK. "HKU.hk பரணிடப்பட்டது 2007-08-04 at the வந்தவழி இயந்திரம்." Centre of Buddhist Studies. Retrieved on 2008-03-06.
  6. Cuhk.edu.hk. "Cuhk.edu.hk." CUHK Sets up Centre for the Study of Humanistic Buddhism. Retrieved on 2008-03-06.
  7. "Diamond Way Buddhism". Hong Kong Diamond Way Buddhist centre. பார்க்கப்பட்ட நாள் 18 நவம்பர் 2017.
  8. "What is Soka Gakkai International of Hong Kong ?". HKSGI. பார்க்கப்பட்ட நாள் 2013-10-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்காங்கில்_பௌத்தம்&oldid=3704888" இலிருந்து மீள்விக்கப்பட்டது