சி லின் கன்னிமடம்
சி லின் கன்னிமடம் (Chi Lin Nunnery) என்பது ஹொங்கொங்கில் உள்ள மிகப் பெரிய பௌத்த கோயில் வளாகம் ஆகும். இந்த பௌத்த கோயில் வளாகம் ஹொங்கொங், கவுலூன் பகுதியில், வொங் டயி சின் மாவட்டத்தில், மாணிக்க மலை நகரில் அமைந்துள்ளது. இந்த பௌத்த கோயில் வளாகமும், பௌத்த பெண் துறவியருக்கான கன்னிமடம் 33,000 சதுர மீட்டர்களுக்கும் அதிகமான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. இந்த பௌத்த கோயிலில் பௌத்தத் தூபிகள் எதுவும் இல்லை. இக்கோயில் முழுதுமாக சீனப் பாரப்பரிய கட்டடக்கலை வடிவமைப்பில் கட்டப்பட்டதாகும். ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் உல்லாசப் பயணிகளும் இந்தக் கோயிலில் நிறைந்து காணப்படுவர். கோயிலின் உள்ளே "சக்யமுனி புத்தர் சிலை" ஒன்று உள்ளது. இச்சிலை தங்கம், களிமண், கற்பாறை போன்றவற்றின் கலப்பில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிலையை சிறப்பு நாட்களில் மட்டுமே பார்க்க முடியும். இருப்பினும் கோயில் வளாகம் காலை 7:00 மணி முதல் பின்னேரம் 7:00 மணிவரை திறந்திருக்கும்.