கவுலூன்
கவுலூன் (Kowloon) என்பது ஹொங்கொங்கின் பெருநகர நிலப்பரப்பைக் குறிக்கும் பெயராகும். இந்த பெருநகர நிலப்பரப்பிற்குள் கவுலூன் தீபகற்பம் மற்றும் புதிய கவுலூன் நகரபரப்புகளும் உள்ளடக்கமாகும். இந்த பெருநிலப்பரப்பின் எல்லைகளாக கிழக்கில் லெய் யூ மூன், மேற்கில் மெய் பூ சுன் ச்சுன் மற்றும் கல்லுடைப்பான் தீவும், வடக்கில் சிங்கப் பாறை, தெற்கில் விக்டோரியா துறைமுகம் போன்றவைகளும் உள்ளன. இப்பெருநிலப்பரப்பின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி 2,019,533 ஆகும். மக்கள் அடர்த்தி 43,033/km ஆகும். ஹொங்கொங் தீவின் கடலின் எதிரே வடப்பகுதியிலும், புதிய கட்டுப்பாட்டகத்தின் தெற்காகவும் அமைந்துள்ளது. இந்த தீபகற்ப நிலப்பரப்பு 47 கிலோ மீட்டர்களை கொண்டுள்ளது. ஹொங்கொங் மொத்த மக்கள் தொகையில் 48% வீதமான மக்கள் தொகையினர் இப்பெருநிலப்பரப்பிலேயே உள்ளனர்.
கவுலூன் | |
---|---|
![]() Location within ![]() | |
மக்கள்தொகை (2006) | |
• மொத்தம் | 2,019,533 |
• அடர்த்தி | 43,033/km2 (1,11,450/sq mi) |
நேர வலயம் | Hong Kong Time (ஒசநே+8) |



சட்ட சபை அலகுகள் தொகு
கவுலூன் பெருநகர நிலப்பரப்பு, புவியியல் ரீதியாக ஹொங்கொங்கின் இரண்டு சட்ட சபைகளை அலகுகளைக் கொண்டுள்ளது, அவைகளாவன:
- கவுலூன் கிழக்கு வொங் டயி சின் மற்றும் குவுன் டொங் நகரசபை அலகுகளை உள்ளடக்கியுள்ளது.
- கவுலூன் மேற்கு யவ் சிம் மொங், சம் சுயி போ மற்றும் கவுலூன் நகரம் அலகுகளை உள்ளடக்கியுள்ளது.
நிர்வாக அலகுகள் தொகு
இந்த கவுலூன் பெருநகர நிலப்பரப்புக்குள் ஐந்து மாவட்டங்கள் உள்ளடங்கியுள்ளன: