கவுலூன் நகர மாவட்டம்

ஆங்காங், கௌலூனில் உள்ள மாவட்டம்

கவுலூன் நகர மாவட்டம் (Kowloon City District) ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இது கவுலூன் நிலப்பரப்பில், கவுலூன் கிழக்கில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டில் கணிப்பின் படி 362,501 ஆகும். இந்த மாவட்டம் ஹொங்கொங்கில் மூன்றாவது அதிகம் படித்தவர்களைக் கொண்டதும் அதிக வருமான ஈட்டுவோரைக் கொண்டதுமான மாவட்டமாகும். மக்கள் அடர்த்தியைப் பொருத்தமட்டில் மக்கள் அடர்த்தி குறைந்த மாவட்டமாகும்.

கவுலூன் நகர மாவட்டம்
Kowloon City District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Ir. Wong Kwok-keung)
பரப்பளவு
 • மொத்தம்9.97 km2 (3.85 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,62,501
நேர வலயம்ஒசநே+8 (Hong Kong Time)
இணையதளம்கவுலூன் நகர மாவட்டம்

பிரதான நகரங்கள்

தொகு

இம்மாவட்டத்தில் உள்ள பிரதான நகரங்கள்:

வரலாறு

தொகு
 
கவுலூன் நகர மாவட்டத்தின் தோற்றம்

கவுலூன் நகர மாவட்டம் என்று அழைக்கப்படும் நிலப்பரப்பு முன்னால் கவுலூன் மதில் நகரம் என அழைக்கப்பட்ட நிலப்பரப்பாகும். தற்போது "கவுலூன் மதில் நகரம்" அழைக்கப்பட்ட இடம் "மதில் நகர் பூங்கா" என அழைக்கப்படுகிறது.

அத்துடன் இந்த கவுலூன் நகர மாவட்டத்தில் தான் முன்னால் பன்னாட்டு விமான நிலையம் இருந்தது. இந்த விமான நிலையம் 1998 யூலை 6 ஆம் திகதி முதல் செக் லொப் கொக் தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

அத்துடன் முன்னாள் கை டக் விமான நிலையம் இருந்த நிலப்பரப்பு கடலின் மத்தியிலேயே இருந்தது. இந்த நிலப்பரப்பை மீள்கட்டுமானம் செய்து ஒரு பாரிய கை டக் கப்பல் நிறுத்தகம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

பூங்காக்கள்

தொகு

இந்த மாவட்டத்திலும் சிறிய சிறிய பூங்காக்கள் நிறைய இருந்தாலும், காண்போர் கவரும் நிலப்பரப்பில் பெரிய பூங்காக்கள் இரண்டு உள்ளன.

பல்கலைக்கழகங்கள்

தொகு

இந்த மாவட்டத்தில் நான்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  ஒங்கொங்:விக்கிவாசல்

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவுலூன்_நகர_மாவட்டம்&oldid=3394518" இலிருந்து மீள்விக்கப்பட்டது