ஹொங் கொங் பல்கலைக்கழகம்

ஹாங்காங் பல்கலைக்கழகம் ஹாங்காங்கில் உள்ள பொதுத் துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது பொக்ஃபுலாம் நகரில் அமைந்துள்ளது. இது ஹாங்காங்கின் பழைமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று. [5]

ஹாங் காங் பல்கலைக்கழகம்
The University Of Hong Kong
குறிக்கோளுரைSapientia et Virtus (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
அறிவும் கற்பும்
Wisdom and Virtue
உருவாக்கம்30 மார்ச்சு 1911 (1911-03-30)
தலைவர்லியோங் சிஹங்மன்றத் தலைவர்
வேந்தர்லியுங் சுன்யிங்
தலைவர்பீட்டர் மதீசன்
துணைத் தலைவர்ஸ்டீவன் ஜே. கன்னன் Executive Vice-President (Administration and Finance)
Chow Shew-Ping Pro-Vice-Chancellor and Vice-President (University Relations)
Paul Tam Kwong Hang Pro-Vice-Chancellor and Vice-President (Research)
Amy Tsui Bik மே Pro-Vice-Chancellor and Vice-President (Teaching & Learning)
Provostரோலாண்டு டி. சின் உதவி துணை வேந்தர்
துணை வேந்தர்பீட்டர் மதீசன்
கல்வி பணியாளர்
6,094[1]
நிருவாகப் பணியாளர்
3,647[1]
மாணவர்கள்27,005[2]
பட்ட மாணவர்கள்15,227[2]
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்11,778[2]
அமைவிடம்
பொக்ஃபுலாம்
,
22°17′03″N 114°08′16″E / 22.28417°N 114.13778°E / 22.28417; 114.13778
வளாகம்நகர்ப்புற வளாகம்
53.1 எக்டேர்கள் (0.531 km2)[3]
NewspaperSapientia HKU (English); Undergrad HKUSU (Chinese)
நிறங்கள்     Dark Green[4]
நற்பேறு சின்னம்சிங்கம்
சேர்ப்புஉயர்கல்விக்கான தெற்காசிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, யுனிவர்சிடாஸ் 21, பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பசிபிக் ரிம் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, பல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்hku.hk

மாந்தவியல், சட்டம், அரசறிவியல், உயிரியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பாடங்களை கற்பிக்கின்றனர். எல்லா பாடப்பிரிவுகளையும் ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர்.

வளாகம் தொகு

 
கிழக்குப்புற வாயில்
 
மேற்குப்புற வாயில்

முதன்மை வளாகம் 160,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது ஹாங்காங் தீவில் அமைந்துள்ளது.

துறைகள் தொகு

இந்த பல்கலைக்கழகத்தில் பத்து பிரிவுகள் உள்ளன.[6] அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன. [7]


  • கட்டிடக்கலை
  • கட்டிடக்கலைத் துறை
நில வணிகம், கட்டுமானம்
  • நகர்ர்ப்புறத் திட்டமிடல், வடிவமைப்பு
  • நிலத்தோற்றவியல்


  • கலை
சீன மொழி
ஆங்கிலம்
மாந்தவியல்
    • இலக்கிய ஒப்பீடுகள்
    • கவின்கலை
    • வரலாறு
    • மொழியியல்
    • இசை
    • மெய்யியல்
  • நவீன மொழிகளும் பண்பாடும்
    • ஜப்பானிய மொழி
    • அமெரிக்கா தொடர்புடைய படிப்பு
    • ஐரோப்பா தொடர்புடைய படிப்பு

நூலகம் தொகு

இந்த பல்கலைக்கழகத்தின் நூலம், 1912-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. ஹாங்காங்கின் பழைமையான நூலகங்களில் இதுவும் ஒன்றூ. இங்கு 23 லட்சம் நூல்கள் உள்ளன. இவை தவிட, இணையவழியில் நூல்களையும், ஆய்வேடுகளையும் தேடும் வசதியும் உண்டு. முதன்மை நூலகத்தைத் தவிர, ஒவ்வொரு துறைக்கும் என மொத்தமாக ஆறு நூலகங்கள் உள்ளன.

மொழிக் கொள்கை தொகு

பல்கலைக்கழகத்தில் பாடங்களை ஆங்கிலத்தில் நடத்துகின்றனர். உள்ளூர் மாணவர்கள் ஆங்கிலத்தையும், சீன மொழியையும் கற்றிருக்க வேண்டும். சீன மொழியை தாய்மொழியாக கொள்ளாத மாணவர்களுக்கு வேறு பாடத்தை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது. [8]

மாணவர்கள் தொகு

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொள்ள வளர்ச்சி மையம் அமைத்துள்ளனர். இது மாணவர்களுக்கான கலந்தாய்வு, உடல்நலம் உள்ளிட்டவற்றை செய்து உதவும்.

  • உயர்கல்வி, வேலைவாய்ப்பு
  • தகவல் தொழில் நுட்ப சேவைகள்
  • விளையாட்டு, பொழுதுபோக்கு அம்சங்கள்
  • மருத்துவ வசதி
  • கலை அருங்காட்சியகம்

மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளும் உள்ளன. மொத்தமாக 20 கட்டிடங்கள் உள்ளன.

 
ஸ்டார் ஹால், பெரிய விடுதி

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://www.cpao.hku.hk/qstats/staff-profiles
  2. 2.0 2.1 2.2 http://www.cpao.hku.hk/qstats/student-profiles
  3. "HKU Quick Stats - Space".
  4. "HKU Centenary Signature" (PDF). Archived from the original (PDF) on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  5. "About HKU – History". The University of Hong Kong. பார்க்கப்பட்ட நாள் 16 July 2013.
  6. "The University of Hong Kong - Faculties".
  7. "HKU - Undergraduate Admissions". Archived from the original on 2013-06-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-25.
  8. "Language Provision and Support". The University of Hong Kong. Archived from the original on 2014-07-02. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகஸ்டு 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்_கொங்_பல்கலைக்கழகம்&oldid=3777993" இலிருந்து மீள்விக்கப்பட்டது