தசபூமிக சூத்திரம்

தசபூமிக சூத்திரம்(दशभूमिकसूत्र) என்பது வசுபந்துவால் எழுதப்பட்ட ஒரு முக்கியமான மகாயான பௌத்த சூத்திரம் ஆகும். இதை தசபூமிகசூத்திர-சாஸ்திரம் என்றும் தசபூமிகபாஸ்யம் எனவும் அழைப்பர். இந்நூலை போதிருசி என்பவரால் ஆறாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. தசபூமி என்பது ஒருவர் போதிசத்துவ நிலையை அடைவதற்காக கடக்க வேண்டிய பத்து பூமிகளை குறிக்கும். இந்த சூத்திரம் அந்த பத்து பூமிகளை விவரிக்கிறது.

இந்த சூத்திரத்தை மையமாக கொண்டு சீனாவில் ஒரு காலத்தில் தசபூமிக பிரிவு உருவானது. பின்னர் எழுந்த அவதாம்சக பிரிவு (சீனம்:ஹூவாயான்) அதை தன்வயப்படுத்தியது. பிறது தசபூமிக சூத்திரம் அவதாம்சக சூத்திரத்தின் 26ஆம் அதிகாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் 39வது அதிகாரத்தில் இதன் மாறுபட்ட வடிவத்தை போதிசத்துவர் சுதானரின் கடந்த பாதையைக் குறிப்பிடுகையில் காணலாம்.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசபூமிக_சூத்திரம்&oldid=3837290" இலிருந்து மீள்விக்கப்பட்டது