சுகவதி பௌத்தம்
சுகவதி பௌத்தம் என்பது மகாயான பௌத்தத்தின் ஒரு பெரும் பிரிவாகும். இப்பிரிவு தென் - கிழக்கு ஆசியவில் பரவலாக பின்பற்றப்படும் பௌத்த பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அமிதாப புத்தரை நோக்கிய ஒரு பக்தி சார்ந்த பௌத்த பிரிவாகும்.[1]
சுகவதி பௌத்தம் மகாயான பௌத்த பிரிவுகளான சீன பௌத்தம், மற்றும் ஷிங்கோன் பௌத்தத்தில் ஒரு துணைப்பிரிவாக உள்ளது. மேலும் ஜோடோ ஷு, ஜோடோ ஷின்ஷு போல இது ஒரு தனி பௌத்த பிரிவாகவும் உள்ளது.
சுகவதி பௌத்தம் அமிதாபரின் மீது கொள்ளும் பக்தியின் காரணமாக நிர்வாண நிலை அடையலாம் எனக்கூறுகிறது. அதாவது அமிதாபரின் கருணையால் அவருடைய உலகமான சுகவதியில் பிறக்கு அனைவருக்கும் நிர்வாணம் கிடைக்கும் என் இப்பிரிவினர் கருதுகின்றனர். சுகவதி பௌத்தம் என்பது ஜப்பானில் நிலப்பிரபுக்களின் காலத்தில் மிகவும் பரவலாக பின்றபற்றப்பட்டது. ஏனெனில், வேசிகள் போன்று
பொதுவான பார்வை
தொகுசுகவதி பௌத்தம் சுகவதி சூத்திரங்களை சார்ந்து உள்ளது. இந்த சூத்திரங்களை ஆன் ஷிகாவோ என்னும் துறவி கி.பி 148 ஆண்டில் சீன மொழியில் மொழி பெயர்த்தார். குஷன் துறவியான லோகக்சேமவும் சில முக்கியமான சூத்திரங்களை ஆன் ஷிகாவோக்கு பிறகு மொழி பெயர்த்தார். இந்த சூத்திர்ஙக்ள் அமிதாபர் குறித்து அவரது புத்த உலகான சுகவதியை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளது.
அமிதாப புத்தர் பல மகாயான சூத்திரஙகளில் குறிப்பிடப்பட்டாலும். விரிவான சுகவதிவியூக சூத்திரமே மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர், தன்னுடைய சீடர் ஆனந்தரிடம கூறுகிறார். முன்னொரு காலத்தில் தர்மகாரர் என்ற புத்த துறவி, அனைத்து உயிர்க்ளையும் கரையேற்ற வேண்டி பல்வேறு உறுதிமொழிகளை கொண்டார். பின்னர் தன்னுடைய அளவில்லாத நற்கர்மங்க்ளினால் போதிநிலையை அடைந்து தனக்கு என ஒரு புத்த உல்கத்தை படைத்தார். அதுவே சுகவதி என அழைக்கப்படுகிறது.
சுகவதி பௌத்தம் இந்திய பௌத்ததில் மிகச்சிறிய பங்கு வகித்தது. ஆனால் சீனத்தில் இது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. சீன முழுக்கவும் சுகவதி பௌத்தம் பரவியது. பல்வேறு பௌத்த துறவிகளால் இதன் கருத்துக்கள் செப்பனிடப்பட்டன. பிறகு இது ஜப்பானுக்கு பரவி அங்கே ஜோடோ ஷு என்ற தனிப்பிரிவாக நிலைபெற்றது.
இப்பிரிவின் நம்பிக்கையின் படி, அமிதாப புத்தர் தர்மத்தை தன்னுடைய புத்த உல்கமான சுகவதியில் உபதேசித்துக்கொண்டிருக்கிறார். எனவே சுகவதியில் பிறக்கும் அனைவரும் அமிதாப புத்தரிடமிருந்து நேரடியை தர்மத்தை அறிந்து கொள்கின்றனர். எனவே தான் சுகவதியில் பிறப்பது மிகப்பெரிய பேறாக கருதப்படுகிறது. அமிதாபரிடத்திலிருந்து தர்ம உபதேசனை அறிந்த பிறகு, போதிசத்துவர்களாக வெவ்வேறு உலகங்களுக்கு சென்று அவர்கள் மோட்சம் பெற உதவுகின்றனர்.
சுகவதி பௌத்த சித்தாந்த்த்தில், போதி நிலையை அமிதாபரின் உதவியில்லாமல் அடைவது மிகவும் கடினம். ஏனெனின் நாம் இருப்பது தர்மம் சீர்குலையும் காலம் இது. எனவே தியானத்தின் மூலம் மட்டுமே ஞானம் அடைவது மிகவும் கடினமான செயலாகும். ஆகவே அமிதாப புத்தரின் மீது பக்தி செலுத்துவதன் மூலம் மிகவும் எளிதாக போதி நிலையை அடைய இயலும்.
மத்திய கால கிழக்காசிய கலாசாரத்தில் இந்த நம்பிக்க விவசாயிகள் மற்றும் தூய்மையில்லாத தொழில்களை செய்பவர்களாக கருதப்பட்ட வேசிகள், வேடுவர்கள், மீனவர்க்ள் முதலியவர்களால் இது பரவலாக பின்பற்றப்பட்டது. மற்ற பௌத்த பிரிவுகளில் இல்லாத எளிமையினை சுகவதி பௌத்தம் வழங்கிற்று. அதாவது, அமிதாபரின் பெயரை உச்சரித்தாலே அவரது சுகவதியில் பிறக்கலாம் என்பது அந்த கருத்து. இதை நியான்ஃபோ என அழைக்கப்படுகிறது.இது இந்து மதத்தின் நாம ஜெப முறையுடன் ஒப்பு நோக்கத்தக்கது. சுகவதிவியூக சூத்திரத்தில், அமிதாபர் 48 உறுதுமொழிகள் பூண்டிருப்பதாக கூறப்படுகிறாது. தன் பெயரை 10 முறையேனும் உச்சரிப்பவருக்கு சுக்வதியில் மறுபிறப்பு அளிப்பதாக அமிதாபர் தன்னுடைய 18வது உறுதுமொழியில் கூறுகிறார். இந்த எளிமையே இந்த பிரிவை மிகவும் பிரபலமாக்கியது.
அமிதாயுர்-தியான சூத்திரத்தில் இன்னோரு முறையும் கூறப்பட்டுள்ளது. இந்த சூத்திரத்தில் கௌதம புத்தர் அரசி வைதேகியிடம் எவ்வாறு அமிதாபர் காட்சியளிப்பார் எனபதையும் அவரை நோக்கி எவ்வாறு தியானம் செய்வது என்பதை குறித்தும் விளக்குகிறார். இந்த முறையினை பௌத்த துறவிகள் பின்பற்றுகின்றனர்.
கிழக்கத்திய உலகம்
தொகுவஜ்ரயான பௌத்ததில், அமிதாப புத்தரின் சுகவதியை போல், அக்ஷோப்ய புத்தருக்கு ஒரு தனி உலகம் உள்ளது. அதை அபிரதி என அழைப்பர். இருந்தாலும் அமிதாபரின் சுகவதியைப் போல், அக்ஷோப்யரின் அபிரதி குறித்து மக்களிடத்தில் பரவலாக அறியப்படுவதில்லை.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகுமேலும் தகவகளுக்கு
தொகு- Eitel, Ernest J. Hand-Book of Chinese Buddhism, being a Sanskrit-Chinese Dictionary with Vocabularies of Buddhist Terms in Pali, Singhalese, Siamese, Burmese, Tibetan, Mongolian and Japanese (Second Edition). New Delhi, Madras: Asian Educational Services. 1992.
வெளி இணைப்புகள்
தொகு- ஜோடோ ஷு அதிகாரப்பூர்வ இணையதளம்
- அமிடா அறக்கட்டளை
- அமிதாப சூத்திரம் பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- அமிதாப புத்தரை குறிந்த ஒரு சிந்தனை
- அமிதாப கல்வி வலையம் பரணிடப்பட்டது 2021-04-11 at the வந்தவழி இயந்திரம்