இந்து மத கோட்பாட்டில் யமுனா

யமுனை இந்து மதத்தில் ஒரு புனித நதி மற்றும் கங்கை நதியின் முக்கிய துணை நதியாகும். இந்த நதி யமுனா என்ற இந்து தெய்வமாகவும் வணங்கப்படுகிறது. [1] யமுனா ஆரம்பகால நூல்களில் யமி என்றும், பிற்கால இலக்கியங்களில் காளிந்தி என்றும் அழைக்கப்படுகிறாள். இந்து மத நூல்களில், அவர் சூரிய கடவுள் மற்றும் சஞ்சனா என்ற மேக தெய்வத்தின் மகளாக குறிப்பிடப்படுகிறார். அவள் மரணத்தின் கடவுளான எமனின் இரட்டை சகோதரியாகவும், மற்றொரு முக்கியமான தெய்வமான கிருஷ்ணருக்கு உள்ள துணைவிகளில் (எண்மனையாட்டிகளில்) ஒருவராகவும் கருதப்படுகிறார். கிருஷ்ணாவின் ஆரம்பகால வாழ்க்கையில் ஒரு நதியாக யமுனை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்து மத சாஸ்திரங்களின்படி, யமுனை ஆற்றின் நீரில் குளிப்பது அல்லது குடிப்பது அவர்களின் பாவத்தை நீக்குகிறது.

யமுனை
எண்மனையாட்டி-இல் ஒருவர்
5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யமுனையின் சுடுமண் சிற்பம்
அதிபதியமுனை ஆற்றின் உருவம்
தேவநாகரிयमुना
சமசுகிருதம்யமுனா
வகைதேவி, இந்து நதி தெய்வங்கள்
இடம்சூர்யலோகம், யமுனோத்திரி
மந்திரம்ஓம் யமுனாய நம, யமுஸ்தகா
துணைகிருட்டிணன்
சகோதரன்/சகோதரியமன், சனி, தபதி, இரேவந்தா, அஸ்வினிகள் and வைவஸ்வதமனு
குழந்தைகள்ஸ்ருதன் உட்பட 10 குழந்தைகள்
விழாக்கள்யமுனா ஜெயந்தி, சூரிய சஷ்டி, பௌ-பீஜ்

உருவப்படம்

தொகு

குப்தர் காலத்திலிருந்தே, யமுனாவின் உருவச் சித்திரம், கங்கையுடன் (கங்கையின் தெய்வம்) இணைக்கப்பட்ட கோயில் கதவு அடைப்புககளில் காணப்படுகிறது. [1] அக்னி புராணம், யமுனாவை கருமை நிறத்தில், அவளுக்கான மலையில், ஒரு ஆமையின் மீது நின்று, தன் கையில் ஒரு தண்ணீர் பானையை வைத்திருப்பதாக விவரிக்கிறது. [2] மற்றுமொரு பண்டைய கால ஓவியத்தில் ஆற்றின் கரையில் நிற்கும் அழகான கன்னியாக வரையப்பட்டுள்ளார். [1]

குடும்பம் மற்றும் பெயர்கள்

தொகு

புராண இலக்கியங்களில், யமுனா சூரியக் கடவுளான சூரியனின் மகள் என்றும் (அவள் பிரம்மாவின் மகள் என்று சிலர் கூறினாலும்) மற்றும் அவரது மனைவி சரண்யு (பிற்கால இலக்கியத்தில் சஞ்சனா), மேகங்களின் தெய்வம் என்றும் எமன்,என்ற மரணத்தின் கடவுளின் இரட்டை சகோதரி என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. அவரது மற்ற சகோதரர்களில் முதல் மனிதரான வைவஸ்வத மனு, தெய்வீக மருத்துவர்கள் என்றழைக்கப்படும் அஷ்வினிஇரட்டையர்கள் [3] [1] மற்றும் சனி கிரகம் ( சனி) ஆகியவை அடங்கும். சூர்ய கடவுளின் மனதிற்கு விருப்பமான குழந்தை என்று வர்ணிக்கப்படுகிறார். சூர்யாவின் மகள் என கருதப்படுவதால், சூர்யதனயா, சூர்யஜா மற்றும் ரவிநந்தினி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.

மற்றொரு புராண கதை யமுனா என்ற அவளது பெயரின் காரணத்தை கீழ்கண்டவாறு விளக்குகிறது: மேக தெய்வமான சஞ்சனா தன் கணவனான சூரியனின் வெப்பத்தையும், அதன் வெளிச்சத்தையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடு இல்லாமல் அவனுடன் கூடலில் இருக்கும்போதே தன் கண்களை மூடிக்கொண்டதால், சூரிய தேவன் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார், மேலும் அவளது கட்டுப்பாடின்மை காரணமாக அவர்களுக்கு பிறக்கும் மகன் யமா ("கட்டுப்பாடு") என்று அழைக்கப்படுவார் என்று சாபமிட்டார். அதன் பின்பதாக பெரும்பாலும், சஞ்சனா தன் கண்களைத் திறந்து வைக்க தன்னால் இயன்றவரை முயன்றாள், இருப்பினும் முடியாமல், சூர்ய கடவுளை மீண்டும் கோபப்படுத்தினாள்.ஆனால் இம்முறை சஞ்சனா கண்களைத் திறக்க முயற்சித்ததால், அளுக்கு பிறக்கும் மகள் யமுனாவாக இருப்பாள் என்று கூறிய சூரிய தேவன், யமுனா ஒரு தெய்வமாக வணங்கப்பட வேண்டும் என்று ஆசீர்வதிக்கப்பட்டாள், இவ்வாறாக அவள் நினைவில் இன்னமும் இருக்கிறாள். [3]

 
கிருஷ்ணர் யமுனையில் வசிக்கும் காளியை தோற்கடித்தார்.

மரணம் மற்றும் இருளின் இறைவனான யமனுக்கு காலா என்று இன்னொரு  பெயரிடப்பட்டதைப் போல, அவரின் இரட்டையரான யமிக்கும் காலிந்திஎன்ற பெயர் வந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. [3] மற்றொரு கதைப்படி, அவள் காலிந்தி என்ற பெயரை அவளுடைய "பூமிக்குரிய" மூலமான கலிந்தா என்ற மலையிலிருந்து பெற்றதாகக் கூறுகிறது. [4] சில புராணக்கதைகள் யமுனாவின் இருளை பெரிதாக விளக்குகின்றன, அதனால் அவளுடைய பெயர் காலிந்தி எனப்படலாம். வாமன புராணம் முதலில் தெளிவான நீர் எப்படி கருப்பாக மாறியது என்பதை விவரிக்கிறது. தன் மனைவி சதியின் இறப்பால் மனமுடைந்த சிவன் அகிலம் முழுவதையும் சுற்றித் திரிந்தார். சதியைப் பற்றி எப்பொழுதாவது நினைத்துக் கொண்டிருந்த சிவபெருமான், சதியின் துக்கத்தையும் நினைவுகளையும் போக்க யமுனையில் குதித்து, அவளுடைய துக்கத்தாலும் நிறைவேறாத ஆசையாலும் அவளுடைய நீரை கருப்பாக மாற்றினார். [2] மற்றொரு புராணக்கதை கிருஷ்ணர் யமுனையில் கலியா என்ற பாம்பை தோற்கடித்து விரட்டியடித்ததாக விவரிக்கிறது. இருண்ட பாம்பு தண்ணீருக்குள் நுழைந்தபோது, நதி இருண்டது. [3]

யமன்-யமி இடையிலான உறவு

தொகு

ஓ'ஃப்ளாஹெர்டியின் கூற்றுப்படி, வேத நம்பிக்கைகளின் படி யமி யமாவின் இரட்டை சகோதரியாகக் கருதப்படுகிறார். [5] யமா மற்றும் யமி ஒரு தெய்வீக இணை படைப்பாளர் மற்றும் தெய்வங்கள். [6] யமா மரணத்தின் இறைவனாக சித்தரிக்கப்படுகையில், யமி வாழ்க்கையின் இறைவியாக கருதப்படுகிறார். [7]

இறந்த பின்னால் யமனுக்கு படைக்கும் பல்வேறு பானங்களைப் பற்றிய ஒரு பாடலில் யமியைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் பிராமண உரையான தைத்திரிய சம்ஹிதா, யமன் அக்னி (நெருப்பு) மற்றும் யமி என்பது பூமி என்று தொடர்பு படுத்தி கூறுகிறது. யமி பூமியுடனான ஒரு தொடர்பு என்று மேலும் விவரிக்கப்படுகிறார், அவள் வேதங்களில் யமனின் மற்றொரு கூட்டாளியும், கல்லறைகள் மற்றும் துக்கத்தின் தெய்வமான நிர்ரிதியுடனும் தொடர்புபடுத்தி கூறப்படுகிறாள். [6] இருப்பினும் சம்ஹிதா நூல்களில் யமாவின் இரட்டை சகோதரியாக முக்கிய பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டார். ஷதபத பிராமணத்தில் உள்ள புருஷமேத சடங்கில், இரட்டைக் குழந்தைகளின் தாய் யமிக்கு பலியிடப்படுகிறார், அதே சமயம் தைத்திரீய பிராமணத்தில் இரட்டைக் குழந்தைகள் வழங்கப்படுகின்றன. [6]

முதல் இரண்டு மனிதர்களாக கருதப்படும், யமா மற்றும் யமி இடையேயான உரையாடல் பாடலில் (RV 10.10), யமி தனது இரட்டை சகோதரர் யமாவை தன்னுடன் உறவு கொள்ளச் செய்ய முயற்சிக்கிறார். த்வஷ்டர் அவர்களை வயிற்றில் ஜோடியாகப் படைத்தார் என்றும், த்யாஷ் மற்றும் பிருத்வி போன்றோரும் உடன்பிறந்தவர்களாக இருப்பினும் இத்தகைய உறவினை கொண்டுள்ளனர் உட்பட பல்வேறு வாதங்களை இதற்காக யமி முன்வைக்கிறார். அவர்களின் முன்னோர்களான "நீரில் உள்ள கந்தர்வனும், நீர் நிறைந்த கன்னியும்"ஆன மித்ரா - வருணன், இத்தகைய உறவில் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் அவர்கள் விதிகளில் கண்டிப்பானவர்கள் என்றும், அவர்களுக்கு எல்லா இடங்களிலும் ஒற்றர்கள் இருப்பதாகவும் பதிலுக்கு யமா வாதிடுகிறார். துதியின் முடிவில், யமி விரக்தியடைந்தார், ஆனால் யமா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். இருப்பினும், RV 10.13.4 இல், யமா எக்காரணம் கொண்டும் இந்த முறையில் சந்ததிகளை உருவாக்காமல் இருக்கும் முடிவைத் தேர்ந்தெடுத்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் யமியைப் பற்றி குறிப்பிடப்படவில்லை.    [8]

பிராமண உரையான மைத்ராயணி சம்ஹிதா கீழ்கண்டவாறு விவரிக்கிறது: முதல் மனிதரான யமனின் மரணத்தை நினைத்து யமி தன்னைத்தானே வருத்தினார். படைப்பின் தொடக்கத்தில் தொடர்ந்து பகல் நேரமாக இருந்ததால், யமனின் மரணத்திற்குப் பிறகு காலப்போக்கை யமியால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனாலேயே தேவர்கள் இரவை படைத்தது நாட்களை இரண்டாகப் பிரித்தனர். இதனால் நேரம் கடந்து செல்வதை யமி புரிந்துகொண்டு தனது துக்கத்திலிருந்து மெதுவாக மீண்டாள் [3] [6] ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியால் கொண்டாடப்படும் பாவ்-பீஜ் திருவிழாவுடன் ஜோடி இரட்டையர்களின் கருத்து, தெய்வீக உடன்பிறப்புகளை மதிக்கிறது. யமனையும் யமுனாவையும் மகிழ்விப்பதற்காக அவளது பிரசாதத்தை அனுபவித்து உண்ணும்படி சகோதரி தனது சகோதரனிடம் சொல்லும் பிரார்த்தனை. [3]

 
உதவியாளர்களுடன் யமுனா, 10 ஆம் நூற்றாண்டு, ரத்தன்கிரி கோவில்.

கிருஷ்ணன் -யமி இடையிலான உறவு

தொகு
 
கிருஷ்ணர் பிறந்தவுடன் வாசுதேவரால் யமுனையின் மீது சுமக்கப்பட்டது.

கிருஷ்ணரின் பிறப்புக் கதையில், கிருஷ்ணரின் தந்தை வாசுதேவர், குழந்தையான கிருஷ்ணரைப் பாதுகாப்பாகச் சுமந்துகொண்டு யமுனை ஆற்றைக் கடக்கும்போது, அவர் யமுனாவிடம் நதியைக் கடக்க ஒரு வழியைக் கேட்டார், அதன்படி அவளும் ஒரு பாதையை உருவாக்கி பிற்கால வாழ்க்கையில் அவள் திருமணம் செய்து கொள்ளும் கிருஷ்ணனை முதல் முறையாக பார்த்துக்கொண்டாள். [9] யமுனா ஆற்றின் ஆழத்தில் குழந்தை கிருஷ்ணனின் கால்களைத் தொட்டு விளையாட விரும்பினாள், அதன் விளைவாக நதி மிகவும் அமைதியானது. வாசுதேவரும் ஆற்றில் எளிதாக கடந்து சென்றார்.

கிருஷ்ணர் தனது இளமைக் காலத்தின் பெரும்பகுதியை யமுனைக் கரையில் உள்ள விருந்தாவனத்தில் கழித்தார், புல்லாங்குழல் வாசித்து, தனது காதலியான ராதை மற்றும் கோபிகைகளுடன் கரையில் விளையாடினார். [3] அப்போதும் யமுனாவில் கிருஷ்ணரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாகவத புராணம் பின்வருமாறு விவரிக்கிறது: ஒருமுறை, இளமையான கிருஷ்ணர் தனது உறவினர்களான ஐந்து பாண்டவ சகோதரர்களுடன் அவர்களின் மனைவியான திரௌபதி மற்றும் அவர்களின் தாய் குந்தியுடன் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள அவர்களின் தலைநகரான இந்திரபிரஸ்தத்திற்கு (இன்றைய டெல்லி) சென்றார். மூத்த பாண்டவர் யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் இரண்டு நாட்கள் தங்கும்படி கேட்டுக்கொள்கிறார். ஒரு நாள், கிருஷ்ணனும் பாண்டவர்களில் நடுவனானஅர்ஜுனனும் காட்டிற்கு வேட்டையாடச் செல்கிறார்கள். அவர்களின் வேட்டையின் போது, அர்ஜுனன் சோர்வாக இருந்தான். சோர்வை அகற்றும் பொருட்டு அவரும் கிருஷ்ணரும் யமுனைக்குச் சென்று குளித்து, அங்குள்ள தெளிந்த தண்ணீரைக் குடித்தனர். அங்கே ஒரு அழகான பெண் ஆற்றங்கரையில் உலா வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த கிருஷ்ணன், அவள் யார் என்று தெரிந்துகொள்ள விரும்பி அர்ஜுனனை சென்று அவளைச் சந்திக்கச் சொன்னான். அர்ஜுனன் அவளிடம் கேட்டபோது, அந்தப் பெண் தான் சூரியனின் மகள் காலிந்தி என்றும், விஷ்ணுவைக் கணவனாகக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் துறவு செய்வதாகவும், ஆற்றங்கரையில் தந்தையால் கட்டப்பட்ட வீட்டில் தான் வசிப்பதாகவும் அவள் விஷ்ணுவின் அவதாரத்தைக் கண்டுபிடிக்கும் வரை அங்கேயே இருப்பேன் என்றும் கூறினாள். அர்ஜுனன் காலிந்தியைப் பற்றிய செய்தியை கிருஷ்ணரிடம் தெரிவிக்கிறார், அவர் உடனடியாக அந்த அழகான பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். பிறகு காலிந்தியுடன் தேரில் இந்திரபிரஸ்தம் சென்று யுதிஷ்டிரனை சந்தித்தனர். அங்கு சில நாட்கள் தங்கிய பிறகு, கிருஷ்ணனும் காலிந்தியும் தங்கள் பரிவாரங்களுடன் அவரது தலைநகரான துவாரகாவுக்குத் திரும்பி, முறைப்படி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டனர். [9] [10] [11] பாகவத புராணத்தின் படி, அவளுக்கு ஷ்ருதா, கவி, வர்சா, விர, சுபாஹு, பத்ரா, சாந்தி, தர்சா, பூர்ணமாசா கடைசியாக, சோமகா என்று பத்து மகன்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. [12] அவளுக்கு ஷ்ருதா என்ற மூத்த மகனை பின்பற்றி பல மகன்கள் இருந்ததாக விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. ஆனால் எண்ணிக்கைகள் குறிப்பிடப்படவில்லை

பாகவத புராணமும் இருவருக்கும் இடையிலான கதையை பின்வருமாறு கூறுகிறது: கிருஷ்ணரின் மூத்த சகோதரர் பலராமர் யமுனைக் கரையில் உள்ள அம்பதியில் சில மாதங்கள் தங்கியிருந்தார். ஒருமுறை, அவர் ஆற்றங்கரையில் கோபியர்களுடன் உல்லாசமாக இருந்தார், அப்போது தண்ணீரில் விளையாட விரும்பினார். சூரிய வெப்பத்தை அனுபவித்த பலராமன் ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் எழுந்து சென்று ஆற்றில் குளிக்க சோம்பல்பட்டு, யமுனா நதியை தன் அருகில் வரும்படி அழைத்தார், ஆனால் பலராமன் பலமுறை அழைத்த போதிலும் கற்பு மிக்க யமுனா மறுத்துவிட்டார். கோபம் கொண்ட பலராமன், தன்னுடைய கலப்பையின் ஆயுதத்தால் ஆற்றை இழுத்து அதன் போக்கை மாற்றி நதி தேவியை காயப்படுத்தினான். திகிலடைந்த நதி, தேவியாக உருவெடுத்து பலராமனை வணங்கி மன்னிப்பு கேட்டாள். அமைதியடைந்த பலராமர், ஆற்றில் குளித்து விளையாடுவதற்காக காட்டில் வெள்ளம் வருமாறு கட்டளையிட்டார்,இம்முறை நதி அதற்கு இணங்கியது. [4] [3]

மத முக்கியத்துவம்

தொகு
 
ஆற்றின் மூலத்திற்கு அருகில் யமுனோத்ரியில் யமுனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்.

இந்து மதத்தின் புனித நதிகளில் ஒன்று யமுனை. இந்து மதத்தின் புனித நதியான கங்கைக்கு அடுத்தபடியாக யமுனை உள்ளது. [3] யமுனை , கங்கை மற்றும் புராண சரஸ்வதி நதி மூன்றும் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, இந்து மதத்தில் யாத்திரை செய்யப்படும் புனித இடங்களில் ஒன்றாகும். [4] யமுனை ஆற்றின் மூலமான யமுனோத்ரி, மதுரா மற்றும் படேஷ்வர் ஆகியவை அதன் ஆற்றங்கரையில் உள்ள மற்ற புனிதத் தலங்களில் அடங்கும். [1]

கங்கையின் ஏழு துணை நதிகளில் யமுனையும் ஒன்று என மகாபாரதம் குறிப்பிடுகிறது. அதன் நீரைக் குடிப்பது, ஆற்றில் குளிப்பது மூலம் பாவத்தைப் போக்கலாம் என்று விவரிக்கப்படுகிறது. ஜராசந்தாவின் தோற்கடிக்கப்பட்ட மந்திரி ஹம்சனால் யாகங்கள் (யாகங்கள்), துறவுகள் மற்றும் தற்கொலை போன்ற நிகழ்வுகளின் பின்னணியாக இந்த நதி காவியத்தில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது. [4]

யமுனையில் நீராடுவதன் மகத்துவத்தை வேறு பல புராணங்கள் கூறுகின்றன. பத்ம புராணம் இரண்டு சகோதரர்களின் கதையை விவரிக்கிறது, அவர்கள் இணைந்து சிற்றின்பம் மற்றும் காம வாழ்க்கையை வாழ்ந்து, நல்ல வழிகளை விட்டுவிட்டார்கள். அவர்கள் இறுதியாக கொள்ளையடிக்கப்பட்டு  வறுமையில் மூழ்கி காட்டில் உள்ள மிருகங்களால் கொல்லப்பட்டனர். இருவரும் தீர்ப்புக்காக யமாவின் நீதிமன்றத்தை அடைந்தனர். மூத்த சகோதரருக்கு நரகா (நரகம்) தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இளையவருக்கு ஸ்வர்கா (சொர்க்கம்) வழங்கப்பட்டது. இருவரும் ஒரே மாதிரியான பாவ வாழ்க்கை வாழ்ந்தும் ஏன் இந்த மாறுபாடு என ஆச்சரியமடைந்த இளைய சகோதரர், அதற்கான காரணத்தைக் கேட்டார்.யமுனைக் கரையில் உள்ள ஒரு முனிவரின் ஆசிரமத்தில் இளைய சகோதரர் வசித்ததாகவும்,இரண்டு மாதங்கள் தொடர்ந்து யமுனை என்னும் புனித நதியில் தொடர்ந்து நீராடுவதாகவும் யமா விளக்கினார். முதல் மாதம் நீராடியதால் அவரது அனைத்து பாவங்களும் நீங்கியதாகவும்,  இரண்டாவது மாதம் நீராடியதால் அவருக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்ததாகவும் கூறினார். [2]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Dalal 2010.
  2. 2.0 2.1 2.2 Mani p. 894
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 Bhattacharji 1998.
  4. 4.0 4.1 4.2 4.3 Mani p. 375
  5. O'Flaherty 1980.
  6. 6.0 6.1 6.2 6.3 Bhattacharji 1970.
  7. Conway 1994.
  8. Jamison, Stephanie; Brereton, Joel (2014). The Rigveda: The Earliest Religious Poetry of India. Oxford University Press. pp. 1381–1383, 1389–1390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199370184.
  9. 9.0 9.1 Veena Shekar. "The'Ashta Bharyas' of Krishna". Chitralakshana.com. Archived from the original on 2017-09-06. பார்க்கப்பட்ட நாள் 2023-03-01.
  10. "Five Ques married by Krishna". Krishnabook.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2013.
  11. Srimad Bhagavatam Canto 10 Chapter 58 பரணிடப்பட்டது 2013-08-26 at the வந்தவழி இயந்திரம். Vedabase.net. Retrieved on 2013-05-02.
  12. "The Genealogical Table of the Family of Krishna". Krsnabook.com. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.

நூல் பட்டியல்

தொகு